Wednesday, April 1, 2015

தவிச்ச முயல் வெளியீடு

29.03.15 அன்று சென்னை உமாபதி சிற்றரங்கத்தில் நடந்த வினோதரனின் “தவிச்ச முயல்” சிறுகதை நூல் வெளியீட்டு விழாவில் நூலை அறிமுகம் செய்து வைத்து பேசினேன்.

உலகத் தரத்திற்கு, உள்ளூர் தரத்திற்கு என்றெல்லாம் பொய் சொல்லவில்லை. ஆனால் வாசிக்கவேண்டியதும், வாசிப்பவர்களை மகிழ்ச்சிப் படுத்துவதுமான நூல்.
இரண்டு விசயங்களை அந்த நூல் குறித்து குறிப்பிட்டு பேசினேன்.
1. சாயலே இல்லாத தனித்துவமான மொழி நடை.
2.சோதனை முயற்சி
அந்த நூலில் சில கவிதைகளும் உள்ளன. ”உக்குட்டி” அவற்றில் எனக்கு மிகவும் பிடித்தது.
(R/2/Z40/H37/CIVIL1/10) இது ஒரு கதையின் தலைப்பு. இதை வாசித்தால் போரின் வலி எத்தகையது என்று உணர இயலும். இன்னொரு முக்கியமான விஷயம் இதை கவிதை என்றும் கொள்ளலாம். அப்படியொரு சோதனை முயற்சி. இந்தப் பிள்ளை வளர ஆரம்பிக்கும் போதுதான் இந்த முயற்சி அங்கீகரிக்கப் படும்.
வினோதரனின் தாயார் இலங்கையிலிருந்து சென்னை வந்திருக்கிறார் புத்தக வெளியீட்டிற்காக. வினோதரன் லண்டனிலிருந்து வந்திருக்கிறார். ஆக, இந்த நூல் வெளியீடு தாயையும் பிள்ளையையும் சந்திக்க வைத்திருக்கிறது. அந்த வகையில் இலக்கியம் தாயையும் பிள்ளையையும் கொஞ்ச நாட்களுக்கு சேர்த்த்து ஒரு நல்லதை செய்திருக்கிறது.
அடுத்தடுத்த இவனது நூல்கள் இவனைக் கொண்டாட வைக்கும்.

கூட்டாய் புகைப் படம் எடுக்கப் போகும் போது ஒரு தோழர் கைப்பற்றி, ரொம்பச் சரியாகவும் நேர்த்தியாகவும் பேசினீர்கள் தோழர் என்றார். அறிமுகம் இல்லாதவர் என்பதால் அவரைப் பார்க்கிறேன். தறியோடு நாவலின் ஆசிரியர் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டபோது அப்படியே மகிழ்ச்சியில் உறைந்து போனேன். அப்பா, எவ்வளவு எளிமை. தோழர் Seema Senthil இடம் நான் நாவலை கேட்டு வாங்கினேன். பேசிக் கொண்டிருந்தோம்.
எனது முகநூல் செய்தியைப் பார்த்து என்னை பார்க்க வந்ததாக அவர் கூறியபோது சிலிர்த்தது. இதற்கெல்லாம் என்னை பொருட்டாக்கிக் கொள்ள வேண்டும்.
போகிறபோது தோழர் காசி அனந்தன் ரொம்ப நல்லா பேசறீங்க. கேட்கிறமாதிரி இருக்கு என்று சொன்னது கேட்டு எனக்கு ஒன்றும் ஆகவில்லை என்று சொன்னால் நான் ஒரு பொய்யன்.
யுகமாயினி சித்தனுக்கு கடமை பட்டிருக்கிறேன்.

கூட்டாய் புகைப் படம் எடுக்கப் போகும் போது ஒரு தோழர் கைப்பற்றி, ரொம்பச் சரியாகவும் நேர்த்தியாகவும் பேசினீர்கள் தோழர் என்றார். அறிமுகம் இல்லாதவர் என்பதால் அவரைப் பார்க்கிறேன். தறியோடு நாவலின் ஆசிரியர் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டபோது அப்படியே மகிழ்ச்சியில் உறைந்து போனேன். அப்பா, எவ்வளவு எளிமை. தோழர் Seema Senthil இடம் நான் நாவலை கேட்டு வாங்கினேன். பேசிக் கொண்டிருந்தோம்.
எனது முகநூல் செய்தியைப் பார்த்து என்னை பார்க்க வந்ததாக அவர் கூறியபோது சிலிர்த்தது. இதற்கெல்லாம் என்னை பொருட்டாக்கிக் கொள்ள வேண்டும்.
எத்தனை வேறுபாடுகள் அவருக்கும் எனக்கும். அன்றுகூட அவர் இருக்கிறார் எனதற்காக அவருக்கு உகந்ததை பேசவில்லை. என் அரசியலையும் நிலைப்பாட்டையும்தான் பேசினேன். ஆனால்  போகிறபோது தோழர் காசி அனந்தன் ரொம்ப நல்லா பேசறீங்க. கேட்கிறமாதிரி இருக்கு என்று சொன்னது கேட்டு எனக்கு ஒன்றும் ஆகவில்லை என்று சொன்னால் நான் ஒரு பொய்யன்.
யுகமாயினி சித்தனுக்கு கடமை பட்டிருக்கிறேன்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...