Thursday, April 30, 2015

காட்டம்மா

காட்டம்மா....
என் அம்மாயி.
சொந்தப்பெயர் காளியம்மாள். என் பெரிய தங்கை குழந்தையாய் இருந்தபோது காளியம்மா என்று அழைக்க வராமல் காட்டம்மா என்று அழைக்கத் தொடங்கியிருக்கிறாள். இன்று ஊரில் பெரும்பாலோர் அழைப்பது காட்டம்மாதான்.
வயது எண்பதைத் தாண்டும்.
மொட்டை மாடியில் வடகம் காயப் போட்டுவிட்டு இறங்குகையில் தவறி விழுந்து இடுப்புக்கும் தொடைக்கும் இடையே உள்ள இணைப்பெலும்பு உடைந்து விட்டது.
எருமை மாடு மேய்த்து நான் படிக்க உதவிய என் செல்லக் கிழவி.
முத்தமிடாமல் என்னை எப்போதும் அனுப்பியதில்லை. இன்றும் மருத்துவ மனையின் முன் காரில் படுக்க வைத்திருந்த கிழவியின் கிட்டே போய்,
" காட்டம்மா "
" சாமி"
என் கையைப் பிடித்து அழுதபடியே முத்தமிட்டது.
ஸ்கேன், ஈ சி ஜி, எக்கோ, இரத்தம் மற்றும் சிறுநீர் சோதனை எல்லாம் முடித்த பின்பு அறுவை அவசியம் என்றும் ஆனால் வயதின் காரணமாக அறுவையின் போதோ அறவை நடந்து இரண்டு நாட்களுக்குள்ளோ மாரடைப்பு வர கணிசமாக வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவர் சொல்கிறார்.
இதைக் கேட்ட மாத்திரத்தில் தங்கையும் விக்டோரியாவும் அழுது தீர்த்துவிட்டனர். நமக்கு அதைச் செய்தும் ஆற்றிக் கொள்ள முடியவில்லை.
மருத்துவர் நாளை சொல்ல சொல்லியிருக்கிறார்.
நான் ரிஸ்க் எடுக்கலாம் என உள்ளேன்.
நடப்ப காட்டம்மா நீ.
இது நடந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. கிழவி மொட்டை மாடிக்குப் போய்க் கொண்டுதானிருக்கிறது.மருத்துவர் செல்வம் அவர்களை நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்

ரசனை 4

என் பிரியத்திற்குரிய எழுத்தாளன் Franklin Kumar. அவனது கவிதைகளை வாசித்துவிட்டு ஏதும் சொல்லாமல் நகர்பவர்கள் யாரும் இல்லை. இவன் கவிதைகளை ரசிப்பதில் எனக்கும் நந்தன் ஸ்ரீதரன் கும் அப்படியொரு போட்டி. சமீபத்தில் ஒரு உரைநடைப் பதிவு வாசித்தேன். உரைநடையும் வருதுடா உனக்கு.
என் காலத்தின் சிறந்த எழுத்துக்காரர்களில் நிச்சயமாய் ஒருவன்.
அவனது சமீபத்திய பதிவொன்றை படியுங்கள்... கவலை எல்லாம் தொலைந்து பரவசம் அப்பிக் கொள்ளும்
”அந்த பென்சில் டப்பாவை பற்களால் கடித்து திறந்து, காகிதங்களாலான மூன்றடுக்கு பாதுகாப்பின் கீழிருந்த காசுகளை எடுத்து ஒன் டூ த்ரீ என எண்ணி, மீண்டும் எண்ணி கடைக்காரரிடம் எக்கி நீட்டி, ஒரு காரினை கைநீட்டியவளின் கண்களில் அத்தனை வெளிச்சம். அய்யோ அது இல்ல அங்கிள் ரெட் கலர். smile emoticon smile emoticon smile emoticon ஒரு அணில் குட்டியைப் போல பைக்குள் அதை பாதுகாப்பை வைத்துக்கொண்டு நகர துவங்கியவளிடம் கடைக்காரரே கேட்டார், எங்க உன் தம்பிய காணோம்?
உஷ்ஷ்ஷ் (அழகாய் பதறியவள்) ப்ளீஸ் ப்ளீஸ் அவன் கிட்ட சொல்லிடாதிங்க அங்கிள். நாளைக்கு அவனுக்கு happy birthday.
# அக்காக்களும் தேவதைகளே”
அவனது முழுப் படைப்புகளையும் வாசிக்க...
https://www.facebook.com/franklin.kumar.16?fref=nf

அழைப்பு 11



இன்று காலை திருவையாறு சரஸ்வதி பள்ளி நூற்றாண்டு விழாவில் பேசுகிறேன். வாய்ப்புள்ள தோழர்கள் வாருங்கள். சந்திப்போம்

Monday, April 27, 2015

ரசனை 3

வெளிச்சம் படாத, வாசகனுக்காக ஏங்கும் ஒரு நல்ல புத்தகம் பற்றிய Theepika Theepa அவர்களின் கவிதை. அவர்கள் வெளியிட்டிருந்த படத்தோடே...


முட்டி மோதும்
எழுத்துக் கொம்பன்களின் காலடியில்
நசிபடுகின்றன இலக்கியங்கள்.
புத்தக வியாபாரிகளாகி விட்ட
இலக்கியவாதிகளின் புளுகுகளுக்கிடையே
மாற்றிப் போடும் புத்தகமொன்றை
தேடிக் கொண்டிருக்கிறான் வாசகன்.
கள்ளக் கையெழுத்துக்களுடன்
களமிறங்கியிருக்கிறார்கள்
விருதுக்கலையும் புகழ் நோயாளிகள்.
தன் விருப்பப்படி தளைத்துச் செல்லும்
கவிதைகளை
நிறுத்து நிறுத்துக் களைக்கும் விமர்சகர்
எழுதுவதைக் காட்டிலும்
கவிதையே புரிந்து விடுகிறதென்கிறான்
தாங்க முடியாத வாசகன்.
சந்தி சிரிக்கும் எல்லாச் சரக்குகளையும்
கடை பரப்பும் முகப்புத்தகக் காரர்கள்
விருப்பக் குறிகளை
சுடச்சுட அள்ளியெடுக்கிறார்கள்.
இன்னமும்
நூலக அடுக்குகளுக்குள்
தன் வாசகனுக்காக காத்துக் கொண்டிருக்கிறது
எல்லோரும் தவறவிட்டு விட்ட
வெளிச்சம் படாத ஒரு நல்ல புத்தகம்.
அவர்களது முழுப் படைப்புகளையும் வாசிக்க...
https://www.facebook.com/theepika.kavithaikal…

