Sunday, April 5, 2015

இந்த நாள்... சென்ற ஆண்டு நிலைத்தகவல்

05.04.2014 நிலைத்தகவல்
**********************************  

இன்று காலை 9.30 முதல் 5.30 வரை தேர்தல் பணிக்கான பயிற்சி வகுப்பு.
மாதிரி வாக்குப் பதிவினை 50 வாக்குகளாவது போட்டு நடத்த வேண்டும். பிறகு சுத்தமாய் வாக்குகளை அழித்துக் காட்டி விட்டு தேர்தலை ஆரம்பிக்க வேண்டும்.
வேட்பாளர் அதிகாரிகள் தவிர வேறு யாரையும் உள்ளே விடக் கூடாது.
17A, 17C, தலைமை அலுவர் டைரி போன்றவற்றை சரியாக வைத்திருக்க வேண்டும்.
6 மணிக்கு வளாகத்திற்குள் இருப்பவர்கள் அனைவருக்கும் வாக்களிக்க உரிமை உண்டு.
யாரேனும் ஒரு வாக்காளரை முகவர் எதிர்த்தால் அது சேலஞ்ச்ட் வாக்கு.
தனக்கு வாக்கு இருக்கிறது. அதை யாரோ போட்டு விட்டார்கள் என்று ஒருவர் கோரினால் அது டெண்டெர்ட் வாக்கு
என்பதை ஏறத்தாழ ஏழு மணி நேரம் விடாது திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருந்தோம்.
அந்த அறையில் இருந்தவர்களின் சராசரி வயது 50. பாடம் எடுத்த பெண்ணின் வயது 30 அல்லது 35.
அவ்வப்போது அவர் கேட்டார்,
“ எல்லாருக்கும் புரியுதாப்பா?. யாருக்கேனும் டவுட் இருக்கா?”
இறுதியாய் “ யாருக்குமே டவுட் இல்லையாப்பா? அப்ப நான் ஒழுங்கா நடத்தலையா?”
ரொம்ப உறுத்தவே “ என்ன செல்வம் இந்த சின்னப் பொண்ணு இப்படி ஒருமையில பேசறாங்களே. சொல்லுவோமா? என்றேன்.
அவங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான் சார்.அப்பான்னுதானே சொல்றாங்க. அப்படி எடுத்துக்கலாம்.
நான் அப்படி எடுத்துக் கொள்ளலாம். ஷீலா டீச்சர் எப்படி அப்படி எடுதுக் கொள்ள முடியும்.
ஒன்று சொல்ல வேண்டும்,
வாத்திகளா உங்களுக்கே வகுப்பெடுப்போம் தெரியுமில்ல என்பது அந்தப் பக்கமும், எங்களுக்கேவா என்பது எங்கள் பக்கமும் இல்லை என்று சொல்லிவிட முடியாது

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...