Sunday, April 19, 2015

எலும்புகளை ஒடித்தாலும்....

நாளையக் கூட்டத்திற்காக தயாரித்துக் கொண்டிருந்தபோது குணங்குடி மஸ்தான் அவர்களை வாசிக்க வாசிக்க ஆச்சரியத்தால் விரிந்தே போனேன்.
ஆண் ஆண்டாளாகவும், கொஞ்சம் பட்டிணத்தாராகவும், நிறைய சித்தராகவும் தெரிகிறார்.
விடக் கூடாது, தேடி முழுசாய் வாசித்துவிட வேண்டும்.
சொல்லொன்றும் செயலொன்றுமாய் வாழும் மனிதன் எவனாயினும் அவன் குருவேயாயினும் துவைத்து எடுக்கிறார் மனிதர். எழுதுகிறார் பாருங்கள்,
“மோட்சம் பெறாமல் போனாலும் போகட்டும்
முடி தரித்து
முடிய வாழ்ந்து
முடிந்து போனாலும் போகட்டும்
குடிக்கக் கஞ்சியின்றி
குண்டிக்குத் துணியின்றி
குருடனாய் போனாலும் போகட்டும்
என்னை அடித்தாலும்
எலும்புகளை ஒடித்தாலும்
அவர்களுக்கு அஞ்ச மாட்டேன்
அந்தக்
கெடுதல் செய்பவர்கள்
என் கடை மயிர்தான்”
அப்பப்பா...
விடக் கூடாது அவரை

4 comments:

  1. என்னையும் வாசிக்கத் தூண்டியுள்ளீர்கள்
    அவசியம் தேடி வாங்கிப் படிக்கின்றேன்
    நன்றி தோழர்
    தம 2

    ReplyDelete
    Replies
    1. நல்லது தோழர். போகப் போக விரிகிறது வானம்

      Delete
  2. இந்த வயதிலும் இப்படி தேடித் தேடி படிப்பதை உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் தோழர்

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் படிக்க வேண்டிய வயதில் படிக்காமல் போனதால் வந்த வினை

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...