Thursday, April 16, 2015

இதுகூடத் தெரியாம....

2013 ஏப்ரல் 16 அன்றைய எனது நிலைத் தலவல்களில் ஒன்று
***********************************************************************************
7C ஒரு நல்ல தொடர் என்று பரவலாக எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள். நானும் அவ்வப்போது பார்க்கிற வகையில் அதை மறுப்பதற்கான வலுவான காரணங்கள் ஏதும் இருப்பதாகப் படவில்லை.
ஸ்டாலின் என்ற 7C யின் வகுப்பாசிரியர் இருக்கிறார் பாருங்கள். ஏதோ அவர்தான் மண்ணில் இருக்கிற அனைத்து ஆசிரியர்களுக்கும் முன் மாதிரியான் ஆசிரியர் என்பது மாதிரி ஒரு பிம்பத்தைக் கட்டமைக்க செய்த முயற்சியில் பெருமளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
கீர்த்தனா ஸ்டாலினின் ரசிகை. அடிக்கடி சொல்வாள்,
“ சார்னா இப்படி இருக்கனும்”
விடுங்கள்,
“ இவர மாதிரி வரணும்” என்கிற ஆசை ஆசிரியர்கள் பலர் மத்தியிலும் , ஆசிரியர் பணிக்காக காத்திருப்பவர்கள் மத்தியிலும் இருக்கவே இருக்கிறது.
ஆனாலும் வால்ட்டர் வெற்றிவேல் மாதிரியோ, சௌத்திரி மாதிரியோ ஒரு மிகையான போலியான பிம்பமாக இது இல்லை என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான்.
மிகை , குறை, அது ,இது என்பது மாதிரி நிறைய விஷயங்கள் இருப்பினும் அது பற்றியெல்லாம் இப்போது பேசப் போவதில்லை.
ஸ்டாலின் மருத்துவமனையில் இருக்கிறார். ஸ்டாலினுக்கு வேண்டாத ஆசிரியர் ஒருவர் 7C மாணவர்களைப் பார்த்து நீங்க ஒருத்தனும் பாஸ் பண்ணப் போரது இல்ல என்கிறார்.
தலைமை ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து உருக்கமாக எப்படியாவது கஷ்டப்பட்டு படிச்சு பாஸாயிடுங்கடா. அதுதான் நாம ஸ்டாலின் சாருக்கு காட்டுற மரியாதை என்கிறார்.
பிள்ளைகள் வெறி கொண்டு படிக்கிறார்கள்.
இதற்காக மாணவர்கள் திரண்டு வந்து தலைமை ஆசிரியரைஒ சிறப்பு வகுப்பு எடுக்க கேட்கிறார்கள். அவரும் உருகி சரி என்கிறார்.
7C மாணவர்களை எப்படியாவது தேர்ச்சி பெற வைத்துவிடுவது என்று ஸ்டாலினுக்கு ஆதரவான அணி முனைகிறது. அணி மாற்றங்களும் நடக்கின்றன.
எல்லாமே அழகான விஷயங்கள்தான். மாணவர்களைத் தயார் செய்வது என்பதும் சரிதான்.
இன்று கீர்த்தனா கேட்ட ஒரு விஷயம்தான் இடிக்கிறது. அவள் கேட்டது அப்படி ஒன்றும் யாருக்கும் தெரியாத பெரிய விஷயமல்ல. படிக்காத பெற்றோருக்கும் தெரிந்ததுதான். கேட்டாள்,
“ ஏம்ப்பா 8 ஆம் வகூப்பு வரைக்கும் எல்லாருமே பாஸ் தானேப்பா. இதுகூடத் தெரியாம இவரு என்னப்பா ஹெட்மாஸ்டர்?”
அதானே!

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...