நேற்று நெய்வேலியில் நடைபெற்ற கடலூர் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாமில் உரையாற்றிவிட்டு வந்தேன். அது குறித்து பிறகு பேசலாம். CITU வின் இரண்டாவது சுரங்கக் கிளை வெளியிட்டிருந்த துண்டறிக்கை ஒன்று கிடைத்தது. அதில் பத்துப் பதினைந்து கோரிக்கைகள் இருந்தன.
ஏறத்தாழ இத்துப்போன நிலையிலிருக்கும் லாரியில் சுரங்க ஊழியர்களுக்கு குடிநீர் வழங்கப் படுகிறது. இதனால் நீரோடு இரும்புத்துருவும் கலந்து வந்து விடுகிறது. அதனால் ஊழியர்களின் உடல்நலம் ம்கவும் பாதிக்கப் படுகிறது. எனவே சில்வர் கண்டெய்னர்களி குடிநீர் கொண்டுவந்து வழங்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும் நிறைவேற்றாத நிர்வாகம் இப்போதேனும் அதை நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் ஒரு கோரிக்கை இருந்தது.
சுரங்கத்திற்குள் கரியோடு கரியாய் வெந்து சாகும் ஊழியர்களை பலமுறை இதற்காக கோரிக்கை வைக்க வைத்ததே பாவம்.
குறைந்தபட்சம் நல்ல குடிநீருக்காவது நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்