Tuesday, December 19, 2023

இந்த அன்பை மென்று அசைபோட்டு தின்றுவிட்டு போகுமளவு

 

10.12.2023

சென்ற ஞாயிறு

எனக்கு ட்ரெட்மில் டெஸ்ட் எடுக்கவேண்டி இருந்தது
பலமுறை பயத்தோடே தள்ளிப்போட்ட ஒன்று
விட்டுவால் உடன்வர முடியாது
கீர்த்தி அப்போதுதான் வந்திருந்தாள். எனவே வேண்டாம் என்று சொல்லி விட்டேன்
கலைக்கு நலமில்லை
வரக்கூடாது சொல்லியாகி விட்டது
வரவும் இயலாது
தோழர் கணேஷ் நிறைய வேலைகளோடு இருப்பதால் அவரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று சொல்லவில்லை
சிறுகனூர் போகும்போது கணேஷ் அழைக்கிறார்
எங்க வந்துட்டு இருக்கீங்க? இறங்கியதும் சொல்லுங்க. வந்து கூட்டீட்டு வரேன்
வேலைகளைப் பாருங்க தோழர். ஒன்றும் இல்லை
ஒன்றும் இல்லைதான். வந்ததும் சொல்லுங்க
எப்படி
நான் தினமும் லேபில் கேட்டபடிதான இருக்கேன்
கலங்குது
ட்ரெட்மில் ஏறப் போகிறேன்
தோழர் இதப் புடிச்சுக்கோங்க
சும்மா மெதுவா ஸ்டெப் வைங்க
முடிலைனா சொல்லுங்க, ஒன்றும் இல்லை
பயப்படாதீங்க
நல்லப் புடிச்சுக்கோங்க
இங்கதான் இருக்கேன்
ஆச்சரியப்படுகிறார்கள்
12 நிமிடங்கள் நடந்திருக்கேன்
எனக்கு ஆச்சரியம் இல்லை
கணேஷ் இருக்கப்ப வேற எப்படி
முடித்து வெளியே வந்தால்
கலையும் சரவணனும்
ஏம்புள்ள?
முடியலைல ரெஸ்ட் எடுக்காம?
சரவணன்தான் இழுத்துட்டு வந்தார்
சாப்பிட உட்கார்ந்திருக்கோம்
அலைபேசி
சுதாகுப்புசாமி
கலையும் கணேசும் வந்துட்டாங்கதானே
சொல்லைலன்னு சொன்னேனே. வந்துருப்பாங்கன்னு எப்படி நம்பற?
இன்ஸ்டிங்ட் தோழர்
விட்டு தோழர் கீர்த்தியால முடியாது. அவங்க வந்திருப்பாங்கன்னு இன்ஸ்டிங்க்ட்
வரலைனா
நான் இருந்திருப்பேனே தோழர்
அய்யோ,
காலமே
எதற்கிப்படி என்னை கடனாளியாக்கிக் கொண்டே இருக்கிறாய்
ஏன் இப்படி உணர்ச்சிவசப்பட்டு எழுதுகிறாய்?
இல்லை
நடந்ததை எழுதுகிறேன்
நீங்கள் உணர்ச்சிவசப் பட்டால் நான் பொறுப்பல்ல
யாருக்கு வாய்க்கும்?
கொஞ்சம் இந்த அன்பை மென்று அசைபோட்டு தின்றுவிட்டு போகுமளவு இயற்கை வாய்ப்புத் தர வேண்டும்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...