Monday, February 20, 2017

உப்ப மட்டுமே சாப்பிடு

ரித்திகாவை சிதைத்தவனை கொடூரமான கெட்டவார்த்தைகளால் வைதுகொண்டிருந்த என் புத்தனை இடைமறித்து இவ்வளவு இறங்கலாமா என்ற என்னிடம், ‘வக்காளி கைல கிடச்சான் வகுந்துடுவேன் வகுந்து’ என்றவன் ‘கொஞ்ச நாளைக்கு உப்ப மட்டுமே சாப்பிடு’ என்று என்னைப் பார்த்து துப்பிவிட்டு போனான்

சுவர்களைத் தகர்ப்போம்

முன்பு ஏர்டெல் சார்பாக ஒரு விளம்பரம் வரும்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே எல்லையாக கம்பி வேலி இருக்கும். வேலிக்கு அந்தப் பக்கம் ஒரு பாகிஸ்தானியக் குழந்தை. இந்தப் பக்கம் ஒரு இந்தியக் குழந்தை. இரண்டுக் குழந்தைகளுக்கும் இடையே ஒரு உதை பந்து. பந்தை வேலிக்குள் இருக்கும் இடைவெளி வழியே பாகிஸ்தானுக்கு அனுப்புவான் இந்தியப் பிள்ளை. அதை அதே மாதிரி இந்தியாவிற்குள் அனுப்புவான் பாகிஸ்தானியப் பையன். இப்படியே கொஞ்சநேரம் இரண்டு குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
இந்த வேலி மட்டும் இல்லேனா எவ்வளவு நல்லா இருக்கும் என்று நினைப்பேன். எல்லைக் கோடுகளே இல்லாத உலகத்திற்காக ஏங்கும் லூசுகளுள் நானும் ஒருவன்.
மெக்சிகோவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே 2240 கோடி அமெரிக்க டாலர் செலவழித்து தடுப்பு சுவர் எழுப்பப் போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருப்பது கண்டு நெஞ்சு பதைபதைக்கிறது. அவர் இதை சொல்லித்தான் வாக்கு கேட்டார். அவர் வந்துவிடக்கூடாது என்று நாம் ஆசைப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம்.
மட்டுமல்ல, அதற்கான செலவையும் மெக்சிகோ பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்றும் ட்ரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார்.
மனிதர்களைப் பிரிக்கும் சுவரில் தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் ஆகவே அதற்கான செலவைப் பங்கிட்டுக் கொள்ள இயலாது என்றும் மெச்சிக் அதிபர் என்ரிக் பீனா நீட்டோ கூறியிருக்கிறார்.
உடனே ட்ரம்ப் மெக்சிகோவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 20% இறக்குமதி வரி விதித்திருக்கிறார். வருடத்திற்கு 5000 கோடி டாலருக்கு அமெரிக்காவில் மெச்சிகோ பொருட்கள் இறக்குமதியாகின்றன. எனில், இந்த புதிய வரியின்மூலம் வருடத்திற்கு 1000 கோடி டாலர் மெச்சிக் பணம் அமெரிக்கா வரும். இரண்டரை ஆண்டுகளில் காம்பவுண்ட் சுவருக்கான செலவுத்தொகை அமெரிக்காவிற்கு வந்து விடும்.
இதன்மூலம் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட மெக்சிகோ ஒருக்கால் விலையைக் கூட்டக் கூடும். அது நிகழ்ந்தால் அமெரிக்க மக்கள் தலையில் விழும்.
இரண்டு வீடுகளுக்கிடையே காம்பவுண்ட் சுவர் கட்டுவதென்று இருவரும் முடிவெடுத்தால் செலவினை இருவரும் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். ஒருவருக்கு விருப்பமும் மற்றவருக்கு விருப்பமில்லை என்றால் விருப்பப் பட்டவர்தானே செலவு செய்ய வேண்டும் திரு ட்ரம்ப்.

விவரமறிந்தவர்கள்...

Geetha Narayanan எனது பெருமதிப்பிற்குரிய முகநூல் தோழர்களுள் ஒருவர். அவரது பதிவுகளை கவனிக்காமல் ஒருபோதும் கடக்க முடிவதில்லை.
மிக முக்கியமானதொரு பதிவை இன்று அவர் ஆங்கிலத்தில் முகநூலில் வைத்திருக்கிறார்.
சிறப்புக்குழந்தைகளும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் தற்போது முன்னெப்போதும் இல்லாதபடி மிக அதிக அளவில் பிறப்பதாகவும் அது ஏனென்ற ஆய்வு மிக மிக அவசியம் என்றும் கூறுகிறார்.
மட்டுமல்ல கருவுற்றிருக்கிற தாய்மார்களுக்கு ஏதேனும் தடுப்பூசியோ அல்லது வேறேதேனும் மருந்தோ சிகிச்சையோ கொடுத்தால் இவற்றை தவிர்க்க முடியுமா என்ற ஆராய்ச்சிகளையும் தொடங்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கவலைப்படுகிறார்
விவரமறிந்தவர்கள் கவனம் செலுத்துங்கள்

