Sunday, October 28, 2012

நதி பயணப் படும் பாதை

சென்ற ஆண்டு இதே மாதிரி ஒரு மழை நாளில் கீர்த்தனாவோடு அமர்ந்து ஏதோ ஒரு செய்தி சேனலைப் பார்த்துக் கொண் டிருந்தேன்.

வழக்கமாக செய்தி சேனலை விரும்பவே விரும்பாத கீர்த்தி அடுத்த நாள் தனக்கு விடுமுறையா என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் ஏறத்தாழ இரண்டு மணி நேரமாக என்னோடு அமர்ந்து செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆக,

மழைக்கு பிள்ளைகள் செய்தி சேனலுக்குள் ஒதுங்குகிறார்கள். இதற்காகவேனும் மழையை ஒரு முறை வாழ்த்திவிடத்தான் வேண்டும்.

 மதுராந்தகம், வீராணம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் கரைகள் உடைந்துவிடும் அபாயம் இருப்பதாகவும், ஆகவே உபரி நீரைத் திறந்து விட இருப்பதாகவும், நீரின் பயணப் பாதையிலிருக்கும் மக்கள் வீடுகளைக் காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் எல்லா செய்தி சேனல்களும் திரும்பத் திரும்ப அறிவுறுத்திக் கொண்டே இருந்தன.

நிரம்பி வழியும் ஏரிகளையும் அவை மாறி மாறி காட்டின. ஏறத்தாழ எல்லா ஏரிகளில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப் பட்டு முரட்டுக் கோவத்தோடு வெள்ளமெனப் பாய்வதைப் பார்க்க முடிந்தது.

இப்படி சீறிப் பாய்ந்து கொண்டிருந்த வெள்ளம் அதற்குள்ளாக ஒரு டசன் உயிர்களைக் காவு கொண்டிருந்தது. நூற்றுக் கணக்கான குடிசைகள் ஆயிரக் கணக்கான குடும்பங்கள் சின்னாபின்னமாய் சிதைக்கப் பட்டுக் கிடந்தன.

உயிர்ச் சேதத்திற்கு, கால் நடை சேதத்திற்கு, உடமை சேதத்திற்கு, குடிசை சேதத்திற்கு என்று வகை வாரியாக நிவாரணத் தொகைகளை அரசு அறிவித்துக் கொண்டிருந்தது.

கீர்த்தி கேட்டாள்,

“ஏம்பா இப்ப இந்த தண்ணி எல்லாம் எங்க போகும்?”

“கடலுக்கு”

”வருஷா வருஷம் இப்படித்தானா?”

“ ஆமாம்”

” ஏம்பா, அப்ப இப்படி கொடுக்குற காசுல புதுசா ஒரு ஏரி வெட்டிட முடியாதா?”

“ எதுக்கு கேக்கற? வெட்டப் போறியா?”

எனது நக்கலை ஒரு பொருட்டெனவே அவள் மதிக்கவில்லை என்றுதான் தோன்றியது.

“லூசு மாதிரி உளறாம கேட்டதுக்கு பதில் சொல்லுப்பா”

“ வெட்டலாம் தான்”

“ அப்ப ஏன் அரசாங்கம் வெட்ட மாட்டெங்கறாங்க?”

“ வெட்டினா மட்டும்..?”

“ . வெட்டினா தண்ணியும் கடலுக்குப் போகாம பத்திரமா இருக்கும், ஜனங்களும் சாக மாட்டாங்க, மாடு சாகாது, குடிசையும் சாயாதில்ல ...”

இதைக் கேட்ட போது அவள் ஏழாம் வகுப்புதான் படித்துக் கொண்டிருந்தாள்.

இது ஏதோ தனிப்பட்ட கீர்த்தனாவின் எண்ணமாகக் கொள்ளக் கூடாது. அவளொத்த குழந்தைகளின் பொதுப் புத்தியாகத்தான் இதைக் கொள்ள வேண்டும்.

எனில், ஏழாம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கு புரிகிற இந்த விஷயம் அரசுக்குப் புரியாதா?

புரியும் எனில் ஏன் அதை நிறை வேற்றவில்லை?

கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம்,

ஒவ்வொரு ஆண்டும் செம்பரம்பாக்கம், மதுராந்தகம், மற்றும் வீராணம் ஏரிகளில் இருந்து வெளியேற்றப் படும் தண்ணீரை மூன்று ஏரிகள் வெட்டி சேமித்தால் கிடைக்கும் நீரின் அளவு ஏறத்தாழ ஒரு செம்பரம்பாக்கம் நீரளவு ஆகும்.  இது கொஞ்சம் கூடலாம் குறையலாம்.

