Showing posts with label நான். Show all posts
Showing posts with label நான். Show all posts

Wednesday, January 14, 2026

”நலந்தானே ஸ்டாலின் சார்” - ஒரு இடதுசாரியின் கடிதங்கள்

 

கலைஞர் இறந்தபோது ஸ்டாலின் சார் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன்
தொடர்ந்து அவருக்கு முகநூல்வழியாக ஒரு பத்து பதினைந்து கடிதங்களை எழுதி இருக்கிறேன்
அதை தொகுத்து நூலாக்கு என்று முதலில் சொன்னவர் தோழர் Kumaresan Asak
அதன்பிறகு தோழர் R T Muthu அதைச் சொன்னார்
நிறைய நண்பர்கள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள்
ஆரம்பித்திருக்கிறேன்
சிறு நூல்
2019 தேர்தலின்போது “நான் ஏன் உங்களுக்கு வாக்களிக்கப் போவதில்லை” என்ற நூலை வெளியிட்டேன்
2021 தேர்தலின்போது திமுக தொகுத்த கட்டுரை தொகுப்பில் என்னுடைய ஒரு கட்டுரையும் இருந்தது
2026 தேர்தலுக்கு இந்த நூல்
”நலந்தானே
ஸ்டாலின் சார்”
“ஒரு இடதுசாரியின் கடிதங்கள்” என்று பெயர் வைக்கலாம் என்று உத்தேசம்

14.01.2026

Thursday, January 1, 2026

அவனோடு நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கிறேன்


 

இந்தப் படத்தை அனுப்பியிருக்கிறான் SFI மாவட்டச் செயலாளர் பிள்ளை ராமு

Al யில் அவனது குறும்பு

பெரம்பலூர் இடதிற்கான என் நம்பிக்கை அவன்

ஆசை ஆசையாக அவனோடு நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கிறேன்

வருவான்

Tuesday, December 30, 2025

வங்கத்தில் நமது கவிதை

 




தெரு தாண்டும் வரை
**************************
கைகளில்
சுமக்க
தீர்ப்பளித்தீர்
கோபம் வரும்
எங்களுக்கும்
எங்களுக்கு
கோபம் வரும் வேளை
எம்மெதிரே
நீங்களும் வரலாம்
கழட்ட வேண்டிய
தேவையும் இல்லை
கைகளில்தான்
இருக்குக்கிறது

#வங்கத்தில் தோழர் கொல்கத்தா கிருஷ்ணமூர்த்தி

Tuesday, July 1, 2025

அதிகாலை ஆசிர்வாதம்

  அதிகாலை நான்கு மணி

TBS பேருந்து
அரியலூரிலிருந்து பெரம்பலூருக்கு
22 ரூபாய்
நூறு ரூபாய்த்தாளை வைத்திருக்கிறேன்
பயமாகத்தான் இருக்கிறது
"பரவால்லத் தாங்க சார்"
நிமிர்த்து பார்க்கிறேன்
புன்னகைக்கிறார்
அதிகாலை ஆசிர்வாதம்

Sunday, May 4, 2025

நான் உங்க பேன்

 04.05.2025 முதல் ஒரு வாரத்திற்கு கீர்த்தனாவிற்கு MD நீட் கோச்சிங்

கன்னியா குமரியில்
நேற்றிரவு பேருந்து ஏற்றிவிட பெரம்பலூர் நால்ரோட்டில்
10.50
சென்னையில் இருந்து வந்த பேருந்தில் இருந்து ஒரு குழந்தை இறங்குகிறாள்
கீர்த்தனா ஏறுகிறாள்
கிளம்ப எத்தனிக்கிறேன்
அப்பா, தம்பி வர வரைக்கும் இருங்க. பயமாருக்கு
நிற்கிறேன்
அரட்டை, அரட்டை,
அப்படி ஒரு அரட்டை
தம்பி வந்ததும்
படக்கென ஏறி போய்விட்டாள்
சொல்லக்கூட இல்லை
பொக்கென்றாகிவிட்டது
வீட்டிற்கு வந்ததும் அவள் சொல்லாமல் போனதே வருத்தமாக இருந்தது
போன்
எட்வின் அப்பா, பத்திரமா வந்துட்டேன்
எட்வினா? எப்படித் தெரியும்?
நம்பர் எப்படி?
உலகத்துக்கே தெரியறமாதிரிதான்
முகநூலில் வச்சிருக்கீங்களே
நான் உங்க பேன்
அய்ய்யோ