நீங்க தப்புன்னு ஆயிடும் ஆமா

ஆரல் ஓரல் திருத்திக் கொண்டிருக்கிறேன்.
பார்த்து திருத்துங்க. தப்பு போடாதீங்க ஆமா
சொல்ல சொல்ல எழுதிட்டு என்னமோ தானா எழுதன மாதிரி நாய்க்கு ரவுச பாரு
அதனாலதான் சொல்றேன். தப்பு போட்டீங்கன்னா நீங்க தப்புன்னு ஆயிடும் ஆமா
அடி...
தலையை தனுஷ் மாதிரி சிலிப்பிக் கொண்டே ஓடிட்டான்

இதை கொலை வழக்காக அல்லவா

அப்பல்லோவில் பணியாற்றிய மருத்துவர் திருமதி ராமசீதா அவர்கள் மாண்பமை ஜெயலலிதா அவர்கள் சடலமாகத்தான் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார் என்றும் அவரது உடலை பதப்படுத்துவதற்காகவே வெளிநாட்டு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டதாகவும் கூறியதாக செய்திகள் வருகின்றன. அவர் அப்படிப் பேசியது உண்மையெனில்
* அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா?
* அதுகுறித்து அவரிடம் விசாரனை நடத்தப் படுகிறதா?
* பீலே உள்ளிட்ட அயல்நாட்டு மருத்துவர்களிடமும் அப்பல்லோ நிர்வாகத்திடமும் ஏனின்று ம் உரிய விசாரனை இல்லை?
* திருமதி சசிகலாவை இதுகுறித்து ஏனின்னும் விசாரிக்கவில்லை?
* தங்களை சந்திக்கவே அனுமதிக்கவில்லை என்று இப்போது கூறுபவர்கள் இதுவரை ஏன் இந்த உண்மையை கூறவில்லை? எனில் அவர்களும் உடந்தைதானே?
* ராமசீதா அவர்கள் சொல்வது உண்மையெனில் இதை கொலை வழக்காக அல்லவா அணுக வேண்டும்?

ரௌத்திரம் இருக்கிறது உங்களுக்கு

தான் கோவக்காரன் என்பதாலும் தன்னைப் போலவே மக்களும் கோவக்காரர்களாக இருப்பதாலும் அரசியலுக்கு வருவதற்கு அச்சமாக இருப்பதாக திரு கமல் கூறுகிறார்.
இந்த ஒரு காரணத்திற்காகவே நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்கிறேன் நான்.
"ரௌத்திரம் பழகு" என்கிறான் பாரதி.
ரௌத்திரம் இருக்கிறது உங்களுக்கு. வாருங்கள்.
போக, தேர்தலில் நிற்பது, ஆட்சிக்கு வருவது என்பது மட்டுமல்ல அரசியல்.
மக்களது கோவம் குறையாமல் பார்த்துக் கொள்வது, மேடுகள் நொடி நொடியும் உயர்ந்து கொண்டே போவதற்கான காரணம் எது என்பதை மக்களுக்கு புரிய வைப்பது, கல்வி, மருத்துவம், வேலை, வாழ்க்கை மக்களது உரிமை என அவர்களுக்குத் தெளிவு படுத்துவது, அதற்கான போராட்டத்தை கை எடுக்கும் இயக்கங்களோடு அவர்களை கொண்டிணைப்பதுதான் அரசியல்.
ஆதிக்க சாதிவெறிக்கு எதிராகவும் ஆணவக் கொலைகளுக்கு எதிராகவும் மக்களை ஒருங்கிணைப்பதும்கூட அரசியல்தான்.
போக, அரசியலில் நல்ல இயக்கங்களே இல்லையா?
மைக்குகளை உடைப்பவர்களையும் வேட்டியை உருவுகிறவர்களையும், கூவத்தூர் பயணிகளை மட்டும்தான் அரசியல்வாதிகளாகப் பார்க்கிறீர்களா?
இடதுசாரி அரசியலை ஏன் லாவகமாக ஒதுக்குகிறீர்கள்?

எனக்குத் தெரிய இரண்டு வழிகள்

நடந்துகொண்டிருக்கிற அரசியல் அக்கிரமங்களைப் பார்த்து தான் கோவமாக இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்திருந்தார் திரு கமல்ஹாசன்.
கோவத்தை எப்படி செலவு செய்யப் போகிறீர்கள் திரு கமல்? என்று கேட்டிருந்தேன்.
நண்பர்கள் சிலர் இன்பாக்சில் என்னிடம் கோவப் பட்டனர். சிலர் ‘இப்ப என்ன செய்யனும்?’ என்கிற தொனியில் கேட்டனர்.
முதலில் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன்,
இது மாதிரியான கோவம் என்னை மகிழ்ச்சிப் படுத்துகிறது. அதுவும் கமல் மாதிரியான செலபெரெடிகளுடைய கோவம் அழுத்தமான விளைவுகளைத் தரும் என்பதால் பெருமகிழ்வைத் தரும்
என்னுடைய கோவத்தைவிட திரு கமல் அவர்களுடைய கோவம் ஆயிரம் மடங்கு விளைவுகளைத் தரும்.
கோவத்தை எப்படி செலவு செய்யலாம்? என்று கேட்பவர்களுக்காக
எனக்குத் தெரிய இரண்டு வழிகளை சொல்வேன்
மக்களுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் நல்ல மக்கள் இயக்கங்களில் இணைந்து அவர்களது போராட்டங்களில் இணைந்து கோவத்தை வெளிப்படுத்துவது
திருமதி ரோகிணி இதைத்தான் செய்கிறார். பள்ளிக்கரனையில் மக்களுக்காகப் போராடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மிகக் கொடூரமாக காவலர்களால் தாக்கப்பட்டபோது கொதித்துப் போன அவர் அதே பள்ளிக்கரனையில் நடந்த எதிர்ப்பு இயக்கத்தில் தாமாகவே பங்கு கொண்டார்.
அல்லது தமது ரசிகர் தளத்தை ஒரு இயக்கமாக மாற்றி சமூகப் பணியோடு எதிர்ப்பியக்கங்களை கட்டுவது