இது போக ஏரிகள், குளங்கள், குட்டைகள், கசிவு நீர் குட்டைகள், தடுப்பணைகள், வாய்க்கால்கள் போன்றவற்றை காலமுறையில் தூர் எடுப்பதன் மூலமும் நதிகளில் ஏரிகளில் மற்றும் நீர் நிலைகளில் மண்டிக் கிடக்கும் ஆகாயத்தாமரை, சீத்தக் கருவை போன்றவற்றை அப்புறப் படுத்துதல் போன்றவற்றை செய்தாலே 25 விழுக்காடு நீரை நம்மால் சேமிக்க முடியும்.

இது போக மழைக் காலங்களில் தெருக்களில் ஓடும் கீற்றோடைகளை நன்கு திட்டமிட்டு ஊருக்கு வெளியே கொண்டு போய் ஒன்றிணைத்து சிறு சிறு ஓடைகளாக்கி அவற்றை ஒன்றிணைத்து ஒரு குளமாக்கி அல்லது தடுப்பணைகள் அமைப்பதாக் கொள்ளுங்கள்.

ஊருக்கு ஊர் இப்படி அமைத்தால், அரசு நினைத்து நேர்மையாக தொடங்கினால் ஒரே வாரத்தில் இது சாத்தியம்தான். ஊருக்கு ஊர் புதிது புதிதாய் குளங்கள் , தடுப்பணைகள் என்று மலர்ந்து அனைத்திலும் மழை நீர் தேங்கி நின்றால் அது எவ்வளவு மகத்தான நீராதார சக்தியாக மாறும்.

முதலில் இது மாதிரி பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நீர் நிலைகளுக்கு வரும் நீர்ப் பாதைகளை ஆக்கிரமித்துள்ள எதுவாயினும், அவற்றின் பின்னால் எத்தகையதொரு சக்தி வாய்ந்த அரசியல் சக்திகள் இருப்பினும் அவற்றை அப்புறப் படுத்த வேண்டும். அப்படி செய்வதன் மூலம் மழை நீர் விரையமாகாமல் நீர் நிலைகளுக்கு வந்து சேரும்.

போக,
நிலத்தில் பெய்யும் மழையில் 35 விழுக்காடு வெப்பத்தால் ஆவியாகி வீணாவதாக 09.10.2012 அன்று வெளியான தினமணிக் கட்டுரையில் ராமையா சொல்கிறார். நினைக்கவே கொடுமையாக இருக்கிறது. யோசித்துப் பாருங்கள்,  மழை நீரில் நமக்கு பயனாகும் நீரின் அளவே 35 சதவிகிதத்திற்கும் சற்று குறைவாகத்தான் இருக்கும். எனில் நாம் பயன்படுத்தும் நீரின் அளவி மிக ஒத்த அளவு நீர் ஆவியாகிறது என்றால் அதைத் தடுத்தால் நீர்ப் பஞ்சமே இருக்காதே.

நீர் ஏன் ஆவியாகிறது?

புவியும் வெளியும் அளவுக்கு அதிகமாய் வெப்பமடைவதால்தான்.

பூமி ஏன் வெப்பமடைகிறது?

தாராளமயம் நிர்ப்பந்திக்க, உலக மயம் உந்தித் தள்ள விரைவுபடும் நகர் மயமாதலின் பொருட்டு அழிக்கப் படும் வனங்கள் இதற்கான முக்கிய காரணங்களுள் முதன்மையானது.

வனங்கள் அழிக்கப் படுவதன் மூலம் பூமி சூடாவது ஒரு புறமெனில் காட்டைத் தவிர வேறு எதையும் அறிந்திராத மலை மக்களும் சேர்த்தே அழிக்கப் படுகிறார்கள் என்பதுதான் கொடுமையான விசயம். அதை விடவும் கொடுமை என்னவெனில் அவர்கள் படும் சித்திரவதைதான்.

வனங்களின் அழிவு வனங்களோடு சம்பந்தப்பட்ட பறவைகளும் விலங்குகளும் இன்னபிற ஜந்துக்களும் சேர்ந்தே அழிக்கப் படுகின்றன. இவை புவி வெப்பத்தை அதிகப் படுத்துவதுடன் இயற்கைச் சமநிலையையும் குலைத்துப் போடுகின்றன.