குட்டிப் பதிவு 35

எத்தனையோ வகையான கை தட்டல்களை பார்த்திருக்கிறேன். உண்மையாய் சடங்காய் என்று எத்தனையோ விதமான கைதட்டல்கள்.
எனக்கேகூட கைதட்டல்கள் கிடைத்திருக்கின்றன. நானும்கூட அவற்றில் கரைந்திருக்கிறேன்தான்.
நேற்று கட்டிட நெரிசல்களுக்குள் உயிரைப் பணயம் வைத்து மீட்புக் குழுவினரில் இருவர் நுழைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒருவரை காப்பாற்ரி வெளிக் கொண்டு வந்து போட்டதும் சுற்றியிருந்த மீட்புக் குழுத் தோழர்கள் கைதட்டி கொண்டாடினார்கள் பாருங்கள் அதுதான் நான் இதுவரை பார்த்ததிலேயே உன்னதமானதும் உயிர்ப்பானதும் உண்மையானதுமான கைதட்டல்

Sunday, April 26, 2015

ரசனை 2

உமா ( Uma) அவர்களின் வலைநூலில் உள்ள இந்தக் கவிதை குறித்து நான் குறுக்கே புகுந்து ஏதும் சொல்லி உங்களுக்கு இடையூராய் நிற்க விரும்பவில்லை. வாசியுங்கள்... இந்தக் கவிதை யாருடையது என்று தெரிந்தால் சொல்லுங்கள். கவிதை இ. பரமசிவம் அவர்களுடையது என்கிற தகவலை உமா அவர்கள் தருகிறார்
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
இலையுதிர்க்கும் மரத்தைப்போலவே
இங்குக் கொஞ்சம் அங்குக் கொஞ்சமென 
நாளுக்குநாள் இறப்பவன் நான்..
எனது இறப்பில் எல்லோருக்கும்
பங்குண்டு..
எனது மரணம்
எப்போது நிகழ்ந்தாலும்
எனது உடலைச் சுற்றி இருப்போர்
அத்தனைப் பேரும் -
தானுமொரு கொலையாளி என்பதை
மறந்துவிடாதீர்கள்..
ஒருவேளை -
இந்தச் சமுதாயம் நாளை
தனது
தவறுகளை
விட்டொழிந்து நிற்குமெனில் - அன்று
மீண்டும் நான்
பிறந்துவருவேன்..
அப்போது
எனைப் பெற்றவர்களும்
நீங்களாகவே இருப்பீர்கள்!!
அவரது முழுப் படைப்புகளையும் வாசிக்க...
https://www.facebook.com/umadevicbe…

ரசனை 1

இரண்டு நாட்களாக மழை பெய்கிறது. எல்லோரும் கொண்டாடுகிறார்கள். நானும்தான்.

ஆனால் தோழர் Seema Senthil இந்த மழையை வேறு மாதிரி பார்க்கிறார். அவரது கவிதையை வாசித்ததும் மிரண்டு போனேன். இந்தக் கருகிய தென்னை மரங்களும் , பனை மரங்களும் அவரது கவிதையின் அழுத்தத்தை சொல்லும்

பசையற்றுப் போன செடிக்கு 
பசியென்ன
இருக்கப்போகிறது .........?
இனிப் பெய்யும் மழையெல்லாம்
அதற்கு
சடலம் கழுவும் சடங்கு தான் ......!

அவரது அனைத்துப் படைப்புகளையும் வாசிக்க....
https://www.facebook.com/seema.senthil

