Showing posts with label செய்தித் தாள். Show all posts
Showing posts with label செய்தித் தாள். Show all posts

Saturday, January 30, 2016

ஒரு மழை வந்து போகவேண்டும் நூல் வெளியீடு


24.01.2016 அன்று பெரம்பலூரில் நடந்த  தோழர் செல்வகுமார் கவிதைநூல் வெளியீட்டு விழா குறித்து தினமணி 

Thursday, May 7, 2015

சல்மான்



குற்றவாளி என்று நீதிமன்றம் சொன்ன பின்னர், நடந்தது குற்றம் என்று நீதிமன்றம் தெளிவு படுத்தியபின் “ சாலையில் நாய்கள் போல படுத்தால் நாய்கள் அடிபட்டு சாவதுபோல சாகத்தான் வேண்டும்” என்று பேசும் கனவான்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட முடியுமா?

Thursday, April 2, 2015

கட்டப் பஞ்சாயத்து

காலையிலிருந்து மூன்றுமுறை ஊருக்குள் தண்டோரா போட்டிருந்தார்கள். எனவே அந்த அரச மரத்தடியில் இருட்டு கவ்வும் முன்னமிருந்தே கூட்டம் கூடத் தொடங்கிவிட்டது.
நாட்டாமைக் காரர்களும் வந்து மரத்தடி திண்ணையில் அமர்ந்து விட்டார்கள். பிராது கொடுத்த இளைஞர்கள் ஒரு ஓரமாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்தார்கள். புளி சக்கையில் நன்கு தேய்த்து விளக்கப் பட்டிருந்த பித்தளை செம்புகளில் தண்ணீர் தயாராயிருந்தது.
எல்லோரும் கூடி வெகு நேரம் கழித்து சர் சர்ரென புழுதியை கிளப்பியபடி இரண்டு கார்கள் வந்து நின்றன. ஒரு காரில் இருந்து சுப்பிரமணியும் இன்னொரு காரிலிருந்து பிச்சு மணியும் இறங்கினார்கள். முன்னவர் அண்ணன் பின்னவர் தம்பி.
நிறையபேர் எழுந்து நின்று வணங்கினார்கள். எழுந்து நின்று வணங்க முடியாமைக்காக நாட்டாமைகள் ஏற்கனவே அண்ணன் தம்பிகளிடம் மன்னிப்பு கேட்டிருக்கக் கூடும். அல்லது பஞ்சாயத்து முடிந்ததும் அதை தனியே போய் செய்துவிடக் கூடும்.


“ ஏண்டா இவனுங்களே... என்னடாப்பா பிராது ஐய்யாங்க மேலே?”
பொது பணத்துல ரெண்டு ஏக்கர் நிலத்துல மூனு மாடி கட்டிடம் கட்டியது.
கொக்கி போட்டு பொது கரண்ட திருடுனது.
என்று அடுக்கத் தொடங்கினார்கள் இளைஞர்கள்
“ அடடா நிறுத்துங்கப்பா, உட்டா அடுக்கிக்கிட்டே போவீங்க” என்ற நாட்டாமை, இந்தப் பிராதுகள விசாரிக்கிறதுக்கு எங்களுக்கும் அவகாசம் வேணும் அய்யாங்களுக்கும் அவகாசம் வேணும்”
இளைஞர்கள் முறைக்கவே,
“ஆனாலும் இந்தப் பிராதுல உண்மை இல்லன்னும் சொல்ல முடியாது. அதனால பஞ்சாயத்து இறுதியா தீர்ப்பு சொல்ற வரைக்கும் அய்யாங்க வூட்டுல இருக்கிற அந்த சைக்கில அவங்க பயன் படுத்தக் கூடாதுன்னு இந்தப் பஞ்சாயத்து தீர்ப்பளிக்குது” என்றார் ஒரு நாட்டாமை.
”அதாவது சைக்கிள மொடக்குறீங்க?”
“அதாவது அவங்க சொத்துல ஒரு பகுதிய மொடக்கி வைக்கிறோம்”
பிறகென்ன பஞ்சாயத்து கலைந்தது.
அந்த சைக்கிளை விட 750 கோடி என்பது மதிப்பீட்டளவில் கொஞ்சம் குறைச்சல்தான் என்பது அந்த இளைஞர்களுக்குப் புரிந்திருந்தது.
பின் குறிப்பு: எதையேனும் பொறுத்திக் கொண்டால் கம்பெனி பொறுப்பல்ல.