போக, வேக வேகமாக எழும்பும் பெரிய பெரிய தொழிற்சாலைகளும் தமது பங்கிற்கு புகையை கக்கிவிட்டு செல்கின்றன.

இவ்வாறு பூமி வெப்பப் படுவதால் நீரற்று ஒரு அழிவு சாத்திப் படும் அதே வேளையில் நீர் பெருத்து பூமி அழியவும் வாய்ப்பிருக்கிறது. புவி வெப்பமடைவதால் துருவப் பகுதிகளில் பனி விரைவாய் உருகும் சாத்தியம் உள்ளது. அப்படி துருவப் பனி உருகும் போது அது கடலில் கலந்து கடலின் மட்டம் பெருமளவு உயரும் அபாயம் உள்ளது. அப்படி உபரியாய் உயரும் கடல் நீர் நிலப் பரப்பில் புகுந்து நிலத்தை மூழ்கடிக்கும் அபாயம் விரைவில் நிகழக் கூடும்.

 ஆக அது குறித்து உலகத் தலைவர்கள் உட்கார்ந்து முடிவுக்கு வர வேண்டும். அவ்வளவு எளிதாக செய்வார்களா?

அவரவர்களுக்கு ஆயிரமாயிரம் பிரச்சினைகள். இதில் கேவலம் பொது மக்களைப் பற்றி சிந்திக்க ஏது நேரம்?

பிறகு, என்ன செய்வது. அவர்களை இது குறித்து சிந்திக்க வைக்க வேண்டும். இதன் அவசியத்தைப் பொதுப் புத்திக்கு உரிய வழிகளில் கொண்டு போக வேண்டும். பொதுத் திரள் கிளர்ந்து எழுந்தால் மட்டுமே இது சாத்தியம்.

பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் நிலம் சூடாக தன்னாலான பங்களிப்பை செய்கின்றன.

சொந்தமாக மகிழுந்து வைத்திருப்பது என்பது இன்றைய மத்திய தர வர்க்கத்து அடையாளமாகிப் போனது. சற்ரேரக் குறைய 40 விழுக்காடு மகிழுந்துகளில் ஒருவர் மட்டுமே பயணிக்கக் கூடிய நிலைதான் இன்றைக்கு உள்ளது. அரசு இதைத் தடுக்க ஏதேனும் செய்தாக வேண்டும். குறைந்த பட்சம் மகிழுந்துகளுக்கான வரியை உயர்த்தலாம். அதன் மூலம் கௌரவத்திற்காகவும், எளிய தவணையில் கிடைக்கிறதே என்பதற்காகவும்
மகிழுந்து வாங்குபவர்களின் எண்னிக்கை பெருமளவு குறைந்து தேவைப் படுவோர் மட்டுமே வாங்கும் நிலை ஏற்படும்.

இதுவும் பெருமளவு வெப்பத்தைக் குறைக்க உதவும்.

அடுத்து மணல் கொள்ளை. காவிரியில் மணலின் உயரம் 100 மீட்டராக இருந்தது என்று வைத்துக் கொள்வோம். இதைத் தோராயமாகத்தான் சொல்கிறேன். தமிழ்நாட்டில் காவிரியின் பரப்பளவு 43856 சதுர கிலோமீட்டர் என்று விக்கி பீடியா சொல்கிறது.

எனில்,
438.56 கன கிலோமீட்டர் மணல் என்றாகிறது. எனில், 438.56 கன கிலோமீட்டர் அளவிற்கு ஈரம் என்றாகிறது. இப்போது ஏறத்தாழ 50 அடி ஆழத்திற்கு மணலை கொள்ளை அடித்தாயிற்று. எனில், இப்போது காவிரியின் மணல் பரப்பளவு 219.28 கன கிலோமீட்டர் என்றாகிறது. ஆகவே காவிரி மணலின் ஈரப்பதமும் 438.56 கன கிலோமீட்டரிலிருந்து 219.28 கன கிலோமீட்டர் என்றாகிறது.

மணல் குறித்த இந்தப் புள்ளிவிவரம் எல்லா ஆறுகளுக்கும் பொருந்தவே செய்யும். ஆக மணல் கொள்ளை பாதியளவு ஆற்று மணல் ஈரப் பதத்தை களவு கொண்டிருக்கிறது.

இதன் விளைவாக ஆற்று நீரின் வேகமும் அதிகரித்திருக்கிறது. இதன் சோக விளைவாக ஆடிப் பதினெட்டன்று காவிரியில் ஆழ்குழாய் கிணறு வெட்டி நீரெடுத்து குளிக்க வெண்டியதாயிற்று.

