காட்டம்மா....
என் அம்மாயி.
சொந்தப்பெயர் காளியம்மாள். என் பெரிய தங்கை குழந்தையாய் இருந்தபோது காளியம்மா என்று அழைக்க வராமல் காட்டம்மா என்று அழைக்கத் தொடங்கியிருக்கிறாள். இன்று ஊரில் பெரும்பாலோர் அழைப்பது காட்டம்மாதான்.
வயது எண்பதைத் தாண்டும்.
மொட்டை மாடியில் வடகம் காயப் போட்டுவிட்டு இறங்குகையில் தவறி விழுந்து இடுப்புக்கும் தொடைக்கும் இடையே உள்ள இணைப்பெலும்பு உடைந்து விட்டது.
எருமை மாடு மேய்த்து நான் படிக்க உதவிய என் செல்லக் கிழவி.
முத்தமிடாமல் என்னை எப்போதும் அனுப்பியதில்லை. இன்றும் மருத்துவ மனையின் முன் காரில் படுக்க வைத்திருந்த கிழவியின் கிட்டே போய்,
" காட்டம்மா "
" சாமி"
என் கையைப் பிடித்து அழுதபடியே முத்தமிட்டது.
ஸ்கேன், ஈ சி ஜி, எக்கோ, இரத்தம் மற்றும் சிறுநீர் சோதனை எல்லாம் முடித்த பின்பு அறுவை அவசியம் என்றும் ஆனால் வயதின் காரணமாக அறுவையின் போதோ அறவை நடந்து இரண்டு நாட்களுக்குள்ளோ மாரடைப்பு வர கணிசமாக வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவர் சொல்கிறார்.
இதைக் கேட்ட மாத்திரத்தில் தங்கையும் விக்டோரியாவும் அழுது தீர்த்துவிட்டனர். நமக்கு அதைச் செய்தும் ஆற்றிக் கொள்ள முடியவில்லை.
மருத்துவர் நாளை சொல்ல சொல்லியிருக்கிறார்.
நான் ரிஸ்க் எடுக்கலாம் என உள்ளேன்.
நடப்ப காட்டம்மா நீ.
இது நடந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. கிழவி மொட்டை மாடிக்குப் போய்க் கொண்டுதானிருக்கிறது.மருத்துவர் செல்வம் அவர்களை நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்
நெகிழ்வு
ReplyDeleteதம +
மிக்க நன்றி மது
Deleteஎன்னோட பாட்டி காட்டம்மாவின் நினைவு வந்ததை தவிர்க்க முடியவில்லை... கடைசி குழந்தை 2 வயதிருக்கும் போது கணவனை பறிகொடுத்து எட்டு குழந்தைகளை (6 பெண் குழந்தைகள்) சிறப்பாக வளர்த்த இரும்பு மனுசி.... காட்டம்மாக்கள் எப்பவும் இரும்பு மனுசிகள்தானோ....
ReplyDeleteமிக்க நன்றிங்க எழில்
DeleteGreat Grand ma..!!
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteஎனக்கு என் ஆத்தாவின் (அப்பாவின் அம்மா) நினைவு வந்துவிட்டது.
ReplyDeleteமிக்க நன்றிங்க தோழர்
Delete