கோகோவும் அரசும்

கோகோ கோலோ நிறுவனத்திற்கு 27 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு தாரை வார்த்திருக்கிறது என்கிற செய்தி அதிகாரப் பூர்வமாகியிருக்கிறது.
பொதுவாகவே இதுமாதிரி நிறுவனங்களுக்கு உரிமை கொடுக்கும்போது அந்தப் பகுதியின் நிலத்தடி நீர் வளம் அதலப் பாதாளத்திற்கு போகும். எப்படியும் நிர்ணயிக்கப் பட்ட அளவிற்கு மேலான நீரை இவர்கள் உறிஞ்சுவார்கள். எனவே ஒரு கட்டத்தில் சுத்தமாய் வறண்டு போகும்.
போக இவர்கள் நீரை சுத்தப் படுத்தும்போது ஒரு லிட்டர் நல்ல நீர் எடுப்பதற்கு குறைந்த பட்சம் 6 லிட்டர் நீரை கழிவாக்க வேண்டி வரும். இது அந்தப் பகுதியை மாசு படுத்தும். குறிப்பாக அந்தப் பகுதியின் நீர் வளத்தை மாசுப் படுத்தும்.
ஒரு பாமரத்தனமான கேள்வி,
“ ஏன் அவர்கள் நாட்டில் நிலத்திற்கு கீழே நீரே இல்லையா?”
இது குறித்து அவையில் மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர் தோழர் பாலகிருஷ்ணன் அவர்கள் விடாது கேட்கவே அமைச்சர் மாண்பமை தங்கமணி அவர்கள் அதற்கு மேலும் நழுவ முடியாது என்கிற நிலையில் 27 ஏக்கர் நிலம் ஒதுக்கியது உண்மைதான். ஆனால் அது குறித்த அரசின் நிலைப்பாட்டை இப்போது கூற முடியாது என்றும் அந்த நிறுவனம் சுற்ருச் சூழல் சான்று பெற விண்ணப்பிக்கும்போது அரசு தனது நிலைபாட்டை தெளிவு படுத்தும் என்று கூறியுள்ளார் என்கிற செய்தியை இன்றைய தீக்கதிர் சொல்கிறது.
பெண் கொடுத்துவிட்டோம், வீடு பார்த்து தனி குடித்தனமும் வைத்து விட்டோம் ஆனால் அவர்கள் குடும்பம் நடத்தலாமா வேண்டாமா என்பதில் எங்கள் நிலை பாட்டை இப்போது சொல்ல முடியாது. அதற்கு 10 நாட்கள் ஆகும் என்பது போல் அல்லவா இது இருக்கிறது.
இதுகூட பரவாயில்லை. 27 ஏக்கர் நிலத்தை கொடுத்தது உண்மைதான் என்று அமைச்சர் சொன்னதுமே பதறிப் போனவராய் மாண்பமை அவைத் தலைவர் இனி இதுகுறித்து யாரும் பேசக் கூடாது என்று உத்தரவு போட்டதோடு மீறி பேசினால் அது அவைக் குறிப்பில் ஏறாது என்று சொல்லியிருக்கிறார்.
மக்கள் சக்தியை ஒன்றிணைத்து போராட்டத்தை நடத்த வேண்டிய பொறுப்பு சமூகத்திற்கு இருக்கிறது.
இடதுசாரிகள் முன்கை எடுக்க வேண்டும் என்பது என் ஆசை.

Friday, August 22, 2014

செய்தி 1

17.08.2014 அன்று பொள்ளாச்சியில் நான் பேசியது குறித்து 18.08.2014 அன்று தி இந்து எழுதியது....





இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...