மேற்சொன்ன காரணங்களின் விளைவாக சராசரியா 40 மீட்டர் ஆழத்தில் தென்பட்ட நிலத்தடிநீர் மட்டம் இப்போது 200 மீட்டருக்கு நகர்ந்திருக்கிறது.

இதே நிலையினை கர்நாடகாவும் எடுக்கும் பட்சத்தில் காவிரி நீரை அவர்கள் மிகத் தாராள மனதுடன் தர இயலும்.

அதுமட்டும் அல்ல இவை சரி செய்யப் படும் போது எங்கள் உடமைகளும் உயிர்களும் கூட தப்பும்.

அரச கனவான்களே,

எங்களது உயிரின் மதிப்பும் , எங்கள் வலியும் உங்களுக்கு புரியாது போயினும்
இவற்றை நீங்கள் செய்து முடித்தால் வருடா வருடம் நீங்கள் தர வேண்டிய நிவாரணத் தொகை மிச்சமாகும்.

அதற்காகவேனும் இதில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள்.

நன்றி : “காக்கைச் சிறகினிலே”

59 comments:

  1. SUPERB.. PLEASE WRITE SOMETHING ABOUT SRILANKAN TAMIL PEOPLE'S PEACE........

    ReplyDelete
  2. awesome..... please write something about srilankan tamil people's peace........

    ReplyDelete
  3. அருமை அய்யா

    ReplyDelete

  4. ஏழாம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கு புரிகிற இந்த விஷயம் அரசுக்குப் புரியாதா?

    அருமை நண்பரே .........

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாய் புரியும்.ஆனால் செய்யத்தான் மாட்டார்கள்

      Delete
  5. அரசு இதைத் தடுக்க ஏதேனும் செய்தாக வேண்டும். குறைந்த பட்சம் மகிழுந்துகளுக்கான வரியை உயர்த்தலாம். அதன் மூலம் கௌரவத்திற்காகவும், எளிய தவணையில் கிடைக்கிறதே என்பதற்காகவும்
    மகிழுந்து வாங்குபவர்களின் எண்னிக்கை பெருமளவு குறைந்து தேவைப் படுவோர் மட்டுமே வாங்கும் நிலை ஏற்படும்.//இன்றையப் பேருந்துக் கட்டண உயர்வைப் பார்க்கும்போது மகிழ்வுந்து வாங்குவதே சிறப்பெனத் தோன்றுகிறது.வரியை உயர்த்த அரசுக்கு நீங்க பரிதுரைக்கிறீங்க...அவங்களுக்குத் தெரியாது பாருங்க...இந்தப் பத்தியைத் தவிர மற்றவை சரிதான்...அருமை தோழர்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர். அதுவும் சேர்த்தே சரியாகப் படுகிறது.

      Delete
  6. அரச கனவான்களே,

    எங்களது உயிரின் மதிப்பும் , எங்கள் வலியும் உங்களுக்கு புரியாது போயினும்
    இவற்றை நீங்கள் செய்து முடித்தால் வருடா வருடம் நீங்கள் தர வேண்டிய நிவாரணத் தொகை மிச்சமாகும்.

    அதற்காகவேனும் இதில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள்./// அருமை நண்பரே .. நல்ல பகிர்வு .. நல்ல விண்ணப்பம் ..

    ReplyDelete
  7. nice article.. need to incorporate these ideas in our upcoming water policy 2012. the previous policy 2002 does not think on these lines..
    I hope to bring this to attention of policy makers..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர். ஊதுகிற சங்கை ஊதி வைப்போம்

      Delete
    2. will add to my data-base on water policies..we may also look to incorporate in our legal arguments for projects.. Environment Impact Analysis and Environmental Clearance..wish I have time to build on these points..in projects analysis..
      praying for energy and strength to intervene at appropriate level..
      Thanks for this intellectual poking.. and inspiration..