Sunday, February 19, 2017

19.02.2017 தினமணி

65/66 காக்கைச் சிறகினிலே ஜனவரி 2017

இந்த வருடத்தின் முதல்நாளை தோழர் முத்தையாவுடன் செலவு செய்ய நேரிட்டது மிகவும் தற்செயலானதும் மகிழ்ச்சியானதும் ஆகும். எங்களுடைய அன்றைய பயணம் ஒரு மிக நல்ல உப விளைச்சலைத் தந்ததும்கூட தற்செயலானதும் மகிழ்ச்சியுமானதுமே ஆகும்.

அடுத்தநாள் பள்ளிக்கூடம். விடுப்பெடுக்க முடியாது. எனவே விரைவாக ஊர் திரும்ப வேண்டும் என்று நான் சொல்வதை காதுகொடுத்தே கேட்கவில்லை தோழர் முத்தையா. சரி, வருடம் முழுவதும் அவர் சொல்வதை நாம் கேட்கிறோமா என்ன என்பதாக கட்டுப்பட்டேன்.

தோழர் சந்திரசேகர் வீடு சென்று அவரைப் பார்த்துவிட்டு ஊருக்கு போகலாம் என்ற அவரது திட்டத்திற்கு உடன்பட்டாயிற்று. தோழர் புஷ்பராஜ் சவாரிக்கு போய்விட்ட படியால் அவருக்காக வெகுநேரமாகக் காத்திருந்து அவர் வந்ததும் கிளம்பினோம்.

பள்ளிக்கரணை கடந்து நகர்ந்த பொழுது ஒரு சிக்னலில் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது. அப்போது நல்ல வெயில். சாலையின் குறுக்கும் நெடுக்குமாக பல குழந்தைகள் சிக்னலில் காத்திருந்த கார் மற்றும் ஆட்டோக்களில் பொம்மை, காது குடையும் பட்ஸ், துடைப்பான் போன்ற பொருட்களை விற்றுக் கொண்டிருந்தனர். இந்த வெயிலில் குழந்தைகள் இப்படி நோகிறார்களே என்ற கவலையோடே தொடர்ந்தோம்.

சந்திரசேகருக்கும் அவரது குடும்பத்தினருக்கும்புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்து த்நீரை முடித்துக் கொண்டு கிளம்பும்போது முத்தையா அடுத்த தாக்குதலைத் தொடங்கினார். தோழர்கள் துர்கா சரவணன் மற்றும் விவேகானந்தன்  இருவரும் எங்களுக்காக காத்திருப்பதாகவும் அவர்களோடு மதிய உணவு முடிந்த பிறகுதான் ஊர் கிளம்ப அனுமதி என்றும் கூறினார்.

அவர்களையும் பார்த்துவிட்டு திரும்பினோம். அந்த சிக்னலை நெருங்கும் போதே அந்தக் குழந்தைகளின் முகம் நினைவிற்கு வந்தது. இப்போதும் அதே காட்சிதான். இந்தமுறை பொருட்களை விற்கும் குழந்தைகளுக்கிடையே ஒரு விதமான ஒத்திசைவு இருப்பதைப் பார்க்க முடிந்தது. இது ஏதோ ஒருவித எச்சரிக்கையைத் தந்தாலும் அடுத்த நாள் பள்ளிக்கு போக வேண்டும் எனில் உடனே ஊருக்கு கிளம்ப வேண்டும் என்ற பதைபதைப்பே அதிகமாக இருந்ததால் அனைத்தையும் அடக்கிக் கொண்டு நகர வேண்டியதாயிற்று.

அறை சென்று பைகளைத் தூக்கிக் கொண்டு கோயெம்பேடு கிளம்பினோம்.
வழக்கம்போலவே வடபழனி சிக்னலில் சிக்கினோம். இங்கும் அதேபோல குழந்தைகள் விற்பனை செய்வதைப் பார்த்தேன். ஆட்டோ புறப்படும் நேரம் ஒரு வெளிமாநிலப் பெண் மறைவில் நின்று இந்தக் குழந்தைகளை இயக்குவது தெரிந்தது. ஏற்கனவே  முந்தைய சினலில் குழந்தைகளிடம் கண்ட ஒத்திசைவும் இந்தக் காட்சியும் பதைபதைப்பை அதிகமாக்கின.

