Monday, April 6, 2015

06.04.2013 நிலைத் தகவல்

06.04.2013 அன்றைய நிலைத் தகவல்
**************************************************    

"பாபர்நாமா" வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
சிரமப்பட வேண்டியிருக்கிறது.
நூல் குறித்து பிறகு விரிவாய் பேச வேண்டும். ஆனால் ஒன்றை இப்போதே சொல்லிவிட வேண்டும்,
கவிதைகளின் காதலனாய் இருந்திருக்கிறான். கவிஞர்களைக் கொண்டாடி இருக்கிறான்.
ஹாசன் யாகூப் பெக் எனும் இவனது அலுவலர் கவிஞராயிருந்திருக்கிறார். அவரது கவிதையை கொண்டாடி மகிழ்கிறான். அவரது வரிகளில் மூன்றினை நமக்குத் தருகிறான்,
" ஓ பீனிக்ஸ் பறவையே திரும்பிவா
நீ இல்லாவிட்டால் என்னுடைய எலும்புகளை
அண்டங்காக்கை அள்ளிக் கொண்டு போய்விடும் "
தம்மைவிட அழகாக எழுதும் தம் மனைவியையே எழுத விடாமல் முடக்கிப்போடும் கவியரசர்களையே காணும் நமக்கு தன் ஊழியனின் கவிதையைக் கொண்டாடும் பாபர் மின்னவே செய்கிறார்.
மரத் தண்டுகளில், கற்றாளையில் தனது காதலன் அல்லது காதலியின் பெயரைப் பதியும் வழக்கம் நமக்குத்தெரியும்.
ஒரு ஊற்றருகே ஜாம்ஷெட் என்ற பேரரசன் எழுதிவைத்திருந்த கவிதையைக் காண்கிறான். அதை நமக்கு அப்படியே பந்தி வைக்கிறான்.
" நம்மைப் போலவே இவ்வூற்றைப் பற்றிப் பேசி, பலர் கண்மூடிக் கண் திறக்குமுன் காலமாகி விட்டார்கள்
வீரத்தாலும் வல்லமையாலும் உலகை வென்றிருக்கிறோம், ஆனால்
அவற்றை இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றதில்லை."
பேரரசன் ஒருவனுக்குப் பரிந்த இந்த எளிய உண்மை விடிந்து எழுந்தால் தான் மந்திரியா என்றே உறுதியாய்த் தெரியாத நம்ம ஊர் மந்திரிகளுக்கு எப்போது புரியும்?

2 comments:

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...