Monday, December 25, 2023

சபர்மதி குறித்த ராஜாஜியின் மதிப்பீடு

 

சபர்மதி ஆசிரமத்தில் ஒன்றும் இல்லை என்று அதைக் கொஞ்ச காலம் நிர்வகித்து வந்த ராஜாஜியே சொல்லி இருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா

ஆனால் அதுதான் உண்மை

1920 கல்கத்தா காங்கிரஸ் தீர்மானங்களில் ஒன்று

அரசு நடத்தும் அல்லது அரசு உதவியோடு நடத்தப்படும் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வெளியேறி

தேசியப் பள்ளிகளில் சேர வேண்டும் என்பது

தோழர் பிஆர் தான் படித்து வந்த இந்து பள்ளியில் இருந்து விலகி

அலகாபாத்தில் நேருவும் புருஷோத்தம தாஸ் தாண்டனும் நடத்தி வந்த தேசியப் பள்ளியில் சேர்வது என்று முடிவெடுக்கிறார்

பள்ளிக்கு கிளம்புவதுபோல தோழர் பிஆர் ரயிலடிக்கு வருகிறார்

டிக்கட் எடுக்காமல் அப்படி இப்படி என்றெல்லாம் சுத்திவளைக்க விரும்பவில்லை

திருட்டு ரயில்தான்

திருட்டு ரயிலேதான்

பிடிபட்டு இறக்கிவிடப்பட்டு

திரும்ப ஏறி

திரும்பப் பிடிபட்டு இறக்கிவிடப்பட்டு

திரும்ப ஏறி

ஒருவழியாக அலகாபாத் வந்து பள்ளி என்று அழைக்கப்பட்ட அந்த வீட்டிற்கு வருகிறார்

புருஷோத்தம தாஸ் தாண்டனைப் பார்க்கிறார்

விந்தி விந்தி நடக்கும் சிறுவன்

அவ்வளவாக ஈர்க்கவில்லை

ஆனாலும் சேர்த்துக்கொள்ளப் படுகிறார்

ஆனால் நேருவிற்கு இவரது சூட்டிகையும் அறிவும் பிடித்துப் போகிறது

ஞாயிறுகளில் வீட்டிற்கு அழைத்து உடன் சாப்பிடுமளவிற்கு நேருவிற்கு பிரியம் ஏற்படுகிறது

இந்த சமயத்தில்

சௌரிசௌரா நிகழ்ச்சி குறித்த காந்தியின் எதிர்வினைமீது ஏற்பட்ட விரக்தியில் பள்ளியில் இருந்து அனைவரும் வெளியேறுகின்றனர்

( இளைய பிள்ளைகள் யாரேனும் சௌரிசௌரா என்றால் என்ன என்று கேட்டால் அது குறித்தும் எழுதுவோம்)

வேறு வழி இல்லாமல் பிஆரும் வெளியேறுவதைத் தெரிவிக்க நேருவிடம் வருகிறார்

நேருவிற்கும் அது சரி என்றே படுகிறது

பயணத்திற்கும் செலவிற்கும் என்று பணம் கொடுத்து அனுப்புகிறார்

மீண்டும் ரயிலடி

இப்போது பிஆர் வேறு நினைக்கிறார்

எதற்கு வீட்டிற்கு

காந்தியின் சபர்மதி ஆசிரமம் போகலாமே என்று எண்ணுகிறார்

சென்னைக்கு பதில் டிக்கெட் எடுத்து அகமதாபாத் போகிறார்

அப்போது சபர்மதி ஆசிரமத்தை ராஜாஜி நிர்வகிக்கிறார்

அவரை பிஆர் சந்திக்கிறார்

இங்கு நூல் நூற்பதைத் தவிர வேறு என்ன நடக்கிறது

அது உனக்கு நன்றாகத் தெரியும்

நீ கற்றுக் கொள்ள இங்கு ஏதும் இல்லை

ஊருக்கு ஓடு என்று விரட்டுகிறார்

இவ்வளவுதான் சபர்மதி குறித்த ராஜாஜியின் மதிப்பீடு

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...