இந்தக் குழந்தைகளுக்கும் அந்த அம்மாவிற்கும் பொருத்தமே இல்லை. ஆனால் அந்த அம்மாவின் இயக்கத்திற்கு குழந்தைகள் கட்டுப் படுகின்றனர். அந்தக் குழந்தைகளுக்குள் ஒத்திசைவு இருக்கிறது. ஒருக்கால் பெற்றோரிடமிருந்து களவாடப்பட்ட குழந்தைகளாக இருக்குமோ என்றச் என் அச்சத்தை அடுத்தநாள் பள்ளி வென்றது.

பெரம்பலூர் வரும் வரைக்கும் அதே நினைவு. வந்ததும் என் அய்யத்தை முகநூலில் பதிந்து தோழர்கள் கவனிக்குமாறு சொன்னேன்.

அடுத்த நாளே தோழர் வளவன் சித்தார்த்தன் என்னைத் தொடர்பு கொண்டு சில விவரங்களைக் கேட்டார். கூறினேன். தான் வெளி மாநிலத்தில் இருப்பதாகவும் ஆனால் இந்தத் தகவலை தனது நண்பர்களிடம் கூறியுள்ளதாகவும் மேலதிகத் தகவல் கிடைத்ததும் அறியத் தருவதாகவும் கூறினார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு மூன்றே மூன்று குழந்தைகளை மட்டுமே தனது நண்பர்களால் மீட்க முடிந்ததாகவும், அவர்களை பாதுகாக முகாமொன்றில் விட்டிருப்பதாகவும் கூறினார். அவர்களது ஊர், தாய் தந்தை குறித்த விவரங்களைப் பெற முடியுமா என்று அவர்கள் முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும் குழந்தைகளின் நினைவில் விவரங்கள் இருக்குமானால் அவர்களை அவர்களது பெற்ரோரிடம் சேர்த்துவிடல்லம் என்றும் அல்லது ஏதேனும் அரசு விடுதியில் சேர்க்கலாம் என்றும் கூரினார்.

நிச்சயமாக குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப் படுவார்கள் என்றும் கூறியபொழுது சத்தியமாய் கண்கள் ஈரப்பட்டன.

இந்த முயற்சியில் பங்கெடுத்த அனைவரையும் நன்றி சொல்லி வாழ்த்துகிறேன்.

சிக்னல்களில்  இந்தப் பக்கமும் கொஞ்சம் கவனம் திருப்புவோம்

****************************    

மாணவர் போராட்டத்தில் நெகிழ்ச்சியான பல சம்பவங்கள் நடந்தன. அவற்றில் இஸ்லாமியப் பிள்ளைகளின் தொழுகையும் ஒன்று.

போராட்டத்தில் பங்கெடுத்த இஸ்லாமியக் குழந்தைகள் தொழுவதற்காக சிரமப்பட்டபோது அவர்களுக்காக தனி இடம் ஒதுக்கி அவர்களது தொழுகைக்கு உதவி இருக்கிறார்கள் மற்ற சமூகத்தை சார்ந்த குழந்தைகள்.   

இதை அனைவரும் நெகிழ்ச்சியோடும் மகிழ்ச்சியோடும் பார்க்கையில் மரியாதைக்குரிய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் இதுகுறித்தும் வழக்கம்போலவே விஷத்தைக் கக்கியிருக்கிறார்.

இந்துக்கள் நல்லவர்கள் . மற்ற சமூகத்தின் மத வழிபாடுகளில் குறுக்கிடாதவர்கள் மட்டுமல்ல அவற்றை சாத்தியப்படுத்த துணை நிற்பவர்கள். இத்தகைய குழந்தைகளுக்காகப் பெருமைப் படுகிறேன் என்று அதை அவர் தனது மதத்தின் பெருமையாகக் கொண்டாடி இருந்தால்கூட விட்டிருக்கலாம்.

மாணவர்கள் போராட்டத்தின்போது இஸ்லாமியர்கள் மட்டும் எப்படி தொழுகையை நடத்தலாம்?  இது மதவெறியல்லவா என்பதுமாதிரி கொதித்திருக்கிறார்.

இதுமாதிரி கடைந்தெடுத்த ஒரு மத வெறியர் கூறினால் போகட்டும் என்று விட்டுவிடலாம். அவர் மரியாதைக்குரிய ஒரு மத்திய அமைச்சர்  என்பதை யாரேனும் அவரிடாம் புரிகிறமாதிரி எடுத்துச் சொன்னால் தேவலாம்.

சரி,அவரவரும் தங்கள் தங்கள் வார்த்தைகளாலும் அறியப் படுவார்கள்.

கேரளாவில் திருநங்கைகளுக்கான பள்ளி துவக்கப் பட்டுள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது. இதுமாதிரியான பள்ளிகள் தவிர்க்க இயலாத அவசியங்கள். மேற்கத்திய நாடுகளில் இத்தகைய பள்ளிகள் ஏற்கனவே உள்ளன.

எல்லா ஆணுக்குள்ளும் பெண்ணும் உண்டு. அப்படியேதான் எல்லாப் பெண்களுக்குள்ளும் ஆணும் உண்டு.

