Wednesday, April 1, 2015

கையேந்துகிறேன்

மூன்று வாரங்களுக்கு முன்னால் வெற்றிப் பேரொளி Kavimamani Vetripperoli) திடீரென என்னை அழைத்தார். சுகன் கவலைக்கிடமாக இருப்பதாக சொன்னார். அவரது துணைவியாரோடு பேசினேன். போக முடியவில்லை.
சுகனின் தங்கை கணவர் பொன்மலை ரயில்வே மருத்துவ மனையில் இருந்த போது தினமும் நானும் எனது மகளும் சென்று வருவோம். அவரை எனது மகள் பலமுறை சுத்தம் செய்து விட்டிருக்கிறாள். அப்படிபட்ட நான் சுகனை பார்க்க போகவில்லை. போகவும் விரும்பவில்லை.
ஐ. சி யூனிட்டில் போய் அவனை என்னால் பார்க்க முடியாது. நெஞ்சுக்கு அவ்வளவு நெருக்கமான தோழன்.
எனது தொடர் விசாரிப்புகள் அவன் தேறி வருவதாக சொல்லவே நான் அவன் வீடு திரும்பட்டும் என்றிருந்துவிட்டேன்.
ஆனால் இன்று வேறுமாதிரி செய்திகளை கேட்டு உடைந்து போகிறேன்.
அவனைக் காப்பாற்ற தேவையான பணத்திற்கு வீட்டில் உள்ளவர்கள் அவதிப் படுகிறார்கள் என்று தோழர் ஷாஜஹான் வெளியிட்ட நிலைத் தகவலை கிருஷ்ணப்பிரியா ( Hema Manoj Krishnapriya ) டேக் செய்திருக்கிறார்.
செத்தே போனேன்.
சுகன் சாக மாட்டான். என் மரணத்திற்குப் பிறகான அடுத்த மாத சுகனில் என் அட்டைப் படம் போட வேண்டும் என்று கேட்டிருக்கிறேன். அதுவரைக்குமேனும் அவன் இருப்பான்.
எத்தனை படைப்பாளிகளை உருவாக்கி இருக்கிறான்.
உதவுவோம்
Name of account; Soundarasugan
Account Number: 021202000005306
Bank: Indian Overseas Bank,
Nilagiri circle branch, Thanjavur
IFSC: IOBA0000212 ...
பி. குறிப்பு: அனுப்பியவர்கள் அருள்கூர்ந்து கமெண்டில் தகவல் தரவும்

2 comments:

  1. அன்புள்ள எட்வின்

    வணககம். மருத்துவமனை போய் நான் சுகனைப் பார்த்தேன். நன்றாகப் பேசினார். உங்கள் வாக்கினை அப்படியே வழிமொழிகறேன். பல படைப்பாளிகளை உருவாக்கியவர் சுகன். அவருக்கு எதுவும் நேராது. என்னால் இயன்றதை அவசியம் சுகனுக்கு செய்வேன்.நன்றிகள்.

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...