கீர்த்தனா அவங்க அம்மா மாதிரி. பயங்கற பக்தி. தூங்கும்போது மண்டியிட்டு ஜெபம் செய்து, காலண்டரில் இருக்கும் ஏசு படத்துக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, அறையின் எல்லாத் திக்கும் திரும்பி காற்றிலே சிலுவைக் குறியிட்டுவிட்டுதான் தூங்குவாள்.
நேற்றும் அப்படித்தான் , வந்திருக்கும் தங்கை மகள் நிவேதியை தூக்கிக் கொண்டு ஏசு படத்தை வணங்கி முத்தமிட்டவுடன் நிவேதியிட யேசப்பா சொல்லு என்றாள்.
எங்கள் கிராமத்தில் இப்போது தொடர்ச்சியாக சபரிமலை போய்க் கொண்டே இருப்பார்கள். தினமும் ஒரு பேச் போவார்கள். அனுப்பி வைக்க பஜனைக்கு அம்மாவோடு இவளும் போய் வருவதால் எந்த சாமிப் படத்தைப் பார்த்தாலும் அய்யப்பூ எங்கிறாள்.
யேசப்பா சொல்லு என்று கீர்த்தி சொன்னதும் குட்டி “அய்யப்பூ” என்றாள்.
“ இது அய்யப்பா இல்லடீ ”சேசப்பா” சொல்லு”
“ அய்யப்பூ “
“ இல்லடீ, சேசப்பா சொல்லு”
“ அய்யப்பூ”
“ சேசப்பா “
“ அய்யப்பூ “
சலித்துப் போன கீர்த்தி சொன்னாள்,
“ அய்யப்பா “
வம்புக்கென்று இப்போது நிவேதி சொன்னாள்,
“ சேசப்பூ “
கடகடவென்று விட்டு சிரிக்கவே கேட்டேன்,
“ ஏம்பா சிரிக்கிற? ”
“ரெண்டும் ஒன்னுதானே. அதனாலதான்... “
சிரித்தேன்.
“ நீங்க ஏன் சிரிக்கிறீங்க ? “
“ ரெண்டுலயும் ஒன்னும் இல்லதானே. அதனாலதான்... “
உண்மைதானே தோழர்
ReplyDeleteரெண்டுலயும் ஒன்னும் இல்லதான்
நன்றி
தம 2
மிக்க நன்றிங்க தோழர்
Delete