ஆணுக்குள் பெண் அதிகமானால் திருநங்கை. பெண்ணிற்குள் ஆண் அதிகமானால் திருநம்பி..

ஆணும் பெண்ணும் மாதிரியே பெற்றோருக்கு திருநங்கையும் திருநம்பியும் குழந்தைகளே. இதுமாதிரிப் பள்ளிகள் அவர்களுக்கான கல்வியை உத்திரவாதப் படுத்தும். பிச்சை எடுப்பதிலிருந்தும் பாலியல் தொழிலிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றும்.

இதுவிஷயத்தில் நமக்கு சில கோரிக்கைகள் உண்டு.

1)   இதுமாதிரிப் பள்ளிகள் தேசம் முழுக்க தேவைக்கு ஏற்ப ஏற்படுத்தப்பட வேண்டும்.
2)   கல்லூரிகளும் தொழில்நுட்பக் கல்லூரிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும்
3)   திருநங்கைகளைவிடவும் திருநம்பிகளின் வாழ்க்கை சிக்கலானது என்ற உண்மையைக் கணாக்கில்கொண்டு திருநம்பிகளுக்கான பள்ளிகளும் துவக்கப்பட வேண்டும்
********************************************************************************

பேசிக்கொண்டிருந்தபோது தோழர் வளவன் ஒரு உருக்கமான சம்பவத்தை சொன்னார்.

சில வருடங்களுக்கு முன்னால் தெருவில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பிள்ளைகளை மீட்கிறார்கள். மீட்கப்பட்ட குழந்தைகளில் ஒருவனுக்கு தமிழ் தெரிகிறது. ஆனால் அவனது ஊர் தமிழ்நாடல்ல. ஊரைப் பற்றிக் கேட்கும்போதெல்லாம் ஏதோ ஒரு வார்த்தையைக் கூறிக்கொண்டே இருந்திருக்கிறான்.

அந்த வார்த்தை எந்த மொழி என்று கண்டுபிடிக்க முயற்சித்திருக்கிறார்கள். மிகுந்த சிரமத்திற்குப் பிறகு அது வங்க மொழி வார்த்தை என்று தெரிந்திருக்கிறது. உடனே வளவனுக்கு ஒரு திட்டம் தோன்றியிருக்கிறது. ஊரைக் கேட்டால் அந்த வார்த்தையை சொல்கிறான். ஒருக்கால் அதுதான் ஊரின் பெயராக இருக்கக் கூடும். எனவே அந்த ஊரின் போஸ்ட் மாஸ்டருக்கு ஒருகடிதம் எழுதலாம் என்று.

அந்தக் குழந்தையைப் பற்றி வங்கம் தெரிந்த நண்பரைக் கொண்டு கடிதம் எழுதி ‘போஸ்ட் மாஸ்டர்’ என்றெழுதி அந்தப் பையன் சொன்ன வார்த்தையை எழுதி, மேற்கு வங்கம் என்று எழுதி அனுப்பி விட்டனர்.

இரண்டு நாட்கள் கழித்து அந்த போஸ்ட் மாஸ்டரிடமிருந்து தொலைபேசி வந்திருக்கிறது. அந்தப் பையன் தங்கள் ஊர்தான் என்றும் அவனது பெற்றோர்கள் தம்மோடுதான் இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். வங்கம் தெரிந்த தோழரின் உதவியோடு அவர்களோடு பேசியிருக்கிறார்கள்.   

வந்து குழந்தையை அழைத்துப் போகுமளவு வசதியில்லை என்று கூறியிருக்கிறார்கள். இவர்களே அழைத்துப் போய் விட்டுவிட்டு வந்திருக்கிறார்கள். தொடர்ந்து உதவுகிறார்கள்.

சென்னையில் பிச்சை எடுத்துக் கொண்டும் தெருவில் பொருள்களை விற்றுக் கொண்டும் இருந்த அந்தப் பிள்ளை இன்று நல்ல நிலையிலும் தொடர்போடும் இருப்பதாகச் சொன்னார்.

கவனம் வைப்போம்.

கிராமத்து அஞ்சல் நிலையங்களைக் காப்பாற்ற வேண்டும்.
*********************************************** 

Wednesday, February 8, 2017

கரண்டு மாதிரி

காலை கூட்டுப் பிரார்த்தனை முடிந்தது வகுப்புகள் தொடங்கியதும் பத்தாம் வகுப்பு ஆசிரியை வகுப்புக்கு வராத மாணவனை வகுப்புத் தலைவியோடு என்னிடம் அனுப்பியிருந்தார்.
”ஏண்டா?”
“ நேத்திக்கு ஸ்கூலுக்கு வரலன்னு டீச்சர் உங்களப் பார்த்துட்டு வரச் சொன்னாங்க சார்”
” ஏண்டா நேத்து ஒரு நாளைக்காகவா டீச்சர் அனுப்பினாங்க?”
“ ஆமாம் சார். நேத்தி தான் சார் வரல”
இடை புகுந்து வகுப்புத் தலைவி சொன்னதுதான் இங்கு நம்மைக் கொண்டு வந்து நிறுத்தியது
அந்தக் குட்டி பொண்ணு சொன்னாள்,
“இல்ல சார், இவன் கரண்டு மாதிரி எப்பவாச்சும்தான் ஸ்கூலுக்கு வரான்”

