Saturday, April 11, 2015

தீண்டாமை ஒழிப்பு முன்னனி மாநாடு



வெகு காலத்திற்குப் பிறகு பெரம்பலூரில் பழைய தோழர்களை சந்திக்கிற ஒரு வாய்ப்பினை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனியின் மாநாடு வழங்கியது.

மேடையின் ஒரு புறம் அயோத்திதாசர் படமும் மறுபுறம் அண்ணல் அம்பேத்கார் அவர்களின் படமும் இருந்தன. இதைப் பார்த்ததும் மகிழ்ந்து போனேன். நான் எனக்குக் கிடைக்கிற வாய்ப்புகளில் எல்லாம் அயோத்திதாசரைப் பற்றி பேசிக் கொண்டுதானிருக்கிறேன். இடதுசாரிகள் தங்களது கூட்டங்களில், மாநாடுகளில் அவரைப் பற்றி இன்னும் கூடுதலாக பேச வேண்டும் அவரது படங்களை இன்னும் அதிகமாய் பயன்படுத்த வேண்டும் என்று ஆசைப் படுபவன்.  

அந்த வகையில் இந்த மாநாடு என்னை பேரதிகமாக உசுப்பிவிட்டது என்றே சொல்லவேண்டும். கிடைத்த நேரத்தில் அயோத்திதாசரைப் பற்றி பேசிவிட்டு வந்தேன்.

“இதுக்குத்தான் தோழர் நீ வேணுங்கறது. திரும்பவும் உட்டுட்டு போயிடாத தோழா” என்று தோழர்கள் உரிமையோடும் அன்போடும் சொன்னபோது கறைந்துதான் போனேன்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...