15.12.1987 அன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு சென்னையில் துவங்க இருந்தது
அதன் வரவேற்புக் குழுத் தலைவர் தோழர் பி.ராமமூர்த்தி
ஆனால் அந்த ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதியே அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்
மூன்று நாட்களுக்கு ஒருமுறை டயாலிசிஸ் செய்யவேண்டும் என்கிறார்கள்
அவருக்கு தான் இறுதிக் கட்டத்திற்கு வந்துவிட்டோம் என்று புரிகிறது
ஒரு பத்து டயலிசிஸ் வரைக்கும்தான் தன்னால் தாங்க முடியும் என்று பார்க்க வந்தவர்களிடம் தோழர் PR கூறுகிறார்
எனில்,
30 நாட்கள்தாம் தம்மால் உயிரோடு இருக்க முடியும் என்ற முடிவுக்கு வருகிறார்
எனவே தன்னால் மாநாட்டிற்கு போக முடியாது என்று கருதுகிறார்
அப்போது அவரை கவனித்துக்கொண்ட தோழர் முரளியிடம்
தன்னால் மாநாட்டிற்கு போக இயலாது என்றும், ஆகவே தனது உரையை எழுதிக் கொள்ளுமாறும் கூறுகிறார்
காங்கிரஸ் அரசாங்கத்தின் மோசமான பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்து உரை இருக்கிறது
கொஞ்ச நேரத்தில் மயக்கம் வருகிறது
மாலை வைகை வருகிறார்
ஒரு தள்ளு நாற்காலியில் வைத்து இங்கும் அங்குமாக நகர்த்தியபடியே உரையாடுகிறார்
அப்பா DYFI மாநாட்டிற்குப் போனீர்களா?
போனேன்மா
பேசினீர்களா?
பேசினேனே
எவ்வளவு நேரம்?
45 நிமிடம்
எப்படிப் பேசினீங்க?
நல்லா பேசினேன்
இந்த இரண்டு வார்த்தைகள்தான் அவர் இறுதியாகப் பேசிய வார்த்தைகள்
அரை மயக்கத்திலும்கூட அவருக்கு மாநாடு குறித்த அக்கறைதான் இருந்திருக்கிறது
அந்த DYFI பிள்ளைகளுக்கு அவரைக் குறித்து கொண்டு சேர்க்க வேண்டும் என்று கட்சி முடிவெடுத்திருக்கிறது என்பது கொஞ்சம் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தருகிறது
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்