Friday, January 26, 2024

எத்தனை முறை யெச்சூரி திருச்சி வந்திருப்பார்

காலையில் இருந்து அன்ன ஆகாரம் ஏதும் இல்லை

எழுந்தால்தானே
முடியவில்லை
அதிகாலை விக்டோரியாவை பேர்ந்து ஏற்றிவிட்டு வந்து படுத்தால்
ஜிகு ஜிகுவென்று ஜுரம்
சளியால் தொண்டையில் சன்னமாக சிக்கல்
திருச்சி மாவட்ட CPM செயலாளர் ஜெயசீலன் அழைத்து
இன்று நடைபெறும் விசிக மாநாட்டில் தோழர் யெச்சூரி உரையை மொழிபெயர்க்க வந்துடுமாறு அழைக்கிறார்
நிலைமையை சொல்கிறேன்
எத்தனை முறை யெச்சூரி திருச்சி வந்திருப்பார்
உடம்பும் தொண்டையும் சரியில்லாதபோதுதான் அழைப்பு வர வேண்டுமா?
இப்படி ஒரு வாய்ப்பு வரும்போதுதான் உடம்பு பழுதாக வேண்டுமா?
என்னமோ போங்க

Wednesday, January 17, 2024

ஒரு டீக்கெல்லாம் ரெண்டுதரம் எல்லாம் வாழ்த்த முடியாது

 காந்திமதி அக்கா விஷயமாக நானும் கலையும் தோழர் அன்பரசுவிடம் பேசிவிட்டுக் கிளம்பும்போது Kalai Mani யிடம்

”டீ சாப்பிடலாமா”
அப்படி ஒரு முறைப்பு
அது என்னமோ தெரியல டீ கேட்டாக்க எல்லாப் புள்ளைங்களுமே இப்படித்தான் மொறைக்கிறாங்க
ஆனாலும் உடனே சிரித்தபடி வாங்கித் தருகிறாள்
இந்த ஈர மனசுதான் கலை. நூறு வருஷம் நீ இப்படியே நோய் நொடி இல்லாம இரு கலை
டீ குடித்து முடித்ததும் இருவரும் கிளம்பறோம்
ஒரு அம்மாவும் பிள்ளையும் வண்டியில் இருந்து இறங்குகிறார்கள்
நான் குழந்தையைப் பார்த்து சிரித்தபடியே ஹாய் சொல்லுகிறேன்
குழந்தை கண்டுகொள்ளவே இல்லை
அந்தப் பிள்ளையின் அம்மா அந்தக் குழந்தையை அழைத்து
யார் சிரிச்சாலும் சிரிக்கனும் சொல்லி இருக்கேன்ல தாத்தாட்ட ஹாய் சொல்லு என்று சொல்லவே ஹாய் சொன்னான்
வரம்
இது ஒன்னு மட்டும் லூசு இல்ல என்று கலை நினைத்திருக்கக் கூடும்
லூசுங்களாலதான் உலகம் இயங்குது தாயே
நீ நல்லா இரு தாயே
ஒரு டீக்கெல்லாம் ரெண்டுதரம் எல்லாம் வாழ்த்த முடியாது
இது எனக்கு ஒரு ஹாய் வாங்கிக் கொடுத்த அந்தப் பொண்ணுக்கு
All reaction

Sunday, December 31, 2023

என்ன ஆச்சுடா எந்திரி லூசண்ணா

இந்த ஆண்டில் நான் எதிர்பாராமல் நிகழ்ந்த மூன்று

01
”இல்லை,
வரமாட்டான்
அவன் வரவே மாட்டான்”
என்று தருமி புலம்புவதைப்போல
இனி வரமாட்டன்தான் போல என்கிற நிலையில் அவனது அத்தனைக் கிலோவும் அன்பாக ஒரு இரவு வீடு வந்து என்னோடு தங்கினான் விஷ்ணுபுரம் சரவணன்