26.04.2014 நிலைத் தகவல்

இப்போதும் தித்திக்கும் சென்ற ஆண்டு நடந்த தேர்தல் அனுபவம்
***************************************************************************************
1989 இல் இருந்து தேர்தல் பணிகளை செய்து வருகிறேன். பாராளுமன்றத் தேர்தல், சட்டமன்ற தேர்தல், இடைத் தேர்தல், கூட்டுறவு தேர்தல், நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்து தேர்தல் என போன இடங்களை அசைபோட்டுப் பார்த்தால் 32 இடங்கள் நினைவுக்கு வருகின்றன. ஒன்றிரண்டு கூடுதலாகவும் இருக்கக் கூடும்.
ஆனால் இந்தமுறை கிடைத்த அனுபவம் மிக மிக வித்தியாசமானது.
வாக்குச் சாவடிக்குள் நுழைந்தால் ஆறு சப் இன்ஸ்பெக்டர்கள் அமர்ந்திருந்தார்கள். ஆச்சரியமாயிருந்தது. வழக்கமாக ஒரு ஓய்வுபெற்ற காவலரோ அல்லது வயதான, ஓய்வு பெற்ற ராணுவ வீரரோதான் பணிக்கமர்த்தப் படுவார்கள். ஆறு துணைக் கண்காணிப்பாளர்கள், 20 கும் அதிக எண்ணிக்கையில் காவலர்கள்.
உறைத்தது.
ஒரு காவலரிடம் கேட்டேன்,
“ ஏன் சார், சென்சிடிவ் ஆக இருக்குமோ?”
“ சே சே அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. பயப்படாதீங்க சார். கொஞ்சம் அப்படி இப்படி இருக்கும். நாங்க இருக்கோம். கொஞ்சம் கைமீறினால் கர்நாடகா ஃபோர்ஸ் வந்துவிடுவார்கள். போனமுறை அவர்கள் வந்ததும்தான் கட்டுக்குள் வந்ததாம்.”
இன்னொரு எஸ்.ஐ யிடம் கேட்டபோது அது தமிழ் நாட்டில் உள்ள பதட்டமான வாக்குச் சாவடிகளுள் ஒன்று என்ற உண்மை வெளி வந்தது.
மாதிரி வாக்கெடுப்பின் முன்னால் ஒரு அதிகாரி பார்த்து கவனமாக நடத்துமாறும் இங்குதான் போனமுறை பிரச்சினை ஆரம்பமானது என்றும் கூறினார்.
11 வாக்குச் சாவடி முகவர்கள்.
கை எடுத்து கும்பிட்டேன். சிலர் திருப்பி வணங்கினார்கள். அவர்கள் திருப்தி படும் வரை மாக் போல் செய்யலாம் என்றும் அதற்குமுன் ரெண்டு நிமிடம் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொள்ளலாம் என்றும் கூறினேன்.
”நான் எட்வின். ஒரு மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியர். ஒரு பையன், ஒரு பொண்னு. அப்படியே என் சக பணியாளர்களை அறிமுகம் செய்தபின் அவர்களைப் பற்றி கேட்டேன்”
சொன்னார்கள்.
“என்ன சப்ஜெக்ட் சார்?”
ஒரு பையன் கேட்டான்.
“ஆங்கிலம்”
உதட்டைப் பிதுக்கினான்.
”ஏம்பா?”
”எனக்கு போனா அது உங்க சப்ஜெக்ட் தான்.”
”போச்சுன்னா வா. இன்ஸ்டண்ட்ல தேத்திக்கலாம்.”
சிரித்தான்.
மாதிரி வாக்கெடுப்பு தொடங்கினேன். உள்ளூர உதறல்தான். வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
கருவிகள் இணைப்பது தொடங்கி உதவினார்கள். 50 வாக்குகளாவது போட வேண்டும் என்று விதி. தேவை இல்லை என்று சொன்னார்கள்.தயங்கிய போது பயப்பட வேண்டாம் என்றும், 50 வாக்குகள் மாதிரி வாக்கெடுப்பில் போடப் பட்டதாக படிவத்தில் கையொப்பம் இடுவதாகவும் சொன்னதோடு இருந்த படிவத்தில் ஒவ்வொருவராக கையொப்பமிட்டார்கள்.
வாக்கெடுப்பின்போது விடாமல் பேசிக் கொண்டே இருந்தார்கள். அவர்களது குழந்தைகளின் படிப்பு பற்றி பேசினார்கள். அது பற்றி, இது பற்றி எது எது பற்றியோ பேசினார்கள்.
இடை இடையே ஓட்டுப் போட வந்தவர்கள் கொதிக்கத்தான் செய்தார்கள். ஒட்டடை அடிக்கவில்லை என்பதற்காகக் கூட ஒரு தம்பி சத்தம் போட்டார்.
மிகவும் பதட்டமான சாவடி என்று அறியப் பட்டிருந்ததால் சாப்பாடு தேநீர் எதுவும் வருவதில் சிக்கல். எங்களோடு முகவர்களும் பட்டினிதான்.
மூட்டை கட்டுவதில் உதவினார்கள்.
ஒருவர் கேட்டார், “ நீங்க கம்யூனிஸ்டா சார்?”
“ இல்ல , ஆனா அவங்களப் பிடிக்கும். ஏன் கேக்குறீங்க?”
“கேட்டேன் சார்”
தி.மு.க, அ.தி. மு.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த முகவர்கள் வீட்டிலிருந்து ஏதேனும் கொண்டு வருவதாக சொன்னார்கள்.
முதலில் சொன்ன பையன் ஓடிப் போய் ஒரு தைல பாட்டிலோடு வந்தான். நான் அடிக்கடி தலையைப் பிடித்துக் கொண்டு சிரமப் பட்டதைப் பார்த்திருக்கிறான்.
வாக்குச் சாவடியில் சத்தமில்லால், சண்டை இல்லாமல் வாக்கெடுப்பு நடந்தது இதுதான் முதல் முறை என்று கூறியவாறே காவல்துறை ஏசி கை கொடுத்தார்.
சிரித்தார்கள்.
எல்லாம் அவர்களது அன்பும் பெருந்தன்மையும்தான் காரணம்.
பேருந்து ஏற்றிவிட வரும்போது அந்தக் குழந்தை கேட்டான்,
“ சார், பேப்பரெல்லாம் லூசாத்தானே திருத்துனீங்க?”
“ பயப்படாதே” தட்டிக் கொடுத்தேன்.
கை எடுத்து கும்பிட்டு கை கொடுத்து விடை பெற்றேன்.
“ உங்க அன்பும், நடவடிக்கைகளும் எங்களக் கட்டி போட்டிருந்துச்சு சார்” என்றார் ஒருவர். நல்லது கெட்டதுகளுக்கு பரஸ்பரம் சொல்லிக் கொள்ள வேண்டும் என்றார் ஒரு முகவர்.
அவர்களது பெருந்தன்மைக்கு நன்றி சொல்லி கிளம்பினேன்.
எல்லாவற்றையும் கேட்ட கீர்த்தி சொன்னாள்,
”சும்மா ரீல் விடாதப்பா, அய்யோ பாவம்னு ஆளப் பார்த்து விட்டுருப்பாங்க.”

Saturday, April 25, 2015

யார் வாயெனினும் கேட்க


கிழவனது ஏதோ ஒரு குறள் எதோ ஒரு இடத்தில் கச்சிதமாய் வந்து பொருந்தவே செய்கிறது. அப்படியாக இன்றைக்கு இந்தப் புள்ளியில் மிகச் சரியாய் வந்து பொருந்தி அமர்ந்ததுஎப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்

ஏனிந்தக் கிழவன் யார் என்பதை இரண்டுமுறை பயன்படுத்தினான்? வெறும் சந்த நயத்திற்காகவா? என்றெல்லாம்கூட யோசிப்பது உண்டுதான். 23.04.15 அன்றைய பாராளுமன்ற மேலவை நிகழ்ச்சிகள்தான் அந்தக் குறளுக்கான உண்மையான பொழிப்புரையைத் தந்தன.

