Friday, June 16, 2017

வேண்டல்....

எமது பள்ளியில் எளிய அளவில் ஒரு வாசிப்புக் கூடம் ஏற்பாடு செய்ய இருக்கிறோம்.
உங்களிடம் உள்ள பழைய குழந்தைகள் நூல்களை அனுப்பி உதவுங்களேன்
இரா எட்வின்
தலைமை ஆசிரியர்
அருள்மிகு மாரியம்மன் மேல்நிலைப் பள்ளி
சமயபுரம் 621112
செல் 984259759

Monday, June 12, 2017

குறைந்தபட்சம் குடிநீரையேனும்

நேற்று நெய்வேலியில் நடைபெற்ற கடலூர் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாமில் உரையாற்றிவிட்டு வந்தேன். அது குறித்து பிறகு பேசலாம். CITU வின் இரண்டாவது சுரங்கக் கிளை வெளியிட்டிருந்த துண்டறிக்கை ஒன்று கிடைத்தது. அதில் பத்துப் பதினைந்து கோரிக்கைகள் இருந்தன.
ஏறத்தாழ இத்துப்போன நிலையிலிருக்கும் லாரியில் சுரங்க ஊழியர்களுக்கு குடிநீர் வழங்கப் படுகிறது. இதனால் நீரோடு இரும்புத்துருவும் கலந்து வந்து விடுகிறது. அதனால் ஊழியர்களின் உடல்நலம் ம்கவும் பாதிக்கப் படுகிறது. எனவே சில்வர் கண்டெய்னர்களி குடிநீர் கொண்டுவந்து வழங்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும் நிறைவேற்றாத நிர்வாகம் இப்போதேனும் அதை நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் ஒரு கோரிக்கை இருந்தது.
சுரங்கத்திற்குள் கரியோடு கரியாய் வெந்து சாகும் ஊழியர்களை பலமுறை இதற்காக கோரிக்கை வைக்க வைத்ததே பாவம்.
குறைந்தபட்சம் நல்ல குடிநீருக்காவது நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்

கவிதை 81

கடத்தித் தொலைத்திருக்கலாம்
ஒரு பார்வை வழியாக
தனது மகிழ்ச்சியை
முயற்சித்திருக்கலாம்
திருப்தியா என்று அறிந்துகொள்ளவேனும்
குறைந்த பட்சம்
சொல்லாமல் கொள்ளாமல்
ஜோலி முடிந்ததும் ஓடத் தொடங்கிய ஆண்நாயை
முடிந்த அளவு வைது தீர்த்த பெண்நாய்
தாளவே தாளாமல்
விரட்டிப் போய்
கடித்துவிட்டு நகர்ந்தது பின் தொடையை
காயத்தை நக்கத் தொடங்கியது
ஆண்நாய்
புணர்வு செமபோல
என நினைத்தபடி

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...