      Delete
    3. மிக்க நன்றி தோழர். உண்மையாகவே தெம்பு பிறக்கிறது

      Delete
  8. அருமையான கட்டுரை என்பதை விட ,அருமையான தகவல் என்பதே சிறப்பு... தோழருக்கு ....இன்னும் உங்களிடம் அதிகம் எதிர்பார்கிறோம் ....நாங்கள் அறிந்துகொள்ள ....புரிந்து கொள்ள ..நன்றி நட்புடன் சசி

    ReplyDelete
  9. நல்ல பதிவு..நன்றி..
    தொலைநோக்கு பார்வையை தொலைத்த அரசுகள்..
    கிடைக்கும் தருணத்தில் தண்ணீரை சேமிக்க
    சரியான திட்டமிடாது, தண்ணீருக்காக அண்டை
    மாநிலத்தை கையேந்தி நிற்கும் அவலம்..
    இனியாவது ஒரு விதி செய்வார்களா?
    நதிகளை இணைத்திட..உபரி நீர் வீணாகும்
    இழிநிலை நீங்கிட..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர். செய்ய வேண்டும். செய்வார்கள் என்று நம்ப முடியவில்லை

      Delete
  10. சிறப்பான கட்டுரை...ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் பல இடங்களில் கட்டப்பட வேண்டும்...செம்பரம்பாக்கம் வடிகாலன அடையார் ஆற்றில் பல இடங்களில் தடுப்பணைகள் கட்ட முடியும்.. மணல் கொள்ளை தனியாக விவாதிக்க படும் அளவிற்கு பெரிய பிரச்சனை..ஆனால் ஆட்சியாளர்கள் செய்ய வேண்டுமே?..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர். செய்யும் வரை ஜனக்களை உசுப்பி போராட வேண்டும்

      Delete
  11. நதி பயணப்படும் பாதை கட்டுரை மிகவும் அருமை.உங்களின் விருப்பம் நல்லாத்தானிருக்கு.நிறைவேறுவதும் நிறைவேற்றுவதும் எப்போது நம் கையில் வரும்?புவியை பாதுகாக்கும் விழிப்புணர்வு மட்டுமே இன்றைய அவசிய தேவை.விழிப்படைந்த சமூகம் நிச்சயம் மாற்றும்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர். மிகக் கடுமையாக போராட வேண்டும் தோழர்

      Delete
  12. நதி பயணப்படும் பாதை உண்மையிலேயே நல்ல கட்டுரை.இதனை அணைவரும் படித்து தன்னால் ஆன புவியை காக்கும் பங்கினை மேற்கொள்ளவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியாக சொன்னீர்கள் தோழர்

      Delete
  13. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க அய்யா

      Delete
  14. வணக்கம் தோழரே! 'இல்லாமையைவிட, இயலாமை கொடியது' என்பார்கள் இதுதான், நம் நாட்டிற்கு உள்ள சோதனை. மழை இல்லை, இல்லையென எதிபார்ப்பதும், மழை பெய்யும்போது நீரை சேமிக்கமுடியாமல் ,வீணாய் கடலில் கலப்பதும்தான் கதியாகி போனது. தேசிய நதிகளை இணைப்போம், உலக நதிகளை ஒன்றுசேர்ப்போம் என்னும் அரசியல்வாதிகள் , பத்திரியாளரோடு பக்கத்து மாநிலங்களில் தண்ணீர் இரவல் கேட்டுநிற்கும் நிலையோடு முடிந்துவிடுகிறது. உயிர்கள் வாழ அத்தியாவசியமான, நீராதாரத்தைப் பற்றிய தங்களின் கட்டுரைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சரியாய் சொன்னீர்கள் தோழர்.
      மிக்க நன்றி

      Delete
  15. அருமையான கட்டுரை சார்
    உண்மைலேயே சிறந்த ஆக்கம்
    உறங்கும் சோம்பல் சமூகம் உணரட்டும்

    ReplyDelete
    Replies
    1. உணரச் செய்ய வேண்டும் தோழர். மிக்க நன்றி

      Delete
  16. சமூகத்துக்குத் தேவையான தமிழ் சமூகம் எளிதில் மறந்து போன சிந்தனை! பயணப்படட்டும் நதி தேடல் நிறைவுறும் வரை!

