Monday, January 11, 2016

தேர்தல்பிரச்சாரப் பொருளாய் மாறும் கல்வி

(2012 ஜூலை காக்கையில் எழுதியது. இப்போதும் பொருத்தமாக இருப்பதால் மீண்டும் வைக்கிறேன்)

அமெரிக்கத் தேர்தல் பிரச்சாரத்தில் கல்வி பேசு பொருளாகியிருக்கிறது என்று சொன்னால் அதை நம்ப முடியவில்லை. நான்கும் மூன்றும் எட்டு என்பதை நம்புபவனாலும் இதை நம்ப முடியாதுதான். ஆனாலும் இது உண்மை.

கூப்பியகரங்களோடும் தேக்கிய புன்னகையோடும்வாக்குப் போகும் ஒபாமாவை சட்டையைப் பிடித்து உலுக்காத குறையாக மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

“உலகில் ராணுவத்திற்காக அதிகம் செலவு செய்யும் முதல் பத்து நாடுகளின் மொத்தச் செலவைக் காட்டிலும் அமெரிக்காவின் ராணுவ செலவு அதிகமாக்கும்” என்று பெருமை பேசித் திரிந்த ஒபாமா கல்வி குறித்த மக்களின் கேள்விகளுக்கு முன்னால் பதில் சொல்ல முடியாமல் கூனிக் குறுகி நிற்கிறார்.

மத்தியதர வர்க்கத்து அமெரிக்க குழந்தைகளுக்கே கல்வி கனவாய்ப் போயிருக்கிற நிலையில் உழைக்கும் ஏழை அமெரிக்கக் குழந்தைகளின் கனவிலிருந்தும் கல்வி களவாடப் பட்டுவிட்ட சூழலில் எந்த முகத்தோடு வாக்கு கேட்டு வருகிறீர்கள்? என்ற மக்களின் கொதிநிலைக்கு முன்னால் கதிகலங்கித்தான் நிற்கிறார் ஒபாமா.

அமெரிக்க அதிபருக்கான இரண்டு வேட்பாளர்களுக்குமே கல்வி குறித்த மக்களின் எழுச்சி பெரும் சவாலைத் தந்திருப்பது, உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. ஈரான், எகிப்து, எத்தியோபியா பற்றிய உங்கள் கருத்தோட்டமெல்லாம் எங்களுக்கு வேண்டாம். அமெரிக்க கல்வி குறித்த உங்களின் தொலைநோக்குத் திட்டம் என்ன என்று சொல்லுங்கள் என்று பெருங்குரலெடுத்து மக்கள் அவரது முகத்துக்கு நேராய் கேட்கிற கேள்விக்கு இருவரிடமும் பதில் இல்லை.

அமெரிக்கப் பள்ளிகளில் இருந்து மணிக்கு 857 மாணவர்கள் வெளியேறுகிறார்கள். 2007 இல் எடுக்கப் பட்ட ஒரு புள்ளி விவரப்படி வருட்த்திற்கு 12 லட்சம் பள்ளிக் குழந்தைகள் இடை நின்று போகிறார்கள். இதன் விளைவாய் ஏற்பட்டுள்ள மக்களின் எழுச்சியைப் பார்த்து செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கிறது ஒபாமா அரசு.

இதுவரை நேரடியாய் அரசியலில் ஈடுபட்டுப் பழக்கப் பட்டிராத கல்லூரி வாரியமும், நேஷனல் மால் என்ற அமைப்பும் தெருவில் இறங்கி இடைநிற்றலுக்கு எதிராய்போராட்த் துவங்கியுள்ளன. கல்வி குறித்த வாக்குறுதிகளே அமெரிக்க அதிபர் தேர்தலைத் தீர்மானிக்கும் நிலையை அமெரிக்க மக்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

இதில் நாம் கொண்டாட என்ன இருக்கிறது? என்று கேட்கலாம். இருக்கிறது, இன்று அமெரிக்காவில் வீசும் புயல் நாளையோ நாளை மறுநாளோ இந்தியாவை வந்தடையாதா?


உலகத்தில் எந்த மண்ணில் தேர்தல் நடந்தாலும் இனி கல்வி அங்கு பேசுபொருளாய் மாறும் என்ற நம்பிக்கையை அமெரிக்க மக்களின் கல்வி முழக்கம் ஏற்படுத்தி இருக்கிறது.

2 comments:

  1. அமெரிக்காவிலுமா இந்த நிலை? ஆச்சர்யமாக இருக்கிறது .

    ReplyDelete
    Replies
    1. அங்கு நம்மைவிட மோசம் தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...