இங்க விட்டா சமயபுரம், தோல்கேட், சத்திரம்தான் நிக்கும் என்று படிக்கட்டில் நின்று கொண்டிருந்த நடத்துனர் சொல்லிக் கொண்டே இருந்தார்.
புறப்பட்ட பேருந்து சிறுவாச்சூரில் நின்றது.
அங்கும் ஏற வந்தவர்களிடம் இத உட்டா சமயபுரம், தோல்கேட், சத்திரம்தான் நிற்கும் என்றார்.
ஆலத்தூர் கேட், இரூர், பாடாலூர், நெடுங்கூர், அகரம், சிறுகனூர், கொணலை எல்லா இடங்களிலும் ஏற வந்த பயணிகளிடம் இதையே சொன்னார்.
சமயபுரம் வந்தது.
ஏறவந்த பயணிகளிடம் சொன்னார்,
” இதவிட்டா சமயபுரம், தோல்கேட், சத்திரம்தான் நிற்கும்.”
வாக்கு மாத்திப் பேசாதவர்கள் இப்பவும் இருக்கிறார்கள்தான்
நிலைத் தகவல் 10.04.2015
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்