02
மே 31
நான் ஓய்வு பெறுகிறேன்
பள்ளியில் இருந்து வீடு வந்தால் ஒரு புத்தக பார்சல்
மூன்று கனமான புத்தகங்கள்
பாரதி புத்தகாலயத்தில் இருந்து
நான் ஆர்டர் போடவில்லை
தோழர் Mohammed Sirajudeen அவர்களை அழைக்கிறேன்
வணக்கம் தோழர். வாழ்த்துகள். ஓய்வு சிறக்கட்டும். அந்தப் பார்சல் எங்க அன்பு தோழர் என்கிறார்

03
பணி ஓய்வு அரட்டையில் திடீரென மருத்துவர் Bhuvaneshwari Devarajan
அழைக்க மறந்து போயிருந்தேன்
“என்னை எதிர்பார்க்கலதான” என்ற அவர்களது குரல்

சோரும்போதெல்லாம் என்ன ஆச்சுடா எந்திரி லூசண்ணா என்று என்னை உசுப்பிக் கொண்டே இருக்கிறது
அனவரது கரங்களையும் பற்றிக் கொள்கிறேன்

குரலைக் கொடுத்தது கீர்த்தனா என்றால்

 என்னளவில் நினைத்துப் பார்க்கிறேன்

அவமானங்களையும் வலியையும் மட்டும் அல்ல
மகிழ்ச்சியையும் சேர்த்துதான் எனக்குக் கொடுத்திருக்கிறது 2023
மே இறுதியோடு என் பள்ளி எனக்கு விடை கொடுத்து அனுப்பியது
எப்படி கடந்து வருவேன் என்ற பயம் இருந்தது உண்மைதான்
ஆனால் கடந்து வந்திருக்கிறேன்
எப்படி என்று புரியாமல் குழம்பிய என்னை கீர்த்தி தெளிவுபடுத்தினாள் இன்று
”அது ஒன்னும் இல்லப்பா
நல்லதோ கெட்டதோ
வாத்தியாரா, தலைமை ஆசிரியரா கிடைத்த எதையும் உன்னோடு நீ ஒருபோதும் சுமந்ததில்லை
எட்வினுக்கு கிடைத்ததை மட்டுமே சுமந்திருக்காப்பா
எங்களை வளர்த்ததும் எங்களுக்கு கொடுத்ததும் எட்வின்தானே தவிர ஹெட்மாஸ்டர் இல்ல
அதுதான் உன்னை ஒன்னும் பாதிக்கல”
மகிழ்ச்சிதான்
பணி ஓய்வை ஒரு அரட்டை விழாவாக்கினார்கள் கணேஷும் கலையும்
அனைத்தையும், காசு உள்ளிட்டு அவர்களே செய்தார்கள்
கிஷோரோடே துபாய் சென்றிருக்க வேண்டிய ஷீனா ஆகஸ்டில்தான் சென்றாள்
கீர்த்தி BHMS முடித்திருக்கிறாள்
இடையில் குரல் போனபோது
அநேகமாக அப்படித்தான் என்று மருத்துவர் சொன்னபோது உடனிருந்த கணேஷ் அழவில்லை
ஆனால் அப்படித்தான்
கீர்த்தனா கொடுத்த மருந்து குரலை மீட்டது
இளமதியின் புத்தகம் என்பது நான்கு வருடக் கனவு
வந்தது
குரலைக் கொடுத்தது கீர்த்தனா என்றால்
காதைக் கொடுத்தது கலை
இந்த ஆண்டு மட்டும் சுதா எனக்களித்த புத்தகங்களின் விலை பத்தாயிரத்தைத் தொடும்
எதுக்குப்பா என்றால்
படிங்க தோழர். நான் படிச்சா எனக்கு. நீங்க படிச்சா நிறைய பேருக்கு என்கிறார்
எங்கள் மாவட்டச் செயலாளர் ரமேஷ் இந்த ஆண்டு நெடுகிலும் என்னோடு இருந்திருக்கிறார்
அனைவரையும் இறுகப் பற்றிக் கொள்கிறேன்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...