Friday, November 23, 2012

செத்ததறிவானோ ?

முற்றாய் முடிந்ததும்
போர்த்தினார்களா?

முடிந்துவிடுமென்று
போர்த்தினார்களா?

போர்த்தப் பட்ட வேட்டி தாண்டி
கசிந்து கொண்டிருந்தது

“ யாரு பெத்த புள்ளையோ...”

 வெடித்தாள்
முன்னிருக்கை தாயொருத்தி

எங்க போயிட்டிருந்தானோ?
தேம்புகிறாள்
இன்னொரு தாய்

“ இப்படி
செத்துக் கிடக்கிறான்னு
ஊட்டுல
யாருக்குத் தெரியும்?”

புலம்பிய
தாயொருத்தியிடம் கேட்கிறாள்
குட்டிமகள்

“ அந்த மாமா செத்தது
அந்த மாமாவுக்குத் தெரியுமா
மொதல்ல”

ஆமாம்
தான்
செத்ததறிவானா
செத்தவன்?

விஞ்ஞானமும்
மெய்ஞானமும்
மழலையில்
பத்திக் கொள்ள

பேருந்து நிற்கும் வரை
நேரமில்லை
குதித்தோடுகிறான்

போகிற
பேருந்தைப்
பிடிக்க

45 comments:

  1. மாற்றத்தைப் போன்றதே சாவும்
    சாவொன்றே சாகமலிருக்கிறது எப்பொழுதும் .
    செத்ததறிந்தவன் வாழ்வதேயில்லை ஒருபோதும் .
    செத்தபின் அறிவானோ என்கிற கேள்வி
    வாழும்போதே செத்தவர்களுக்கு
    இன்னும் அழகாய் பொருந்துகிறது .
    குழந்தைகளின் கேள்வியும் பார்வையும்
    என்றுமே தட்டையானதல்ல ....
    அதன் அர்த்தம் புரிதலும்
    சாவைக் கடத்தலும்
    வேறு வேறல்ல .....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் புகழ்.
      எடுத்துக் கொள்ள அவர்களிடம் ஏராளம் இருக்கிறது. மிக்க நன்றி புகழ்.

      Delete
  2. "வாழ்க்கை - யாரும் பதில் சொல்ல முடியாத கேள்வி

    மரணம் - யாரும் கேள்வி கேட்க முடியாத பதில்"

    என்பார் நண்பரொருவர். மரணித்தபின் வந்து பின்னூட்டமிடுகிறேன். :-)

    ReplyDelete
    Replies
    1. மக்களுக்காய் வாழ்பவனுக்கு மரணம் ஏது தோழர்?

      Delete
  3. மிக அருமை தோழரே!
    அவசரகதியில் பேருந்தினின்று குதித்து ஒடுபவர்க்கு சூடு. விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கும் வேலை வந்துவிட்டது போலும். "செத்தவனுக்கு தெரியுமா செத்தது ???????"

    ReplyDelete
  4. ஆமாம்
    தான்
    செத்ததறிவானா
    செத்தவன்?

    உயிரை தொடும் வார்த்தை...புதிய வார்த்தையும் கூட.அட்டகாசம் அட்டகாசம்.

    ReplyDelete
  5. செத்ததறிவானா
    செத்தவன்?

    ReplyDelete
  6. அழகான கவிதை வாசித்தலுக்கும் விஞ்ஞானத்திற்கும் வித்யாசம் காட்டிடும் வார்த்தைகள்

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. குழந்தைகளின் கேள்விகளுக்கு பதிலே இல்லை.நான்கூட இப்போ யோசிக்கிறேன்.செத்ததறிவானா செத்தவன்?இயல்பான சிந்திப்பு வரிகளில் ஆழமாய் சிந்திக்கவேண்டிய கவிதை !

    ReplyDelete
  9. The greatest developement of matter is "Brain." - (Lenin ) ! செத்ததும் அது தான் ! அறிவதும் அது தான்----Matter-- மிகவும் உன்னதமான சிந்தனைத் தெரிப்பு---காஸ்யபன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete
  10. முழுமையாக தன்னை அறிந்தவனால், இறப்பது என்று அவனின் மனதிற்கு மட்டும் தெரியும்...

    ReplyDelete
  11. Replies
    1. மிக்க நன்றி கதிர்.
      வலையைப் பின்தொடர்கிறேன் முதல் ஆளாய்.

      Delete
  12. அருமை தோழர் .... அன்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கொளஞ்சி

      Delete
  13. /////முற்றாய் முடிந்ததும்
    போர்த்தினார்களா?

    முடிந்துவிடுமென்று
    போர்த்தினார்களா?

    போர்த்தப் பட்ட வேட்டி தாண்டி
    கசிந்து கொண்டிருந்தது

    “ யாரு பெத்த புள்ளையோ...”

    வெடித்தாள்
    முன்னிருக்கை தாயொருத்தி///// ஒரு முனை படுத்தபெற்ற காட்சி யாய் சித்தரிக்க பட்டுள்ளது


    ///எங்க போயிட்டிருந்தானோ?
    தேம்புகிறாள்
    இன்னொரு தாய்/// கூறியது கூறல் போல தோன்றுகிறது


    “ இப்படி
    செத்துக் கிடக்கிறான்னு
    ஊட்டுல
    யாருக்குத் தெரியும்?”

    புலம்பிய
    தாயொருத்தியிடம் கேட்கிறாள்
    குட்டிமகள்

    “ அந்த மாமா செத்தது
    அந்த மாமாவுக்குத் தெரியுமா
    மொதல்ல”

    ஆமாம்
    தான்
    செத்ததறிவானா
    செத்தவன்?