யார் யார்எனில் மரியாதைக்குரிய நவநீதக் கிருஷ்ணன், மரியாதைக்குரிய வெங்கைய நாயுடு, மரியாதைக்குரிய திருச்சி.சிவா, மற்றும் மரியாதைக்குரிய ஜேட்லி என்பதாக அன்றைய அவை நிகழ்ச்சிகள் சொல்லின.



எப்பொருள்என்பதற்கு மார்க்சிஸ்ட் பொதுவுடைமைக் கட்சியின் மேலவை உறுப்பினர் தோழர் ராஜீவ் அவர்களின் பணி குறித்தும், அவரது அறிவு, திறமை, உழைப்பு மற்றும் நுட்பம் குறித்தும் அவரது பணி நிறைவு அவைக்குள் ஏற்படுத்தப் போகும் வெற்றிடம் குறித்தும், தோழர் யெச்சூரி கட்சியின் பொதுச் செயளாளராக தேர்வானதால் மாநிலங்களவைக்கு ஏற்பட்டுள்ள பெருமை.

23.04.15 அன்று மாநிலங்களவை கூடியதும் மாண்பமை அமைச்சர்கள் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று தோழர் சீத்தாராம் யெச்சூரியை வாழ்த்தியிருக்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அமைச்சருமான மாண்பமை வெங்கையா அவர்கள்இந்தியாவின் மிக முக்கியமான கட்சிகளுள் ஒன்றான இந்திய பொது உடமைக் கட்சியின் பொதுச் செயலாளராக இந்த அவையின் உறுப்பினரும் நமது சகாவுமான திரு யெச்சூரி அவர்கள் தேர்வு செய்யப் பட்டிருப்பது நமக்கெல்லாம் பெருமையானதொரு விஷயம்என்று வாழ்த்தியிருக்கிறார்.

மரியாதைக்குரிய திருச்சி சிவா அவர்கள் ராஜீவ் அவர்களைப் பற்றிப் பேசும் போது அவர் இந்த அவையின்ட்ரெண்ட் செட்டராகவிளங்கியதாக புகழ்ந்திருக்கிறார்.

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் மாண்புமிக நவநீதக்கிருஷ்ணன் அவர்கள் தான் மிகவும் தன்னடக்கமானவன் என்று இதுவரை நினைத்துக் கொண்டிருந்ததாகவும் திரு ராஜீவ் அவர்களைப் பார்த்த பின்புதான் தன்னடக்கத்தையும் இன்னும் சில விஷயங்களையும் அவரிடமிருந்து கற்றுக் கொள்ளத் தேவை இருப்பதை உணர்ந்ததாகவும் தெரிவிக்கிறார்.

மாண்பமை அருண் ஜேட்லியும் மரியாதைக்குரிய குலாம்நபி ஆசாத் அவர்களும் தோழர் ராஜீவ் அவர்களை மீண்டும் அவைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தோழர் யெச்சூரியிடம் வேண்டுகோள் வைத்தனர்.

இதற்கெல்லாம் உச்சமாக “ இதுபோன்ற அறிவார்ந்த உறுப்பினர்கள் தங்கள் கட்சியில் இல்லாமல் இந்தியம் மார்க்சிஸ்ட் பொது உடைமைக் கட்சியில் இருப்பதற்காக  அந்தக் கட்சியைப் பார்த்து பொறாமைப் படுவதாக” மாண்பமை வெங்கையா அவர்கள் கூறியுள்ளார்.

“வரைந்து விடாதீர்கள் என்னை
யாரும்
என்னைவிட அழகாய்”

என்று ஒருமுறை எழுதினேன். என்னளவில் அதில் கறாராகவே இருக்க விரும்புகிறேன். நம் உண்மையான உசரத்திற்கு அதிகமாய் கட்டமைக்கப் படும் எந்த பிம்பமும் அசிங்கமானதே.

உயரமாக கட்டமைக்கபடும்போது கட்டமைக்கப் பட்டவனும், குள்ளமாக கட்டமைக்கும்போது கட்டமைப்பவனும் அசிங்கப் படுவார்கள்.

புகழ்ந்தவர்கள் எல்லார் மீதும் நமக்கு ஏகத்துக்கும் விமர்சனம் உண்டு. அவர்கள் அனைவருமே பொது உடைமைக் கட்சியின் எதிரிகள். இந்தக் கட்சியைச் சார்ந்த உறுப்பினர்கள் எதிலாவது சிக்க மாட்டார்களா? என்று தேடிக் கொண்டிருப்பவர்கள்.

அவர்கள் இப்படிப் புகழ்கிறார்கள் என்றால் அது வேறு வழியே இல்லாமல் என்பது புரிகிறது. என்றாலும் இதையும் அவர்கள் சொல்லாமல் போயிருந்தாலும் அவர்களை யாரும் கேள்வியெல்லாம் கேட்க முடியாது. இன்னொரு பக்கம் இப்படி சொல்வதால் அவர்களுக்கு பெரிய லாபம் எல்லாம் இருக்கப் போவதில்லை, மாறாக கொஞ்சம் எதிர்மறை விளைவுகளை அவர்களுக்கு கொண்டு வந்தும் தரலாம். இருந்தும் இதை அவர்கள் செய்திருக்கிறார்கள் என்றால் அவர்களிடமிருக்கும் பெருந்தன்மையை அங்கீகரிக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

இந்தியாவின் மிக முக்கியமான கட்சி என்று பெருந்தன்மையோடு கூறியுள்ள மாண்பமை வெங்கையா அவர்களிடம் நம் கோரிக்கை ஒன்றுண்டு. நீங்களே சொல்வது போல் அறிவார்ந்த, தியாக உணர்வோடு கூடிய, உறுப்பினர்களைக் கொண்ட இந்த தேசத்தின் மிக முக்கியமான கட்சிகளுள் ஒன்று இந்த தேசத்திற்கெதிராக ஒரு போதும் சிந்திக்காது என்பதை உணர்ந்ததால்தானே உங்களால் அப்படி சொல்ல முடிந்தது. ஒருக்கால் சும்மா சொன்னது என்றால் நீங்கள் போலி. உண்மையென உணர்ந்ததைத்தான் நீங்கள் சொன்னீர்கள் எனில் நமது கோரிக்கை இதுதான்,

அந்தக் கட்சி சொல்வதை கொஞ்சம் காது கொடுத்துதான் கேளுங்களேன்.

