"குட்டீ சுட்டீஸ்" இன்றைய நிகழ்ச்சியின் இறுதிப் பகுதியைப் பார்த்தேன்.
பின்னிட்டான் பின்னி ஒரு பொடிசு.
இன்றைய நிகழ்ச்சி முடிந்ததும்,
" சரி எல்லோரும் கிளம்பலாம். யாருக்கும் பரிசு இல்ல இன்னிக்கு"
கிளம்புவது போல போக்கு காட்டி நகர்ந்த இமாம் அண்ணாச்சியின் கையைப் பிடித்த ஒரு பொடிசு சொன்னான்,
" பரிசு குடுக்காம விடமாட்டேன்"
" என்னடா செய்வ? "
" தாத்தா! அந்த அருவாள எடு "
நான் கீழே விழாதது எப்படி என்றுதான் இன்னமும் விளங்கவில்லை. அப்படிச் சிரித்தேன் குலுங்கிக் குலுங்கி.
அண்ணாச்சி இன்னும் கொஞ்சம் சீண்டினார்,
" எங்கிட்ட மோதிட்ட . அதனால உன்னத் தவிர எல்லோருக்கும் பரிசுடா இன்னிக்கு."
" உங்ககூட கொஞ்சம் பேசனுமே "
சடேரென இறங்கினான்.
" சரி சொல்லுடா "
" காத குடுங்க "
கொடுக்கிறார்,
" சரி சரி நான் அருவாளப் போட்டுடறேன். எனக்கும் கொடுத்துடுங்க"
இரணடு விசயங்களுக்காக மிரண்டு போனேன் மிரண்டு.
ஒன்று,
தனக்கு நியாயமாய் வரவேண்டிய பரிசு மறுக்கப்படும்போது பொங்கிப் புரண்டு பிரவகித்த அவனது கோவமும் சத்திய ஆவேசமும்.
இரண்டு,
தனது கோவமும் ஆவேசமும் தன்னை சறுக்கிவிடும் என்பதை உணர்ந்த மாத்திரத்தில் சடேலன இறங்கி வந்து ஒரு சமரசத்திற்கு வந்து சாதித்த அவனது ஐக்கிய முன்னனித் தந்திரம்.
இருக்குங்க ஏராளம் அவர்களிடம். எடுத்துக்கொள்ள முயற்சி செய்வோம்.
பின் குறிப்பு :
****************
07.04.2013 அன்று நான் எழுதிய நிலைப் பதிவு இது. இப்போது படித்து பார்க்கும்போது குழந்தைகளை இப்படி பயிற்ருவித்திருப்பார்களோ என்றும் தோன்றுகிறது. இயல்பாய் வந்தது எனில் இந்தப் பதிவு அப்படியே சரியானது என்று கொள்ளலாம்.
முந்தைய பதிவாக இருப்பினும் தற்போதும் பொருந்திவருகிறது. இந்நிகழ்வினை பிறிதொரு கோணத்தில் நோக்கும்போது வேதனையாகக்கூட உள்ளதே?
ReplyDeleteமிக்க நன்றிங்க தோழர்
Delete