அரசியல் படி

”எங்க வீட்டயெல்லாம் காலி செஞ்சு ஜாமனையெல்லாம் மூட்டகட்டி வெளிய வச்சுட்டோம். பாவம் இந்த பொம்பளப் பசங்க. ஓரமா ஒதுங்கியெல்லாம்  ஒன்னுக்கு ரெண்டுக்கு போயி ச்பழக்கமிருக்காது. இந்தா இந்த சேலைங்கள எடுத்துப்போயி வீடுங்கள மறச்சு கக்கூசா வச்சுக்கோங்க”

இதுதான் நான் ஆகச் சமீபத்தில் கண்ட மனிதாபிமானத்தின் உச்சம். இதை இந்தச் சமூகத்தின் மீது அக்கறையோடும் ஆர்வத்தோடும் தொலைக்காட்சியில் மின்னும் சமூக ஆர்வலர்கள் யாரும் சொல்லவில்லை. இதைச் சொன்னது எழுதப் படிக்கத் தெரியாத, புயலுக்கு புயல் மட்டுமே பள்ளிக்குள் ஒதுங்கும் ஒரு மீனவத்தாய். தங்களது குடிசைகளை காலி செய்து அந்த மூத்தத் தாயின் வாக்கை ஆமோதித்து தங்களது குடிசைகளை மறைத்து கக்கூசுகளாக்குவதற்காக தங்களது கிழிந்த சேலைகளை மாணவப் பிள்ளைகளுக்கு எடுத்துக் கொடுத்தவர்கள் எல்லோரும்கூட அந்த மீனவக் குப்பத்தைச் சேர்ந்த தாய்மார்கள்தான்.

நேற்று இரவுவரை தந்தையாய், தாயாய், சகோதரனாய், சகோதரியாய் தம்மேல் அன்பையும் பாசத்தையும் பொழிந்த காவலர்கள் ஒரு சொடுக்கும் பொழுத்துக்குள் இவ்வளவு கொடூரமாகவும், மூர்க்கமாகவும், மனிதத் தன்மையற்றும் மாறிப்போவார்கள் என்று அந்த மாணவப் பிள்ளைகள் ஒருபோதும் எதிர்பார்த்திருக்கவில்லை.

விடிந்ததும் கூட்டத்திற்குள் நுழைந்து கலைந்துபோகுமாறு கோரிய காவலர்களிடம் லத்திகள்கூட இல்லை. முந்தையநாள் காவலர்களாகவே அப்போதும் அவர்களைப் பார்த்த சில பிள்ளைகள் அவர்களை ‘அண்ணா’ என்றும் ‘அங்கிள்’ என்றும்கூட விளித்திருக்கிறார்கள்.

அவசரச் சட்டம் பிறப்பிக்கப் பட்டுவிட்டதாலும் அன்று மாலையோ அல்லது அடுத்தநாளோ நிரந்தரச் சட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறிய காவலர்கள் ஆகவே இனி அவர்களை அங்கு அனுமதிக்க முடியாதென்றும் உடனே கலைந்து செல்ல வேண்டுமென்றும் கூறிய தொனி பிள்ளைகளுக்கு புதியதாக இருந்தது. சடாரென கலைந்து போவதில் உள்ள சிரமங்கள்ளை எடுத்துக் கூறி கலைந்து செல்வதற்கு இரண்டுமணிநேரம் அவகாசம் கொடுங்கள் என்று கூறிக் கொண்டிருந்தபோதே லத்தியை சுழற்றியபடி மாணவர்களை சிதறடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். தங்களைக் கலைந்து செல்லுமாறு கோரியபோது அவர்கள் கைகளில் இல்லாத லத்திகள் ஒரு வாக்கிய இடைவெளிக்குள் அவர்களது கைகளுக்குள் எப்படி வந்தன? என்பது இன்னமும் அந்தக் குழந்தைகளுக்குப் புரியவில்லை.

காவல்துறை தரப்பில் அப்படியொரு திட்டமிடல் நடந்திருக்கிறது.
கொடூரமான லத்தியடி மாணவர்களை நாலாபக்கமும் சிதறியடித்திருக்கிறது. அதில் ஒருபகுதி தங்களையறியாமல் கடல்நோக்கி ஓடியிருக்கிறார்கள். அப்போது காலை நேரம் என்றபடியால் சில பிள்ளைகளுக்கு இயற்கை உபாதை ஏற்பட்டிருக்கிறது. சில பெண் குழந்தைகளுக்கு மாதாந்திர சுழற்சி ஏற்படவே  அங்கிருந்த பயோ டாய்லட்டை கொஞ்சம் பயன்படுத்திக் கொள்வதற்காக அனுமதி கேட்டிருக்கிறார்கள். அப்போது தடித்த வார்த்தைகளால் அவர்களை ஏசியபடியே தொடர்ந்து விரட்டியடித்திருக்கிறார்கள். அதற்குமேல் அங்குலம்கூட நகரமுடியாத பெண்பிள்ளைகள் தங்களது வயிற்றைப் பிடித்தபடி அப்படியே அமர்ந்திருக்கிறார்கள்.