இன்னொன்றையும் நான் ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும். வெங்கையா அவர்களும் நவநீதக் கிருஷ்ணன் அவர்களும் சொல்லித்தான் எனக்கு ராஜீவை பற்றியே தெரிய வருகிறது.

”யார் யார் வாயும் கேட்க” சொன்ன வள்ளுவனுக்கு நன்றி



Friday, April 24, 2015

உங்களுக்கு ஓட்டுப் போடுவதைத் தவிர

(மேக் அப் போடும் பெண்கள் வேசியின் மக்கள் என்று பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மரியாதைக்குரிய நாராயணன் அவர்கள் பேசியுள்ளார். அதற்கு எதிர்வினையாக)

மரணிக்கும் வரை என் தந்தை சன்னமான அளவில் தனக்கு ஒப்பனைகளை எடுத்துக் கொள்பவராகவே இருந்தார்.
நானும், என் தம்பி, மற்றும் என் மகனும் அப்படியே.
என் தங்கைகள், மனைவி மற்றும் என் மகள்களோ இன்னும் கொஞ்சம் கூடுதலாய் கவனிக்கிறார்கள் ஒப்பனையை.
உங்கள் கணக்குப்படி எங்கள் குடும்பமே வேசியின் பிள்ளைகள் என்பதாகவே இருக்கட்டும்.
என் கேள்விகள் இரண்டுதான் மரியாதைக்குரிய நாராயணன் அவர்களே
1 வேசியின் பிள்ளைகள் என்றால் கேவலமா?
2 வேசியின் மக்கள் வேறெதுவும் செய்யக் கூடாதா உங்களுக்கு ஓட்டுப் போடுவதைத் தவிர

24.04.2011 நிலைத் தகவல்

”மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்கர்கள்  இந்தியா செல்வதை அனுமதிக்க முடியாது. உள்ளூரிலேயே அதே சிகிச்சையை குறைவான செலவில் தருவோம்:” என்பது மாதிரி ஒபாமா அறிக்கை விட்டிருக்கிறார்.

கண்புரை நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள இயலாத அமெரிக்கர்கள் ஏராளம். வாரா வாரமோ தினம் தினமோ தெரியவில்லை, கியூபா இத்தகைய ஏழை, உழைக்கும், அடித்தட்டு மக்களை இலவசமாக ஹெலிகாப்டரில் அழைத்துப் போய் அறுவை செய்து குணமாக்கி மீண்டும் கொண்டு வந்து இலவசமாகவே விடுகிறார்கள் என்று படித்திருக்கிறேன். இதனால்தான் அமெரிக்க உழைக்கும் மக்கள் கியூபாவைத் தங்கள் தோழனாகப் பார்க்கிறார்கள். ஏழை, உழைக்கும் அடித்தட்டு மக்களுக்கும் கியூபாவிற்கும் இடையே உள்ள இந்த வர்க்க ரீதியான உறவுதான் புஷ், கிளிண்டன், ஓபாமா இன்னபிற எந்தக் கொம்பனாலும் கியூபாவை ஒன்றும் செய்ய இயலாமல் செய்து போட்டிருக்கிறது.

மீண்டும் ஒபாமாவின் அறிக்கைக்கு வருவோம். அவரது அறிக்கை ஒன்றைத் தெளிவு படுத்தியிருக்கிறது. அமெரிக்காவை விட இந்தியாவில் மருத்துவ சிகிச்சைக்கான செலவு குறைச்சல். ஏழை, உழைக்கும் ,அடித் தட்டு அமெரிக்க மக்கள் தங்களது சிகிச்சைக்காக அமெரிக்காவைவிட இந்தியாவையே அதிகம் சார்ந்து இருக்கிறார்கள்.அதிக அளவு உழைப்பாளி அமெரிக்கர்கள் இந்தியாவில் வந்து வைத்தியம் பார்த்து குணமடைந்து சென்றிருக்கிறார்கள்.

ஆக, அமெரிக்காவிலும் இந்தியாவிலும் உழைப்பவன் நிலைமை ஒன்றாக ஒத்தே இருக்கிறது. இவர்களது பிரச்சினைகளும் ஒன்றாகவே கிடக்கின்றன. கொஞ்சம் மேலே போனால் இவர்களது பிரச்சினைகளுக்கான தீர்வுக்கான வழியும் ஒன்றாய் ஒத்தே இருக்கிறது. இவர்களது வாழ்வு, சிக்கல், தீர்வு , போராட்டம் ஆகியவை இவர்களை ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்கும் நிலையும் உள்ளது.

மட்டுமல்ல உலகம் முழுவதிலும் உழைக்கும் மக்களின் சகலமும் ஒருவரை ஒருவர் சார்ந்தேதான் இருக்கிறது. எனவேதான் சரியாய் சொல்கிறோம்” உழைக்கும் தொழிலாளிகளே ஒன்று படுங்கள் “ என்று. சொன்னால் சில பேருக்குப் பொத்துக் கொண்டு வருகிறது. இந்த உயிர்ப்பான முழக்கத்தை எவன் சந்தேகித்தாலும், எவன் கேலி செய்தாலும், எதிர்மறையாய் எவன் பேசினாலும் அவன் உழைக்கும் திரளின் எதிரியே.

சரி, ஒபாமா இந்தியாவைக் கேவலப் படுத்தவில்லையா? என்றால் இல்லை என்பதே எனெது பதில். தன் நாட்டு மக்கள் இன்னொரு நாட்டை சார்ந்து வாழ்வதை அவர் விரும்ப வில்லை என்பதை சரியானதொரு பார்வையாகவே நான் பார்க்கிறேன். அங்குள்ள அடித்தட்டு மக்களுக்கு அங்கேயே இலவசமாகவோ அல்லது குறைந்த செலவிலோ வைத்தியத்திற்கான  ஏற்பாடுகளை அவர் செய்தால் சத்தியமாய் அவரை நான் பாராட்டவே செய்வேன். நம்மைப் பொறுத்தவரை எந்த நாட்டு உழைப்பாளியாக இருந்தாலும் எங்கள் உறவே.

