நிறைய முறை அழைத்திருக்கிறார். நான்தான் போனதில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய பெரம்பலூர் புத்தகக் கண்காட்சி. சந்தியா பதிப்பக ஸ்டாலில் நின்று கொண்டிருக்கிறேன். வழக்கம்போல ஸ்டால்களை சுற்றிப் பார்க்க வருகிற மாவட்ட ஆட்சியர் தரேஷ் அன்று சந்தியா வருகிறார். சந்தியா வாசலில் எனக்கும் ஒரு கட்வுட் வைத்திருந்தார்கள்.
தரேஷ் என்னைப் பார்க்கிறார், கட் அவுட்டைப் பார்க்கிறார்.
’கடை உங்களதா?’
விட்டால் கடையை என் பெயருக்கு மாற்ரிவிடுவாரோ என்ற பயத்தில் சந்தியா சௌந்தரராஜன் உள் புகுந்து ‘ இல்லை அவர் ரைட்டர்’ என்கிறார்.
‘எங்க ஊருக்கு கண்காட்சி பார்ப்பதற்காக வந்தீங்களா?’
‘இல்லை. இது என் ஊர்’
இதற்குள் ‘இவனுக்கு அப்போது மனு என்று பேர்’ ஒரு பிரதியை தருகிறார் சௌந்தரராஜன். வாங்கி நான்கைந்து பக்கம் வாசிக்கிறார்.
‘எல்லாப் பத்திரிக்கையிலும் எழுதுவார், நல்ல பேச்சாளர்’ சௌந்திரராஜன் சொன்னதும் என்னோடு உரையாடத் தொடங்குகிறார். ஏறக் குறைய இருபது நிமிடங்கள்.
‘மணி இவர ஏன் எனக்கு முன்னமே அறிமுகப் படுத்தல?’
அவரது உதவியாளர் நெழிகிறார்.
சரி ஒருநாள் நீங்க பேசனும்.
இப்படித்தான் அறிமுகம்.
இடையில் ஒருமுறை நண்பர்களோடு அவரது அலுவலகம் போனபோது எழுந்து நின்று வரவேற்றார்.
எனக்கு மட்டும் அல்ல பெரம்பலூரில் உள்ள அனைவருக்கும் அவரைப் பிடிக்கும், குறிப்பாய் பள்ளிப் பிள்ளைகளுக்கு.
அரசு மாணவர் விடுதிகளை அப்படி நேசித்தார். பள்ளிக்கூடத்து குழந்தை யார் வேண்டுமானாலும் இவரோடு போனில் பேச முடியும்.
ஒன்று சொல்ல வேண்டும்,
we miss u tharesh
நல்ல மனிதரை அறிமுகம் செய்த பதிவு! நன்றி!
ReplyDeleteமிக்க நன்றிங்க தோழர்
Delete