Wednesday, April 15, 2015

கதை சொல்லி இனியா குட்டி



கதை வாசிப்பது என்பது வேறு. கதை சொல்லுவது என்பது வேறு. ஒரு சாதாரண கதையைக் கூட , கொஞ்சமும் சுவாரசியமற்ற ஒரு கதையைக் கூட ஒரு தேர்ந்த கதை சொல்லியால் கேட்பவர்களிடம் மிக லகுவாக கொண்டு சேர்த்துவிட முடியும்.

கதை சொல்லுவதென்பது கதை எழுதுவதை விடவும் எந்தப் புள்ளியிலும் குறைவானது அல்ல. இன்னும் சொல்லப் போனால் அதைவிடக் கொஞ்சம் கூடுதல் பயிற்சி வேண்டும் இதற்கு. நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். முக பாவங்களை, தேவைக்கேற்ப மாற்றத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு நாட்டிய கலைஞருக்கு உரிய அபிநய பரிச்சயம் இருக்க வேண்டும்.

பாவங்களைக் குழைத்து குரலில் கொண்டு வரும் வித்தை தெரிந்திருக்க வேண்டும்.

மொத்தத்தில் ஒரு கதைசொல்லி ஏறத்தாழ ஒரு கோமாளியாய் இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு கதையை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க முடியும். மூளை எரிச்சலும் உடல் வலியும் கொடுக்கக் கூடிய துறை இது.

ஆகவேதான் கதை சொல்லிகளின் வரவென்பது அரிதாகிப் போனது.

இவை யாவற்றையும் கடந்து தமிழில் நல்ல கதை சொல்லிகளும் இருக்கவே செய்கிறார்கள். அப்படிப் பட்ட தமிழகத்தின் தலை சிறந்த கதை சொல்லிகளில் சிலர் கதை சொல்லி கேட்ட அனுபவம் நமக்கு உண்டு.

இப்போது அந்தத் துறையில் அழுத்தமான தடம் பதிக்க கடுமையான முயற்சியில் தம்பிகள் Vishnupuram Saravanan​ மற்றும் Umanath Selvan​இருவரும் இறங்கியிருக்கிறார்கள்.

ஆனால் இவர்களில் யாருக்கும் குறைந்தவளாகத் தெரியவில்லை இனியா குட்டி. அவள் சொன்ன நண்டுக் கதை இன்னும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. என்ன ஒரு மழலை நேர்த்தி. தாய்த் தமிழ்ப் பள்ளி திருப்பூர்​ ஆண்டு விழாவில் அவள் கதை சொன்ன அழகை கீழ் உள்ள படங்களில் பாருங்களேன்.



மிகப் பெரிய கதை சொல்லியாக அடுத்த பத்தாண்டுகளில் வரக் கூடும் இனியாக் குட்டி.



அதைவிட முக்கியமான ஒன்று கதை சொல்லிகளை தயாரிக்கிற, வார்த்தெடுக்கிற யாரோ ஓரிருவர் அந்தப் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

விடக்கூடாது அவர்களை

4 comments:

  1. இனியாவை நன்றாக ஊக்குவித்தல் வேண்டும்;
    வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. வளரும் தலைமுறை மீதான நம்பிக்கை இன்னும் வலுப்படுகிறது. இனியாக்குட்டிக்கும் வார்த்தெடுக்கும் ஆசிரியர்களுக்கும் இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. எவ்வளவு பாராட்டினாலும் தகும் கீதா

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...