நாம் செய்ய நினைத்த ஒன்றை நம்மால் செய்யாமல் போய் அதை நம் பிரியத்திற்குரிய தோழன் ஒருவன் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தால் எத்தகைய மகிழ்ச்சி ஏற்படும் என்பதை நேற்று (10.01.2016) அன்று உணர முடிந்தது.
தோழர் தமிழ் மாறனை இப்போதெல்லாம் அடிக்கடி சந்திக்க முடிவதில்லை. தினந்தோறும் சந்திந்துக் கொண்டிருந்த பொழுதுகளில் பெரம்பலூரில் தொடர்ந்து மாதா மாதம் இலக்கியக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்ற எனது கனவை அவரோடு பகிர்ந்து கொண்டே இருப்பேன். என்னால் அதை செய்ய இயலாமலே போனது.
ஆனால் மாறன்’பதியம்’ என்ற ஒரு இலக்கிய அமைப்பை ஏற்படுத்தி மாதா மாதம் கூட்டங்களை நடத்திக் கொண்டு வருகிறார்.
தற்போது தோழர் சாரங்கபாணி அவர்கள் மிகுதியாய் இதில் மாறனுக்கு உதவி செய்கிறார் என்கிற வகையில் நான் சாரங்கபாணி அவர்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டவனாகிறேன்.
நேற்றைய அமர்வில் வந்திருந்த நாற்பதிற்கும் சற்று அதிகமான எண்ணிக்கையிலான தோழர்களோடு உரையாற்றி வந்தேன்.
அவர்களது காதுகள் தாகத்தோடு இருப்பதை பார்க்க முடிந்தது.
நீர் மேலாண்மை குறித்தும் நன்னூல் குறித்தும், கல்வி குறித்தும், தொண்மை குறித்தும் இவர்களோடு பேச முடிகிறது.
விரைவில் ‘பதியம்’ குறித்து விரிவாய் எழுத வேண்டும்.
வாழ்த்துகள். நீர் மேலாண்மை பற்றி கூட்டாஞ்சோறு செந்தில்குமார் பதிவுகள் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteஇனிதான் படிக்க வேண்டும் அய்யா. காக்கையில் மிக நீண்ட இரண்டு கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
Delete1 http://www.eraaedwin.com/2016/01/blog-post_7.html
2 http://www.eraaedwin.com/2015/12/blog-post_97.html
நாம் செய்ய நினைத்த ஒன்றை நம்மால் செய்யாமல் போய் அதை நம் நண்பர்கள் செய்யும்போது கிடைக்கும் மன மகிழ்ச்சிக்கும் திருப்திக்கும் ஈடு இணையில்லை. அவ்வாறான சில நிகழ்வுகளை என் வாழ்விலும் சந்தித்துள்ளேன். நன்றி.
ReplyDeleteமிக்க நன்றிங்க அய்யா
Delete