மீனாட்சி கீர்த்தனாவின் வகுப்புத் தோழி. இருவரும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இருவருமே நன்கு படிப்பவர்கள்தாம்.
நாளை இருவருக்கும் சமூக அறிவியல் தேர்வு. காலையில் பள்ளிக்கு வந்த மீனாட்சியை கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அவரது தந்தை சீரியசாக இருக்கிறார் என்று அழைத்துப் போயிருக்கிறார்கள். உண்மையில் அவர் ஒரு விபத்தில் இறந்திருக்கிறார். அவரது தங்கையின் கணவர் இறந்து நாளை 30 ஆம் நாள் என்பதால் காரியத்திற்காக பொருள்கள் வாங்குவதற்காக போய்க் கொண்டிருந்தபோதுதான் இந்த விபத்து நடந்திருக்கிறது.
கணிதத்திலும் அறிவியலிலும் 100% எடுப்பாள் என்று எதிர்பார்க்கிறார்கள்.
இறந்தவரின் தந்தை அதாவது மீனாட்சியின் தாத்தா தனது மகனது மரணத்தை மிகுந்த சந்தோசத்துடன் கொண்டாடியிருக்கிறார். ஏன் மக தாலியில்லாம இருக்கிறப்ப உனக்குமட்டுமெதுக்குடி தாலி என்று கத்தியிருக்கிறார்.
அழுது கொண்டிருந்த மீனாட்சி தடுத்த அவளது அண்ணனை அப்புறப் படுத்திவிட்டு அவளது தாத்தாவைப் பார்த்து “ ஏய் எழுந்து வீட்ட விட்ட ஓடிப்போயிடு. இல்லன்னா மரியாத கெட்டுடும் “ என்று கத்தியிருக்கிறாள்.
சோகத்தில் இருந்த குழந்தையைப் பார்த்து அந்தக் கிழவர் “ அப்பன் போன பிறகு சாப்பாட்டுக்கு ஏங்கிட்டதானேடி வருவீங்க” என்று மனிதத் தன்மையே கொஞ்சமும் இல்லாமல் பேசியிருக்கிறார்.
”நான் பத்து முடிக்கிறேன், எங்கண்ணன் படிக்கிறான். நல்லா படிச்சு எங்கம்மாவ பார்த்துக்குவோம், போய்யா வெளியே” என்று தெறித்திருக்கிறாள்.
கலங்கிய கீர்த்தனாவிடம் வேண்டுமானால் போய் வரலாமா என்றபோது தான் போனால் அதிகமாய் அழுது நாளை தேர்வை சரியா எழுத மாட்டாளென்றும் பரிட்சை முடிந்ததும் போகலாம் என்றும் சொன்னாள்.
சரியென்றே பட்டது.
துக்கம் விசாரிக்க போன ஆசிரியைகளிடம் நாளை கண்டிப்பாக வந்து தேர்வை எழுதுவதாக சொல்லியிருக்கிறாள்.
ஜெயிப்படா சாமி.
உறுதியான மனங்கள் ஜெயிப்பது நிஜம்.
ReplyDeleteநிச்சயமா தோழர்
Deleteமீனாட்சி அவசியம் ஜெயிக்கணும் எட்வின். அந்தக் குழந்தையின் சத்திய ஆவேசம் என் கண்களில் கண்ணீரை மட்டுமல்ல, அவர்களின் வெற்றிப் பயணம் தொடரவேண்டும் எனும் உறுதியையும் உன் எழுத்து எனக்குள் உசுப்பிவிட்டது. அவரது படிப்புக்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்வோம். கீர்த்தனாவிடம் சொல்லி வை.
ReplyDeleteஆமாங்கண்ணா. சேர்ந்தே செய்வோம்
Delete