    ReplyDelete
  17. வணக்கம் தோழரே.“ தங்களின் கட்டுரையை இருமுறை வாசித்தேன்,முகநூலிலும், தங்களின் வலைப்பூவிலும்..அற்புதமாக தகவல்களைத தொகுத்து தந்துள்ளீர்கள்.இந்த நாட்டில் உள்ள பெரும் பிரச்சினையே, மழைநீரை சரியான முறையில் தேக்கிவைத்து பாதுகாத்து மக்களுக்கு வழங்காததுதான். கட்டுரை என்னவோ, கீர்த்தியுடனான உரையாடலாய் துவங்கினாலும், அது ஆற்றொழுக்கு போல, மக்களின் பலவித பிரச்சினைகளைத் தொட்டு, பறந்து பட்ட தளங்களில் பயணித்து, இறுதியில் அரசின் கையாலாகத்தனத்தை, ஊழலை,அக்கறையின்மையை, வெளிச்சம் போட்டு சுட்டிக்காட்டி இருக்கிறது. நான் ஒரு அறிவியல் ஆசிரியர், சூழலியல் கருத்தாளர் என்ற முறையில் எண்ணிப்பார்க்கும்போது,தங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து தகவல்களும் ஆழமாக சிந்திக்க வேண்டியவையே.
    //வெட்டினா தண்ணியும் கடலுக்குப் போகாம பத்திரமா இருக்கும், ஜனங்களும் சாக மாட்டாங்க, மாடு சாகாது, குடிசையும் சாயாதில்ல ...”//
    //ஊருக்கு ஊர் இப்படி அமைத்தால், அரசு நினைத்து நேர்மையாக தொடங்கினால் ஒரே வாரத்தில் இது சாத்தியம்தான். ஊருக்கு ஊர் புதிது புதிதாய் குளங்கள் , தடுப்பணைகள் என்று மலர்ந்து அனைத்திலும் மழை நீர் தேங்கி நின்றால் அது எவ்வளவு மகத்தான நீராதார சக்தியாக மாறும்.//

    //மேற்சொன்ன காரணங்களின் விளைவாக சராசரியா 40 மீட்டர் ஆழத்தில் தென்பட்ட நிலத்தடிநீர் மட்டம் இப்போது 200 மீட்டருக்கு நகர்ந்திருக்கிறது// உங்களைப் போன்றோரின் சமூக அக்கறையே இந்த நாட்டைக் காக்கும் மனிதத்தை மீட்டெடுக்கவும், உதவும். ஓர் ஆங்கில ஆசிரியராக இருந்தும் கூட, ஒரு தொலை நோக்கு பார்வையுடன், இந்த கட்டுரையை உருவாக்கிய தங்களின் மூளைக்கும், சமூத்தின் மேல் காதலும் கொண்ட தங்களின் உள்ளத்துக்கும் கோடானு கோடி நன்றிகளும், வாழ்த்துகளும், இந்நாட்டின் குடிமகன் என்ற முறையில்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர் மோகனா

      Delete
  18. மிக அருமையான கட்டுரை. மகிழூந்துக்கு வரியை உயர்த்தவேண்டும் என்ற ஒரு விஷயத்தில் மட்டும் மாறுபடுகிறேன். ஏனென்றால் மிக பெரும் பணக்காரர்கள் மட்டுமே அனுபவித்து வந்த மகிழூந்து இன்று நடுத்தர வர்க்கத்தினருக்கும் வாங்க முடிகிறது. இன்னும் இது சாதாரண மனிதனுக்கும் வாங்க முடியும் விலையில் தயாரிக்கப்பட வேண்டும். யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டுமே. இதனால் ஏற்படும் மாசை குறிக்க விஞ்ஞானிகள் மாற்று வழிகளை கண்டுபிடிக்க வேண்டும்.

    ReplyDelete
  19. நன்றி தோழரே,
    அருமையான சிந்தனைத்தளம் அமைத்தற்கு, ஆனால் இந்திய திரு நாட்டில் நடக்ககூடியதா ? காலத்திற்கும் நன்மை தரக்கூடிய செயல்களை செய்ய மாட்டார்கள். அவ்வப்போது ஏற்படும் பிரச்சனைகளுக்கு நிவாரணம் அல்லது இலவசங்கள் என்ற பெயரில் பிரச்சனைகளுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதில்தான் அவர்கள் திட்டமும், செயல்பாடுகளும் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் நடக்கும் தோழர்.
      ஜனத்திரள் ஒரு நாள் கொதித்தெழுந்து இதை நடத்தவே நடத்தும்

      Delete
  20. பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் கொண்ட ஒரு தேசம்
    சுயநல அரசியலால் அழிவது வேதனையளிக்கிறது..

    தனக்குப் பின்னால் வரப்போகும் தலைமுறைகளைவிட
    தன் வாழ்வு மட்டுமே முதன்மையானது என்று கருதுகிற ஒரு தலைமுறையில் வாழ்வதுகுறித்து வெட்கப்படுகிறேன்!