நமக்கான நியாயமான கேள்வி இதுதான். இந்தியாவை சார்ந்து அமெரிக்க மக்கள் இருக்கக் கூடாது என்று நியாயமாக நினைக்கும் போது ஒட்டு மொத்த இந்தியாவையும் அமெரிக்காவை சார்ந்தும் எதிர் பார்த்தும் இருக்கிற நிலைக்கு ”ஒன், டூ, த்ரீ”  என்று தள்ளிய கனவான்களை என்ன செய்யப் போகிறோம்?    

Thursday, April 23, 2015

குட்டிப் பதிவு 34

மீண்டும் அடகு வைப்பதற்குமுன் மீட்ட மோதிரத்தோடு ஒரு புகைப்படம் எடுத்துத் தொலைத்திருக்கலாம்

23.04.2013 நிலைத்தகவல்

நேற்று நானும் லெனினும் மட்டுமே வீட்டில்.
250 பக்கங்களாவது சிரத்தையோடு படித்திருப்பேன்.
கல்வியின் நோக்கம் குறித்து எவ்வளவோ பேசிவிட்டோம். குடும்பத்துக்காக, சமூகத்துக்காக, தேசத்துக்காக என்று. புரட்சியின் உச்சக் கொதிநிலையில் களத்தின் ஏதோ ஒரு இடத்திலிருந்து எழுதுகிறான்,
“ புத்திசாலித்தனமாக, விவேகமாக, வெற்றிகரமாக புரட்சியில் பங்குகொள்ள படிப்பது அவசியம்”
எதையும் புத்திசாலித்தனமாக, விவேகமாக, வெற்றிகரமாக செய்வதற்கு கல்வி அவசியம்தான்.
கல்வியின் தேவை,
லெனினுக்கு மக்கள் புரட்சிக்கு, சிதம்பரத்துக்கு அந்நியனுக்கு வளங்களை விற்பதற்கு.
உபரியாக உள்ள அரசு ஊழியர்களை நூலகப் பணிக்கு அனுப்ப வேண்டும் என்கிறான்.
வாரத்தில் எல்லா நாட்களும் நூலகங்கள் இயங்க வேண்டும் என்கிறான்.
ஆச்சரியமாயிருக்கிறது,
1917 வாக்கிலேயே நூலகங்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப் பட வேண்டும் என்கிறான்.
நூலக நூலகங்களில் உள்ள எந்தப் புத்தகத்தையும் ஒரு கிராமத்து நூலகத்தில் உட்கார்ந்து படிக்கக் கூடிய நிலை எப்போது வரும். சிந்திப்போம், அது குறித்து கூடிப் பேசுவோம், விவாதிப்போம். தெருவிற்கு வருவோம்.
உலக மக்களை ஒருங்கிணைப்போம். நூல்களைப் பொதுப் படுத்துவோம்.
என்னமாய் சிந்தித்திருக்கிறான் பாருங்கள்,
நூலகங்களுக்கு அனுப்பக் கூடிய நூல்களுக்கு தபால் கட்டணம் கூடாது என்று கனவு கண்டிருக்கிறான்.
இத்தனையும் உலகம் வியந்த ஒரு பெரும் உக்கிரமான மக்கள் புரட்சியின் உட்காருமளவிற்கும் அவகாசமற்ற ஒரு ஓய்வுப் பொழுதில் எழுதியிருக்கிறான்.
நேற்று லெனின் பிறந்த தினம்.
இன்று உலகப் புத்தகத் தினம்.
ஆக, இப்படி சொல்லலாம்
இன்று க்காக சிந்திக்க நேற்று பிறந்தவன்.

Monday, April 20, 2015

தேவை மாறாமல்....

ஒரு தொலைக்காட்சி சேனலின் அவசியத்தை இடதுசாரிகள் உணர்வதும், அது நோக்கி நகர்வதும் அவசியம் என்பதும் இந்தத் தேர்தல் நமக்குத் தரும் உபரிப் பாடம்.

சென்ற ஆண்டு இதே நாளில் இப்படி எழுதியிருக்கிறேன்.  அவர்களது அகில இந்திய மாநாடு முடிந்த நிலையிலும் தேவை மாறாமல் அப்படியேதான் இருக்கிறது.

யோசிக்க வேண்டுகிறேன்...

Sunday, April 19, 2015

ஜேக்டோ பட்டினிப் போராட்டம்




இன்றைய ஜேக்டோ பட்டினிப் போராட்டத்தில் முழுக்க முழுக்க தாய் மொழி வழிக் கல்வியின் அவசியம் குறித்து பேசிவிட்டு வந்தேன். கை தட்டியும் காது கொடுத்தும் கேட்கவே செய்தார்கள்

வருக தோழா




நீங்கள் எங்களின் பிரியத்திற்கும் பெரு மதிப்பிற்கும் உரியவர். CBSE பொதுத் தேர்வில் தேசத்திலேயே முதல் மாணவனாக வந்தவரெனினும் மக்களுக்குழைப்பதை தேர்வு செய்த எங்களின் அன்பிற்கினிய தோழர். வாழ்த்தி வரவேற்கிறேன்

எலும்புகளை ஒடித்தாலும்....

