Thursday, April 2, 2015

கட்டப் பஞ்சாயத்து

காலையிலிருந்து மூன்றுமுறை ஊருக்குள் தண்டோரா போட்டிருந்தார்கள். எனவே அந்த அரச மரத்தடியில் இருட்டு கவ்வும் முன்னமிருந்தே கூட்டம் கூடத் தொடங்கிவிட்டது.
நாட்டாமைக் காரர்களும் வந்து மரத்தடி திண்ணையில் அமர்ந்து விட்டார்கள். பிராது கொடுத்த இளைஞர்கள் ஒரு ஓரமாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்தார்கள். புளி சக்கையில் நன்கு தேய்த்து விளக்கப் பட்டிருந்த பித்தளை செம்புகளில் தண்ணீர் தயாராயிருந்தது.
எல்லோரும் கூடி வெகு நேரம் கழித்து சர் சர்ரென புழுதியை கிளப்பியபடி இரண்டு கார்கள் வந்து நின்றன. ஒரு காரில் இருந்து சுப்பிரமணியும் இன்னொரு காரிலிருந்து பிச்சு மணியும் இறங்கினார்கள். முன்னவர் அண்ணன் பின்னவர் தம்பி.
நிறையபேர் எழுந்து நின்று வணங்கினார்கள். எழுந்து நின்று வணங்க முடியாமைக்காக நாட்டாமைகள் ஏற்கனவே அண்ணன் தம்பிகளிடம் மன்னிப்பு கேட்டிருக்கக் கூடும். அல்லது பஞ்சாயத்து முடிந்ததும் அதை தனியே போய் செய்துவிடக் கூடும்.


“ ஏண்டா இவனுங்களே... என்னடாப்பா பிராது ஐய்யாங்க மேலே?”
பொது பணத்துல ரெண்டு ஏக்கர் நிலத்துல மூனு மாடி கட்டிடம் கட்டியது.
கொக்கி போட்டு பொது கரண்ட திருடுனது.
என்று அடுக்கத் தொடங்கினார்கள் இளைஞர்கள்
“ அடடா நிறுத்துங்கப்பா, உட்டா அடுக்கிக்கிட்டே போவீங்க” என்ற நாட்டாமை, இந்தப் பிராதுகள விசாரிக்கிறதுக்கு எங்களுக்கும் அவகாசம் வேணும் அய்யாங்களுக்கும் அவகாசம் வேணும்”
இளைஞர்கள் முறைக்கவே,
“ஆனாலும் இந்தப் பிராதுல உண்மை இல்லன்னும் சொல்ல முடியாது. அதனால பஞ்சாயத்து இறுதியா தீர்ப்பு சொல்ற வரைக்கும் அய்யாங்க வூட்டுல இருக்கிற அந்த சைக்கில அவங்க பயன் படுத்தக் கூடாதுன்னு இந்தப் பஞ்சாயத்து தீர்ப்பளிக்குது” என்றார் ஒரு நாட்டாமை.
”அதாவது சைக்கிள மொடக்குறீங்க?”
“அதாவது அவங்க சொத்துல ஒரு பகுதிய மொடக்கி வைக்கிறோம்”
பிறகென்ன பஞ்சாயத்து கலைந்தது.
அந்த சைக்கிளை விட 750 கோடி என்பது மதிப்பீட்டளவில் கொஞ்சம் குறைச்சல்தான் என்பது அந்த இளைஞர்களுக்குப் புரிந்திருந்தது.
பின் குறிப்பு: எதையேனும் பொறுத்திக் கொண்டால் கம்பெனி பொறுப்பல்ல.

4 comments:

  1. சைக்கிள் காத்த புடிங்கியிருந்தா போதும்னு சொல்லாம விட்டாங்களே!

    ReplyDelete
    Replies
    1. சொன்னாலும் சொல்வாங்க தோழர். மிக்க நன்றி

      Delete
  2. இச்சம்பவத்தை எதனுடனும் பொறுத்திப் பார்க்கவில்லை தோழர்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. அது நல்லது. மிக்க நன்றி தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...