”என் தோளில் ஒரு மழைத்துளியாய் விழுந்து குருதியாகிப் போனவன்” என்பது மாதிரி ஒருமுறை வைரமுத்து எழுதியிருந்தார்.
என் வாழ்க்கைப் பயணத்தின் ஒரு புள்ளியில் 28 வயதுக் குழந்தை ஒருத்தி அப்பா என்றவாறு என் கையைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தபோது இந்த வரிகள் தம்மை தூசி தட்டிக் கொண்டன.
2014 ஜூன் மாதத்தின் ஒரு நாளில் 28 வயது கிருத்திகா எனக்கு மகளானாள்.
கிருஷ்ணகிரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். இடம் மாறுவது நல்லது எனப் படவே பள்ளிகள் பார்க்க ஆரம்பித்தோம்.
இந்த விவரத்தை புதுக்கோட்டை மாவட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலர் (நர்சரி ) தோழர் இரா.ஜெயா அவர்களிடம் சொன்னபோது உடனே அறந்தாங்கியில் ஒரு பள்ளியில் வேலை வாங்கிக் கொடுத்ததோடு ஒரு நல்ல வீடும் பார்த்து வைத்திருக்கிறார்.
நேற்று மகளது பள்ளியில் அடுத்த கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் படிக்க இருக்கும் மாணவர்களோடு உரையாற்ற என்னை அழைத்திருந்தாள். தாளாளரிடம் பேசிக் கொண்டிருந்தபோது மகளது பணி மிகவும் திருப்திகரமாக இருப்பதாக சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது.
நான் வந்திருப்பது தெரிந்ததும் ஜீவி ( Geevee Kavi) வந்து என்னையும் பொண்ணையும் வீட்டிற்கு அழைத்துப் போனதோடு அவளிடம் எல்லாத்தையும் உங்கப்பாட்டதான் கேட்கனும்னு நினைக்காத நானும் அவனும் 30 ஆண்டுகால நண்பர்கள், என்னிடம் கேள், வீட்டுக்கு அடிக்கடி வந்து போ என்றபோது நெகிழ்ச்சியாக இருந்தது.
தோழர் Kasthuri Rengan அவர்களது துணைவியாரும் , ஜெயா அவர்களின் தோழர் செல்வி என்பவர்களும் தன்னை அக்கறையோடு கவனித்துக் கொள்கிறார்கள் என்றும் சொல்லிக் கொண்டே இருக்கிறாள். இடையில் உடல்நிலை சரியில்லை என்றதும் “ ஏம்பா உடனே புறப்பட்டு வந்திருக்கலாமே” என்றார்களாம். கண்கள் கசிய நன்றியோடு பிள்ளை சொன்னாள்.
இவர்கள் அனைவருக்கும் ஈரம் கசியும் கண்களோடு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.
தோழர் ஜெயாவின் படம் ஒன்றை வீட்டில் மாட்டி வைக்குமாறு குழந்தையிடம் சொல்லியிருக்கிறேன்
இதுவெல்லாம் சரி, 29500 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவள், அங்கேயே இருந்திருப்பின் ஜூனில் குறைந்த பட்சம் 33000 என்ற அளவிலேனும் சம்பளம் ஏறியிருக்கும்,. இதை அறிந்த திருச்செங்கோடு ரெங்கா மெட்ரிக் பள்ளியில் அதைவிடவும் அதிகமாக தருவதாக சொல்லி அழைத்தபோது அதையும் மறுத்து இவை எதைவிடவும் மிகவும் குறைவான சம்பளத்திற்கு இங்கே வந்திருக்கிறாள். யார் கேட்டாலும் அப்பா அங்க வந்து பாக்கறதுக்கு சிரமமா இருக்கு. அதனாலதான், என்கிறாள்.
இவளுக்கு என்ன செய்யப் போகிறேன்
அன்பின் வலிமை அத்தகையது
ReplyDeleteதம 2
ஆமாம்தான் தோழர். திருப்பி அடைக்கவே முடியாதது
Deleteஅன்பிற்கு இணையானது எதுவுமில்லை. அதனை அனுபவிக்கும்போது கிடைக்கும் மன நிறைவு வேறு எதிலும் கிடைப்பதில்லை.
ReplyDeleteகளப்பணியில் நாட்டாணி சென்ற அனுபவத்தைக் காண அழைக்கிறேன்.வருக. http://ponnibuddha.blogspot.com/2015/04/blog-post.html
மிக்க நன்றி தோழர். தங்களது வலையை அவசியம் பார்க்கிறேன் தோழர்
Delete