நாளையக் கூட்டத்திற்காக தயாரித்துக் கொண்டிருந்தபோது குணங்குடி மஸ்தான் அவர்களை வாசிக்க வாசிக்க ஆச்சரியத்தால் விரிந்தே போனேன்.
ஆண் ஆண்டாளாகவும், கொஞ்சம் பட்டிணத்தாராகவும், நிறைய சித்தராகவும் தெரிகிறார்.
விடக் கூடாது, தேடி முழுசாய் வாசித்துவிட வேண்டும்.
சொல்லொன்றும் செயலொன்றுமாய் வாழும் மனிதன் எவனாயினும் அவன் குருவேயாயினும் துவைத்து எடுக்கிறார் மனிதர். எழுதுகிறார் பாருங்கள்,
“மோட்சம் பெறாமல் போனாலும் போகட்டும்
முடி தரித்து
முடிய வாழ்ந்து
முடிந்து போனாலும் போகட்டும்
குடிக்கக் கஞ்சியின்றி
குண்டிக்குத் துணியின்றி
குருடனாய் போனாலும் போகட்டும்
என்னை அடித்தாலும்
எலும்புகளை ஒடித்தாலும்
அவர்களுக்கு அஞ்ச மாட்டேன்
அந்தக்
கெடுதல் செய்பவர்கள்
என் கடை மயிர்தான்”
அப்பப்பா...
விடக் கூடாது அவரை

Saturday, April 18, 2015

அழைப்பு 10



நாளை (19.04.15) காலை அரும்பாவூர் கலை இலக்கியப் பெருமன்றம் ஏற்பாடு செய்துள்ள கா.மு.ஷெரிஃப் அவர்களின் நூற்றாண்டு விழாவில் பேசுகிறேன். வாய்ப்புள்ள தோழர்கள் வந்தால் சந்திக்கலாம்

போன வருடம் இன்று

நகை விலை சரிந்திருப்பதால் இருக்கும் நகையை எல்லாம் அடகு வைத்துவிட்டு புதுசாய் வாங்கலாம்னு இருக்கேன். நீயும் வாங்கேன்” என்று சொன்ன தங்கைக்குத் தெரியாது,

தங்கம் விலை சரிந்ததால் வைத்துள்ள நகையின் அளவைவிட வாங்கியுள்ள தொகை அதிகமாய் உள்ளதால் மிச்சத் தொகையை உடனே கட்டுமாறு வந்துள்ள வங்கி நோட்டீஸ் ஏற்கனவே என்னை கந்துக்காரனை நோக்கி தள்ளிக் கொண்டிருக்கும் கதை.

Friday, April 17, 2015

இந்த உரிமைக்காகவும்தான்...



எனக்கு கோவமெதுவும் இல்லை உங்கள் மீது. உங்களது இந்த உரிமைக்காகவும்தான் அந்தக் கிழவன் சாகும் வரைக்கும் போராடினான்.


Thursday, April 16, 2015

இதுகூடத் தெரியாம....

2013 ஏப்ரல் 16 அன்றைய எனது நிலைத் தலவல்களில் ஒன்று
***********************************************************************************
7C ஒரு நல்ல தொடர் என்று பரவலாக எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள். நானும் அவ்வப்போது பார்க்கிற வகையில் அதை மறுப்பதற்கான வலுவான காரணங்கள் ஏதும் இருப்பதாகப் படவில்லை.
ஸ்டாலின் என்ற 7C யின் வகுப்பாசிரியர் இருக்கிறார் பாருங்கள். ஏதோ அவர்தான் மண்ணில் இருக்கிற அனைத்து ஆசிரியர்களுக்கும் முன் மாதிரியான் ஆசிரியர் என்பது மாதிரி ஒரு பிம்பத்தைக் கட்டமைக்க செய்த முயற்சியில் பெருமளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
கீர்த்தனா ஸ்டாலினின் ரசிகை. அடிக்கடி சொல்வாள்,
“ சார்னா இப்படி இருக்கனும்”
விடுங்கள்,
“ இவர மாதிரி வரணும்” என்கிற ஆசை ஆசிரியர்கள் பலர் மத்தியிலும் , ஆசிரியர் பணிக்காக காத்திருப்பவர்கள் மத்தியிலும் இருக்கவே இருக்கிறது.
ஆனாலும் வால்ட்டர் வெற்றிவேல் மாதிரியோ, சௌத்திரி மாதிரியோ ஒரு மிகையான போலியான பிம்பமாக இது இல்லை என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான்.
மிகை , குறை, அது ,இது என்பது மாதிரி நிறைய விஷயங்கள் இருப்பினும் அது பற்றியெல்லாம் இப்போது பேசப் போவதில்லை.
ஸ்டாலின் மருத்துவமனையில் இருக்கிறார். ஸ்டாலினுக்கு வேண்டாத ஆசிரியர் ஒருவர் 7C மாணவர்களைப் பார்த்து நீங்க ஒருத்தனும் பாஸ் பண்ணப் போரது இல்ல என்கிறார்.
தலைமை ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து உருக்கமாக எப்படியாவது கஷ்டப்பட்டு படிச்சு பாஸாயிடுங்கடா. அதுதான் நாம ஸ்டாலின் சாருக்கு காட்டுற மரியாதை என்கிறார்.
பிள்ளைகள் வெறி கொண்டு படிக்கிறார்கள்.
இதற்காக மாணவர்கள் திரண்டு வந்து தலைமை ஆசிரியரைஒ சிறப்பு வகுப்பு எடுக்க கேட்கிறார்கள். அவரும் உருகி சரி என்கிறார்.
7C மாணவர்களை எப்படியாவது தேர்ச்சி பெற வைத்துவிடுவது என்று ஸ்டாலினுக்கு ஆதரவான அணி முனைகிறது. அணி மாற்றங்களும் நடக்கின்றன.
எல்லாமே அழகான விஷயங்கள்தான். மாணவர்களைத் தயார் செய்வது என்பதும் சரிதான்.
இன்று கீர்த்தனா கேட்ட ஒரு விஷயம்தான் இடிக்கிறது. அவள் கேட்டது அப்படி ஒன்றும் யாருக்கும் தெரியாத பெரிய விஷயமல்ல. படிக்காத பெற்றோருக்கும் தெரிந்ததுதான். கேட்டாள்,
“ ஏம்ப்பா 8 ஆம் வகூப்பு வரைக்கும் எல்லாருமே பாஸ் தானேப்பா. இதுகூடத் தெரியாம இவரு என்னப்பா ஹெட்மாஸ்டர்?”
அதானே!