    விஞ்ஞானமும்
    மெய்ஞானமும்
    மழலையில்
    பத்திக் கொள்ள/////// தலைப்பு பொருந்தி கொள்கிறது

    ///பேருந்து நிற்கும் வரை
    நேரமில்லை
    குதித்தோடுகிறான்

    போகிற
    பேருந்தைப்
    பிடிக்க/// இயந்திர மனித போக்கு சித்தரிக்க பட்டாலும் ,தலைப்புக்கு OUT OF TEXT ஆக அமைகிறது

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க அய்யா

      Delete
  14. எவரும் அறிவதில்லை தனது இறப்பை..
    இறந்தபின் எப்ப தூக்கபோறாங்க "பாடியை"
    என்பதை கண்டறிந்த மனிதன் தனது வாழ்வை
    நெறிப் படுத்தினால் செத்தும் அறியப்படுவான்
    பிறரால்..

    ReplyDelete
  15. எவரும் அறிவதில்லை தனது இறப்பை..
    இறந்தபின் எப்ப தூக்கபோறாங்க "பாடியை"
    என்பதை கண்டறிந்த மனிதன் தனது வாழ்வை
    நெறிப் படுத்தினால் செத்தும் அறியப்படுவான்
    பிறரால்..

    ReplyDelete
  16. ஆழமான கவிதை ........தோழரின் உணர்வு கவிதையில் ...மனதை பாதித்ததா தோழர்......

    ReplyDelete
  17. //முற்றாய் முடிந்ததும்
    போர்த்தினார்களா?

    முடிந்துவிடுமென்று
    போர்த்தினார்களா?//

    அன்றாடம் நிகழும் நிதர்சனம். எப்படியும் இருக்கலாம். செந்த பிணத்தை வைத்து மருத்துவம் பார்க்கும் மருத்துவமனைகளும் உள்ளன. சாகும் முன்பே கிடங்குக்கு அனுப்பும் மருத்துவ மனைகளும் இருக்கின்றன. அதை வெளிச்சமிட்டுக் காட்டுவதாக உள்ளது.

    போர்த்தப் பட்ட வேட்டி தாண்டி
    கசிந்து கொண்டிருந்தது

    “ யாரு பெத்த புள்ளையோ...”
    கரிசனம் வழிகிறது, என் கண்களிலும்.

    ReplyDelete
  18. அருமை தோழர் இழப்பின் வலி மிகுந்த கவிதை

    ReplyDelete
  19. ஆமாம்
    தான்
    செத்ததறிவானா
    செத்தவன்?

    மழலையின் கேள்வியில் மனம் கனத்துப்போனது.

    ReplyDelete
  20. Replies
    1. மிக்க நன்றிங்க அய்யா

      Delete
  21. வணக்கம் தோழர். மீண்டும் பிரமிக்கிறேன். எப்படி உங்களால் இவ்வாறு சிந்திக்க முடிகிறது என்று.ஒரு சாதாரண் நிகழ்வை எப்படி அற்புதமான கவிதையாய் படைக்க முடிகிறது? ஜீவனுள்ள கவிதை..வாழ்க்கையை, அதன் முடிவை, நமக்கு எப்படி தூண்டி என்று விதை போடும் கவிதை..
    //முற்றாய் முடிந்ததும்
    போர்த்தினார்களா?

    முடிந்துவிடுமென்று
    போர்த்தினார்களா?// மனத்தைக் கரைக்கிறது கவிதை. எத்தனை இயல்பாய், இத்தனை உணர்வுகளை சொல்லாமல் சொல்லி.. வாழ்த்துகள் தோழர். “
    ''அந்த மாமா செத்தது
    அந்த மாமாவுக்குத் தெரியுமா
    மொதல்ல”

    ஆமாம்
    தான்
    செத்ததறிவானா
    செத்தவன்?''
    உணமையை சுருக்கென உரைக்கும் வார்த்தைகள்.ஏதுமறியா குழந்தையின் நிஜம. நெஜமாவே.. செத்தவன் அறிவானோ, தான் செத்ததை..அது எப்படி இருக்கும்? வாழ்க்கையின் தத்துவம் சொல்லுகிறீர்கள் தோழர்.நிஜம. நிஜம..நிஜமே.. மீண்டும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. நெகிழ்வான நடை... முகத்தில் அறைந்த உண்மையுடன் முடிவு.... நினைவில் வைத்துக்கொள்ளும்படி இருக்கிறது...

    வாழ்த்துக்கள் தோழர்..

    ReplyDelete
  23. இறந்துவிட்டதை உறுதிப் படுத்த மருத்துவர்கள் வரும்வரை யாருக்கும் காத்திருக்க நேரமில்லை. அடுத்த பஸ் பிடித்து ஓடும் அவசர உலகத்தில் இறந்துவிட்டவர்களால் ஏதேனும் ஆதாயம் இருந்தால் பத்திரத்தில் அவரின் கைவிரல் பிடித்து ரேகை பதிக்கவேனும் கொஞ்சம் உயிர் இருந்தால் போதும் என்று மெனக்கெடும் மனிதர்களும் உண்டு. இதற்கிடையில் குழந்தையின் கேள்வி சிந்திக்க வைக்கிறது. அது இறந்தவனின் ஆத்மாவுக்கு மட்டுமே கேட்டிருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர் தனலட்சுமி

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...