Wednesday, July 26, 2023

பாஜக விரும்பிகிற ஆட்டத்தை நீங்கள் ஆடாதீர்கள்

 ஒரு மரம் விழுந்தால் கொஞ்சம் சுற்றுப் பகுதியில் அதிர்வுகள் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே

மணிப்பூர் என்பது இந்தியா என்ற ஒரு உடலின் ஒரு அங்கம்
ஒரு உடலின் ஒரு அவயத்தில் ஊறு ஏற்பட்டால் அது அடுத்தடுத்த அவயங்களை பாதித்து மொத்த உடலையும் காவு கேட்கும்
இந்த உண்மையை மணிப்பூர் கலவரமும் நமக்கு உணர்த்த ஆரம்பித்துள்ளது
மணிப்பூர் கலவரத்தின் அதிர்வுகளை மிசோரமும் அசாமும் உணர ஆரம்பித்திருக்கின்றன
மிசோரத்தில் உள்ள பாம்ரா என்ற அமைப்பு மெய்தி மக்கள் மிசோரத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறியிருக்கிறது
சாலை வழியாகவும் ஆகாய மார்க்கமாகவும் மெய்தி மக்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர்
மிசோரத்தில் உள்ள மெய்தி மக்களில் பெரும்பாலானோர் அசாமில் இருந்து சென்றவர்கள்
எனவே
அசாமில் உள்ள ”மணிப்பூர் - அசாம் மாணவர் கூட்டமைப்பு” இதனால் எரிச்சலடைந்துள்ளது
அசாமில் வசிக்கும் மிசோரம் மக்கள் உடனடியாக அசாமை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்த அமைப்பு எச்சரித்திருக்கிறது
இந்த நிலையில்,
”பாம்ரா” அமைப்பினரை அழைத்து அவர்களோடு உரையாடலை நடத்திய பின்பு
மெய்தி மக்கள் மிசோரமைவிட்டு வெளியேற வேண்டாம் என்றும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும்
மிசோரம் முதல்வர் ஜோரம் தங்கா கேட்டுக் கொண்டிருக்கிறார்
இந்த அளவில் மெல்லிசாக ஒரு அப்பாடா போட்டுக் கொள்ளலாம் என்று பார்த்தால்
அதற்கும் வழி இல்லை
மணிப்பூரில் குக்கிகளுக்கு தனி நிர்வாகக் கவுன்சில் உருவாக்க வேண்டும் என்று ஜோரம் தங்கா கேட்கிறார்
மணிப்பூர் பழங்குடியினருக்கும் மிசோரம் பழங்குடியினருக்கும் உறவு இருக்கும் நிலையில்
இது மிசோரத்தை அகண்ட மிசோரமாக்கும் முயற்சி என்று
இன்னொரு புகைச்சல் கிளம்பியுள்ளது
”நான் இந்தியாவை நன்கு உணர்ந்திருக்கிறேன். என்ன செய்தால் இந்தியாவின் பகுதிகள் எப்படி எதிர்வினையாற்றும் என்பது எனக்குத் தெரியும்.
வடகிழக்கு இந்தியாவில் நீங்கள் ஒரு மோசமான காரியத்தை ஆரம்பித்து விட்டீர்கள்.
அது இந்தியாவிற்கு நல்லதல்ல. உங்களுக்கும் நல்லதல்ல.
எனவே அதை உடனடியாக நிறுத்துங்கள்” என்று
ஏற்கனவே ஒருமுறை நாடாளுமன்றத்தில் ராகுல் கூறியதாக ”லிபர்டி” யூட்யூப் சேனலுக்கான ஒரு நேர்காணாலில் பத்திரிக்கையாளர் கார்த்திகேயன் கூறுகிறார்
எனில்,
இரண்டு புலனாகிறது
இதை இவர்கள் திட்டமிட்டு ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது ஒன்று
இதை நன்கு உணர்ந்ததோடு மட்டுமல்லாமல் இவர்களை எச்சரிக்கவும் செய்திருக்கிறார் ராகுல் என்பது இரண்டு
என்ன செய்யலாம்?
ஒரு மாபெரும் போராட்டம் தேவை
அடிக்கடி சசிகாந்த் சொல்வதை எதிர்க்கட்சிகளுக்கு நினைவூட்ட வேண்டும்
பாஜக விரும்பிகிற ஆட்டத்தை நீங்கள் ஆடாதீர்கள்
அவர்களை நீங்கள் தடுப்பாட்டதை ஆட வையுங்கள்
அல்லது
தேசம் எரிகிறது. அந்நிய சக்திகள் ஆடுகிறார்கள். எங்களைவிட்டால் ஆளில்லை என்று வந்து விடுவார்கள்
நம் மக்கள் இளகியவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...