    மக்களை பிச்சைக்காரர்களாக வைத்திருப்பதன் மூலம்
    இலவசத் திட்டங்கள்.. கோடிக்கணக்கான கோடிகளில் ஊழல்..
    விசாரணை கமிஷன்.. நிவாரணத்தொகை..
    மறுவாழ்வு மையங்கள்..
    வேறுமாநிலத்திற்கு வழக்கு மாற்றம்..
    இடைத் தேர்தல்.. இன்னபிறவற்றைக் கொண்டே அரசியல் செய்துவிட முடிகிறது இவர்களால்..

    தன்னலமற்ற தலைவனுக்கான தவிப்பில் இருக்கிறது என் தேசம்..
    இனியொரு விதி செய்வோம்..
    அதை எந்த நாளும் காப்போம்..

    ReplyDelete
    Replies
    1. சரியாச் சொன்னீங்க தோழர். மிக்க நன்றி

      Delete
  21. விழிப்புணர்வு தரும் கட்டுரை....அருமை.

    ReplyDelete
  22. மிக நல்ல சமூக அக்கறையுடன் கூடிய கட்டுரை... உங்கள் எழுத்து நடையும் மிக அருமை நண்பரே!

    ReplyDelete
  23. பொதுமக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் ஆட்சியாளர்களாக வரவேண்டும்... அப்போதுதான் நீங்கள் சொல்லும் அனைத்தையும் நிறைவேற்ற முடியும்... அதுவரை ஊதுகிற சங்கை ஊதிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்... இருசக்கர வாகனங்கள் விசயத்தில் மாற்று வழி காணப்பட வேண்டுமே தவிர, வரியை உயர்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது... ஏற்கெனவே படும் சிரமங்கள் போதாதா?

    ReplyDelete
  24. இந்தியா வளர்கிறது, நீர் நிலை இல்லாமல் நிலமும் இல்லாமல் விவசாயம் தேய்கிறது.போதாக்குறைக்கு கூடம்குளம் என்ற கொலையுலை வேறு,போராடும் மக்களை தீவிரவாதிகள் என்று சொல்லும் ஜனனாயக இந்தியா............என்ன செய்ய..அரசியல் தலைவர்களுக்கு அரசியலை காப்பாற்றவும் கொள்ளையடிக்கவும் ஐந்து வருடமும் போதவில்லை இதில் மக்களின் குறை எப்படி தெரியும்

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் அவர்களது வேலையை செய்யட்டும். நாமும் தொடர்ந்து ஊதிக்கொண்டே இருப்போம்.

      மிக்க நன்றி தோழர்

      Delete
  25. சரவணகுமார் முத்துசாமி, நாமக்கல்.November 1, 2012 at 12:13 PM

    மிக அருமையான, சமூக நலன் கருதிய, தக்க சமயத்தில் கூறப்பட்டுள்ள யோசனைகள்......
    அரசு இயந்திரத்தின் காதுகளில் ஏறுமா....?

    சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் மண்வாரி இயந்திரங்களைக் கொண்டு திருவாரூர், திருத்துறைப் பூண்டி போன்ற காவிரி நதியின் கடைமடைப் பகுதிகளில் அதன் கிளையாறுகள், கால்வாய்களில் தூர்வாரும் பொதுப்பணித் துறையின் ஒப்பந்தப் பணிகளைச் செய்தபோது, மனம் கலங்கி வெதும்பிய அனுபவங்கள் கிடைத்தன.

