Sunday, December 31, 2023

குரலைக் கொடுத்தது கீர்த்தனா என்றால்

 

என்னளவில் நினைத்துப் பார்க்கிறேன்
அவமானங்களையும் வலியையும் மட்டும் அல்ல
மகிழ்ச்சியையும் சேர்த்துதான் எனக்குக் கொடுத்திருக்கிறது 2023
மே இறுதியோடு என் பள்ளி எனக்கு விடை கொடுத்து அனுப்பியது
எப்படி கடந்து வருவேன் என்ற பயம் இருந்தது உண்மைதான்
ஆனால் கடந்து வந்திருக்கிறேன்
எப்படி என்று புரியாமல் குழம்பிய என்னை கீர்த்தி தெளிவுபடுத்தினாள் இன்று
”அது ஒன்னும் இல்லப்பா
நல்லதோ கெட்டதோ
வாத்தியாரா, தலைமை ஆசிரியரா கிடைத்த எதையும் உன்னோடு நீ ஒருபோதும் சுமந்ததில்லை
எட்வினுக்கு கிடைத்ததை மட்டுமே சுமந்திருக்காப்பா
எங்களை வளர்த்ததும் எங்களுக்கு கொடுத்ததும் எட்வின்தானே தவிர ஹெட்மாஸ்டர் இல்ல
அதுதான் உன்னை ஒன்னும் பாதிக்கல”
மகிழ்ச்சிதான்
பணி ஓய்வை ஒரு அரட்டை விழாவாக்கினார்கள் கணேஷும் கலையும்
அனைத்தையும், காசு உள்ளிட்டு அவர்களே செய்தார்கள்
கிஷோரோடே துபாய் சென்றிருக்க வேண்டிய ஷீனா ஆகஸ்டில்தான் சென்றாள்
கீர்த்தி BHMS முடித்திருக்கிறாள்
இடையில் குரல் போனபோது
அநேகமாக அப்படித்தான் என்று மருத்துவர் சொன்னபோது உடனிருந்த கணேஷ் அழவில்லை
ஆனால் அப்படித்தான்
கீர்த்தனா கொடுத்த மருந்து குரலை மீட்டது
இளமதியின் புத்தகம் என்பது நான்கு வருடக் கனவு
வந்தது
குரலைக் கொடுத்தது கீர்த்தனா என்றால்
காதைக் கொடுத்தது கலை
இந்த ஆண்டு மட்டும் சுதா எனக்களித்த புத்தகங்களின் விலை பத்தாயிரத்தைத் தொடும்
எதுக்குப்பா என்றால்
படிங்க தோழர். நான் படிச்சா எனக்கு. நீங்க படிச்சா நிறைய பேருக்கு என்கிறார்
எங்கள் மாவட்டச் செயலாளர் ரமேஷ் இந்த ஆண்டு நெடுகிலும் என்னோடு இருந்திருக்கிறார்
அனைவரையும் இறுகப் பற்றிக் கொள்கிறேன்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...