மதிப்புக்குரிய தருணம்




என் வாழ்நாளின் பெரு மதிப்புக்குரிய தருணமாய் மாறிப்போனதாய்த் தமிழ்ப் பள்ளி திருப்பூர் மேடை.
12.04.2015

Wednesday, April 15, 2015

கதை சொல்லி இனியா குட்டி



கதை வாசிப்பது என்பது வேறு. கதை சொல்லுவது என்பது வேறு. ஒரு சாதாரண கதையைக் கூட , கொஞ்சமும் சுவாரசியமற்ற ஒரு கதையைக் கூட ஒரு தேர்ந்த கதை சொல்லியால் கேட்பவர்களிடம் மிக லகுவாக கொண்டு சேர்த்துவிட முடியும்.

கதை சொல்லுவதென்பது கதை எழுதுவதை விடவும் எந்தப் புள்ளியிலும் குறைவானது அல்ல. இன்னும் சொல்லப் போனால் அதைவிடக் கொஞ்சம் கூடுதல் பயிற்சி வேண்டும் இதற்கு. நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். முக பாவங்களை, தேவைக்கேற்ப மாற்றத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு நாட்டிய கலைஞருக்கு உரிய அபிநய பரிச்சயம் இருக்க வேண்டும்.

பாவங்களைக் குழைத்து குரலில் கொண்டு வரும் வித்தை தெரிந்திருக்க வேண்டும்.

மொத்தத்தில் ஒரு கதைசொல்லி ஏறத்தாழ ஒரு கோமாளியாய் இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு கதையை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க முடியும். மூளை எரிச்சலும் உடல் வலியும் கொடுக்கக் கூடிய துறை இது.

ஆகவேதான் கதை சொல்லிகளின் வரவென்பது அரிதாகிப் போனது.

இவை யாவற்றையும் கடந்து தமிழில் நல்ல கதை சொல்லிகளும் இருக்கவே செய்கிறார்கள். அப்படிப் பட்ட தமிழகத்தின் தலை சிறந்த கதை சொல்லிகளில் சிலர் கதை சொல்லி கேட்ட அனுபவம் நமக்கு உண்டு.

இப்போது அந்தத் துறையில் அழுத்தமான தடம் பதிக்க கடுமையான முயற்சியில் தம்பிகள் Vishnupuram Saravanan​ மற்றும் Umanath Selvan​இருவரும் இறங்கியிருக்கிறார்கள்.

ஆனால் இவர்களில் யாருக்கும் குறைந்தவளாகத் தெரியவில்லை இனியா குட்டி. அவள் சொன்ன நண்டுக் கதை இன்னும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. என்ன ஒரு மழலை நேர்த்தி. தாய்த் தமிழ்ப் பள்ளி திருப்பூர்​ ஆண்டு விழாவில் அவள் கதை சொன்ன அழகை கீழ் உள்ள படங்களில் பாருங்களேன்.



மிகப் பெரிய கதை சொல்லியாக அடுத்த பத்தாண்டுகளில் வரக் கூடும் இனியாக் குட்டி.



அதைவிட முக்கியமான ஒன்று கதை சொல்லிகளை தயாரிக்கிற, வார்த்தெடுக்கிற யாரோ ஓரிருவர் அந்தப் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

விடக்கூடாது அவர்களை

Tuesday, April 14, 2015

பிறந்தநாள் செய்தி....



” என் சிந்தனைக்கு எட்டியவரை, உயரிய வாழ்க்கையை போராட்டத்தின் மூலமாகவும் தியாகத்தின் மூலமாகவும் தான் ஒருவன் பெற முடியும். வளமான வாழ்க்கையை நெருப்பாற்ரின் மீது நடை போடாமல் பெற முடியாது. போராட்டம் நம்மைத் தூய்மைப் படுத்துகிறது, போராட்டம் நம்மை பலப் படுத்துகிறது. எந்த ஒரு தாழ்த்தப் பட்ட மனிதனும் போராட்டத்தையும் துன்பத்தையும் சந்திக்கத் தயாராக இல்லை எனில் வாழ்க்கையில் உயர்வு காண முடியாது”
---- தனது 55 வது பிறந்தநாள் செய்தியில் அண்ணல் அம்பேத்கர்

Monday, April 13, 2015

தாய்த் தமிழ்ப் பள்ளி 1



நேற்று திருப்பூர் தாய்த் தமிழ்ப் பள்ளியின் இருபதாம் ஆண்டு விழாவில் பேசப் போயிருந்தேன். யார்மீது வேண்டுமாயினும் சத்தியம் செய்கிறேன் இந்த ஐம்பது ஆண்டுகால வாழ்க்கையில் இதுவரை நான் பார்த்த பள்ளிகளில் ஆகச் சிறந்த பள்ளி.
தாளாளர் மற்றும் அவரது குடும்பத்தினர்கள், அந்தப் பள்ளியின் ஆசிரியைகள், ஊழியர்கள் யார் காலில் வேண்டுமானாலும் நான் விழுவேன். அதிலும் குறிப்பாக தாளாளரின் மனைவி இருக்கிறார்களே...
பெரிதாய் ஒரு கட்டுரை எழுதுவேன். அது வரை அவ்வப்போது அந்த நிகழ்வு குறித்த எனது நினைவலைகள் வந்து கொண்டே இருக்கும்.
எண்பதைக் கடந்த அந்தப் பள்ளியின் காவலர் தனது உடல்நிலையின் பொருட்டு பணியிலிருந்து நின்று விட்டார். இருக்க முடியாமல் தினமும் பள்ளிக்கு வருகிறார். செத்தாலும் இங்கேயே சாகிறேன் என்று. அவரை மேடைக்கு அழைக்கும் போது தாளாளரின் குரல் உடைந்தது.
அவருக்கு மரியாதை செய்யும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.
என்னிடம் முத்தத்தை வாங்கிக் கொண்டு திருப்பித் தராமலே போய்விட்டார். ஒருமுறை போய் அதை வாங்கிக் கொண்டு வந்துவிட வேண்டும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...