    உலகின் முதல் நாகரிகமடைந்த இனமான தமிழ்மக்களின் தொன்றுதொட்ட எளிய,வலுவான வாழ்வதாரமான விவசாயத்தைக் காக்கும் அக்கறையற்று, ஏதோ பேருக்கு பராமரிப்பு செய்ய இத்தனை கோடி, அத்தனை கோடி என ஒதுக்கும் அரசுகளும்....,
    அரசுத் திட்டங்களை ஏதோ நிறைவேற்றியதாகக் கணக்கு காட்ட முயலும் உயர் அதிகாரிகளும்,....
    இவர்களின் அடியொற்றி, தமது கண்காணிப்புக்கு உள்பட்ட குறு பிராந்திய அளவிலான விவசாயத்தை மேம்படுத்தும் எண்ணமின்றி விவசாயம், நீர்ப்பாசனம், தேவை, இருப்பு,சேதம் தவிர்ப்பு பற்றிய அடிப்படை அறிவுகளற்ற (...பெரும்பாலும் தொழில்நகரங்களிலும் , மாநகரங்களிலும் பிறந்து வளர்ந்த....) உயரதிகாரியின் ஏட்டுச் சுரைக்காய் திட்டங்களை அப்படியே நிறைவேற்றும் கீழ்நிலை அலுவலர்களும்.......
    இவர்களின் மடியைப் பிடித்து மாங்காய் போட்டு பணம் அள்ளும் (சில) ஒப்பந்ததாரர்களும்.....
    ....விவசாயிகள் தூரெடுத்துக் கொண்டிருக்கும் இயந்திரத்தின் அருகில், தனியாகவும் கூட்டமாகவும் வந்து கெஞ்சுவார்கள்....முறையிடுவார்கள்....மன்றாடுவார்கள்....
    " ....அய்யா...இதச் செய்ய வேணாங்க...
    இது வெள்ளவரத்து வாய்க்காலுங்க...
    அதோ அந்த வாய்க்காவ சீர்பண்ணுங்க...
    அதுதாங்க வெள்ளவடி வாய்க்காலு...
    அதச் சீர்பண்ணாட்டி ஊரோட மொத்த விவசாய நெலமும் தண்ணியில முழுகிடுங்க.... ."
    என்ன வார்த்தையில் வேண்டுமானாலும் அந்த அவலக் காட்சியினையும், அவர்களின் பரிதவிப்பினையும் சொல்லலாம்.....
    மண்வாரி இயந்திரக்காரர்கள் இதில் செய்ய ஏதுமில்லை....அருகில் இருக்கும் லஸ்கரிடம் சொல்லுங்க...என்றால் அவர், அய்யா இப்ப பார்வையிட வருவாரு...அப்ப சொல்லுங்க...என்பார். மொத்த விவசாய நெலமும் தண்ணியில முழுகிடும் வகையில் வெள்ளவரத்து வாய்க்காலைச் சீர் செய்த பிறகு, 3௦௦௦௦ சம்பளம் வாங்கும் அய்யாவும், 4௦௦௦௦ சம்பளம் வாங்கும் மேல் அய்யாவும், அரசு வாகனத்தில் வருவார்கள்.....
    (இழவு வீட்டிலும் மாலைமரியாதையை எதிர்பார்க்கும் கட்சிக் கரைவேட்டிகளும் சமயத்தில் வருவார்கள்.....)
    அப்போ முறையிட்டால், இந்த வருசம் பண்டு தீர்ந்து போச்சு.... அடுத்த வருஷம் பார்க்கலாம் என்பார்கள்....
    இதில் நம் உதவியாக நாம் ஏதும் செய்ய ஒப்பந்ததாரர் விடமாட்டார்....அவர் ஏதும் செய்ய அய்யாக்கள் விடமாட்டார்கள்......
    (பின்ன கொஞ்சநாள் கழிச்சு வெள்ளச் சேத நிவாரணப் பணி, அதுக்கு ஒரு பண்டு...எல்லாம் வராம போயிடுமே....!)

    இரண்டு மூன்று நாள் அங்க இங்க முட்டிப் பார்த்துவிட்டு விவசாயிகளே திரண்டு தம்மாலான சிறுசிறு பராமரிப்புப் பணிகளைச் செய்வார்கள்....கட்டாயம் அவற்றால் மிகச்சிறு அளவு பயனே விளையும்....சேதம் நிகழப் போவது உள்ளங்கை நெல்லிக்கனி.....

    கையறு நிலை என்றால் என்ன என்பதை அனுபவபூர்வமாக உணர, நாம் காவிரியின் கடைமடைப் பகுதி விவசாயியாக இருக்கவேண்டும்....

    ReplyDelete
    Replies
    1. மிக மிக அக்கறையோடு கூடிய வார்த்தைகள். மிக்க நன்றி தோழர்

      Delete
  26. ஒவ்வொரு கேள்வியும் அதற்குண்டான விளக்கமும் அருமை...

    நன்றி ஐயா...

    ReplyDelete
  27. நம் முன்னோர்கள் எவ்வளவு தீர்க்க தரிசனம் கொண்டு மழை நீரை ஆறு,குளம்,ஏரி,கண்மாய்களில் சேகரித்தார்கள்...இவ்வளவு வசதிகளுடன் வாழும் நம்மால் ஏன் நம் முன்னோர்களைப் போல் முடிவதில்லை?

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete
  28. இன்று சந்திரமோகன் இதை முகநூலில் பதிந்திருக்கிறார்

    ReplyDelete
  29. நல்ல பதிவு. அருமையான பதிவு. நன்றி.

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...