”இப்படியெல்லாம் வெறுக்க வேண்டிய அவசியமென்ன”
என்று கேட்டிருக்கிறார் ஐரோம் ஷர்மிளா
இதனை,
ஷர்மிளாவின் விரல்களில் ஒன்று என்னை நோக்கியும் நீள்வதை உணர்ந்திருக்கிறேன்
அதனால்தான் இத்தனைக்குப் பிறகும் உங்களை அன்பிற்குரியவர் என்று என்னால் விளிக்க முடிகிறது
என்னதான் ஆயிற்று உங்களுக்கு? என்றெல்லாம் கேட்கிற அளவிற்கு கிறுக்கெல்லாம் இல்லை நான்
நீங்கள் அப்படித்தான்
ஆனாலும் எங்களுக்கு இரண்டு இருக்கிறது
மக்களளைச் சந்திப்பது என்பது ஒன்று
முடியுமால் உங்களை அசைக்கவைத்து செத்துக்கொண்டிருக்கிற மக்களின் எண்ணிக்கையை குறைக்க முயற்சிப்பது என்பது இரண்டு
போகிற இடமெல்லாம் குறளைச் சொல்கிறீர்கள்
குறள் மீது கொஞ்சமேனும் உங்களுக்கு மரியாதை இருக்குமானால் தயவு செய்து
541 வது குறளையும்
அதற்கான சாலமன் பாப்பையாவின் விளக்கத்தையும் வாசியுங்கள்
“ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்து செய்வதே முறை”
இது அந்தக் குறள்
”குடிமக்கள் செய்யும் குற்றத்தை ஆய்ந்து எவரிடத்தும் விருப்பு வெறுப்பு இல்லாது,
நடு நிலையோடு,
நூல்வழி ஆராய்ந்து,
குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்குவதே
நேர்மையான ஆட்சி”
இது அந்தக் குறளுக்கு பாப்பையா தரும் விளக்கம்
பாப்பையா உங்களுக்க வேண்டப்படாதவரும் அல்ல
மணிப்பூர் கலவரம் குறித்து ஆராய்ந்து குற்றவாளிகளைத் தண்டியுங்கள்
அவர்கள் நமது வாக்குகள் என்று தவறினீர்கள் எனில்
காலம் மக்களை சரியாக வழிநடத்தும்
#சாமங்கவிய ஒன்றரைமணி
26.07.2023