அவர்களை அரணாக வளைத்து நின்று லத்தியடிகளில் இருந்து அவர்களைக் காப்பாற்றிய தாய்மார்கள்தான் முதலில் உள்ளபடி தங்களது வீடுகளை கக்கூசாக மாற்றிக் கொள்ளுமாறு மாணவர்களிடம் சொன்னது.

மீண்டும் மீண்டும் எத்தனைமுறை வேண்டுமானாலும் சத்தியமாய் சொல்கிறேன் ஆகச் சமீபத்தில் என்னை மெய்சிலிர்க்க வைத்த மனிதாபிமானத்தின் உச்சம் இதுதான்.

இந்தப் புள்ளியிலிருந்துதான் நான் போராடிய மாணவக் குழந்தைகளோடு, அவர்களோடு சேர்ந்து போராடிய ஒரு பிள்ளையின் தகப்பன் என்ற உரிமையில் கொஞ்சம் உரையாட விரும்புகிறேன்.

அவர்கள் கொடுத்த சேலைகளைக் கொண்டு குடிசைகளை மறைத்தபடி நீங்கள் நிற்க பெண்பிள்ளைகள் உள்ளே சென்று ரிஃப்ரெஷ் செய்து கொண்டு வந்திருக்கிறார்கள். இதைப் படிக்கும்போது ஒரு பெற்றோன் என்ற வகையில் திமிறே எனக்கு.

ஆனால், இதில்கூட எதைப் பேச வேண்டுமோ அதை பேச மறுக்கிறார்கள், எவை வெறும் அபத்தமோ அவற்றை மட்டுமே சிலாகித்து பேசுகிறார்கள் என்பதை மாணவர்களாகிய நீங்கள் உணர வேண்டும். உங்களையும் உங்களது போராட்டத்தையும் கௌரவப் படுத்துவதாக காட்டிக் கொள்ளவேண்டும்  அதே நேரத்தில் அந்தப் பாராட்டுதல் என்பது இந்தப் போராட்டத்தின் உன்னதமான விழுமியத்தை நீங்கள் உணராதபடி செய்துவிடவேண்டும் என்பதில் அவர்கள் எவ்வளவு அக்கறையாய் இருந்திருக்கிறார்கள் பாருங்கள். அவர்கள் கூறுகிறார்கள்,”

’பார்த்தீர்களா, பார்த்தீர்களா இந்தப் போராட்டத்தில்  பெண் பிள்ளைகள் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறார்கள்” என்பதாக ஒரு பெரும்பிம்பமாக இதை கட்டமைக்க முயல்கிறார்கள். முதலில் பெண்கள் பாதுகாப்பாய் இருக்கிறார்கள் என்பதே அபத்தம். அது இயல்பானது. கட்டமைக்கப்படும் இந்த பிம்பத்துள் நீங்கள் கரைந்துவிடுவீர்கள் என்றால் ஏதோ இந்த போராட்ட களத்தில் மட்டும்தான் பெண்பிள்ளைகள் ஆண் பிள்ளைகளிடம் பாதுகாப்பாக இருப்பதுபோலவும் பள்ளிகளில், கல்லூரிகளில், தெருக்களில் அப்படியெல்லாம் இல்லை என்பதும்போலல்லவா அமைந்துவிடும்.

நீங்கள் உணர்ந்துவிடக் கூடாது என்று அவர்கள் அக்கறைப் பட்டதும் நீங்கள் உணர்ந்துகொண்டே ஆகவேண்டும் என்று நாங்கள் அக்கறைப்படுவதும் இதுதான்,

தங்களது வசிப்பிடங்களை நீங்கள் கழிவறறையாய்ப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்ததை நாம் மனிதத் தன்மை என்று சொல்லலாமா? அல்லது பெருந்தன்மை என்று சொல்லலாமா? யோசித்துப் பாருங்களேன், அவர்களது அந்த செயலுக்கு உலகில் எந்த மொழியில் உள்ள எந்த வார்த்தையும் சரியாய்ப் பொறுந்தாது.

வீடு கோயில் மாதிரி என்றுதான் சொல்லக் கேட்டிருக்கிறோம். வீட்டை காலி செய்து அடுத்தவர்களுக்கு கழிவறையாகக் கொடுத்ததது இருக்கிறதே இதற்கு ஒப்புமை வரலாற்றில் புராணத்தில் எங்கேனும் இருக்கிறதா?

1) தங்களது வீடுகளையே உங்களுக்கு கழிவறையாகத் தாரை வார்த்திருக்கிறார்கள்.
2) அவர்களது வீடுகளை சேலைகள் கொண்டு மறைத்தால்தான் உங்களுக்கான கழிவறைகளாகவே அவை மாறியிருக்கின்றன
3) நீங்கள் கழிவறையாய்ப் பயன்படுத்திய இடங்களை அவர்களே சுத்தம் செய்து அவற்ரில் அவர்கள் மீண்டும் குடியேறினார்கள்
4) இதற்காகத்தான் அவர்கள் மிகக் கொடூரமாகத் தாக்கப் பட்டிருக்கிறார்கள்
5) இதற்காகத்தான் உங்களது கழிவறைபோல இருந்த அவர்கள் வீடுகள் தரைமட்டமாக்கப் பட்டிருக்கின்றன

உங்களிடம் வினவுவதற்கும் உரையாடுவதற்குமான எனது வெளி இந்தப் புள்ளியில்தான் தொடங்குவதாக நினைக்கிறேன்.

உங்களது கோரிக்கைகளை நீங்கள் பொதுமக்கள் நலன் சார்ந்து, கார்ப்பரேட் ஸ்தாபனங்களுக்கு எதிராக என்று நீங்கள் களத்திலிருந்தபடி விஸ்தரித்தீர்கள். அதுவேதான் உங்களோடு களமேகிய அல்லது அரசியலற்றவர்கள் என்று கருதி களத்திற்குள் உங்களால் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு எரிச்சலாய் இருந்தது. ஆனால் நீங்கள் ஒன்றுதிரளத் தொடங்கியபோது “ஜல்லிக்கட்டு” என்பதுதான் உங்களது ஒற்றைக் கோரிக்கையாகவும் இருந்தது. நாடெங்கிலும் போராடிய லட்சக்கணக்கான உங்களில் எத்தனைபேருக்கு ஜல்லிக்கட்டு என்றால் புரியும். உங்களில் பெரும்பான்மை குழந்தைகளுக்கு தெரியாது என்பது எனக்குத் தெரியும்.

நீங்கள் மெரினாவில் கூடத் தொடங்கிய சற்று நேரத்திற்கெல்லாம் பெரம்பலூர் பாலக்கறையில் பிள்ளைகள் திரளத் தொடங்கினார்கள். அவர்களுள் கிஷோரும் ஒருவன். தொண்டை கிழிய அவர்கள் போட்ட கோஷம் “ வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும்” என்பது.

“வாடி வாசல்னா என்னப்பா?” என்று இரண்டு நாட்கள் கழித்து அவன் கேட்டான். விளக்கினேன். அவன் வேறு நீங்கள் வேறு அல்ல. எனில் உங்களில் பெரும்பான்மையோருக்கு ஜல்லிக்கட்டு பற்றி விவரம் தெரியாது. பிறகு ஏன் இப்படியொரு வலிமையான போராட்டத்தை கை எடுத்தீர்கள்.

ஜல்லிக்கட்டு  என்பது தொன்மையான தமிழ் கலாச்சாரம் என்றும் அது இனத்தை அழிப்பதன் பொருட்டு தடை செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டவுடன் இன அழிவை அனுமதிக்கக் கூடாது என்று எழுச்சியோடு திரண்டீர்கள். அநீதி என்று நீங்கள் கருதிய ஒன்றிற்கு எதிராக நீங்கள் போராட வந்ததே மகிழ்ச்சியான விஷயம்.

ஜல்லிக்கட்டு தமிழ்க் கலாச்சாரத்தின் விழுமியமான கூறுதான். அதைத் தடை செய்வதென்பது இனத்தின்மீதான தாக்குதல்தான். உங்கள் போராட்டம் நியாயமானதுதான். ஆனால் குழந்தைகளே தங்களது வீட்டையே உங்களுக்கு கழிப்பிடமாகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்த இந்த மீனவர்களும், யார் யாரெனப் பகுத்துணரமுடியாதபடி உங்களில் ஒரு பகுதியினர் தமிழர்களின் கலாச்சார விழுமியம் என்று அழைக்கப் படுகிற ஜல்லிக்கட்டில் பங்கேற்க முடியாது என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?

பொதுவாக போராடுவார்கள், அடி படுவார்கள், வெற்றி பெருவார்கள். நீங்கள் போராடினீர்கள், வெற்றி பெற்றீர்கள், வெற்றி பெற்றபின்தான் உங்களை அவர்களால் தாக்க முடிந்தது. இது போராட்டக் களத்தில் புதிது.

ஜல்லிக்கட்டிற்கான தடை நீங்கியதும் தடையை நீக்கிய அரசுக்கு நன்றி சொன்னார்கள் உங்களுக்கும் நன்றி சொன்னார்கள். உங்களுக்காக கேலரி அமைப்பதாகவும் வந்திருந்து வேடிக்கைப் பார்க்குமாறும் அழைத்தார்கள்.

ஜல்லிக்கட்டு உங்களுடையது எனில் அதை நீங்கள் அல்லவா நடத்தியிருக்க வேண்டும்? போராட்டம் வெற்றி பெற்றதும் நீங்கள் விருந்தாளியாகிப் போனீர்கள்.

இந்த ஜல்லிக்கட்டிற்கான காரணிகளாக நான் பார்ப்பது

1) உங்களின் போராட்டம்
2) மீனவர்களின் கடுமையான போராட்டம்

அதற்கான விலையாக நான் பார்ப்பது

1) உங்கள் மீதான தாக்குதல்
2) நம்பப்படுகிற சில உயிரிழப்புகள்
3) நடுக்குப்பம் தரை மட்டமானது

இவற்றிற்கு எதிராக ஜல்லிக்கட்டு நடத்தக்கூடிய யாரேனும் கொதித்திருக்கிறார்களா? குறைந்தபட்சம் ஒரு அறிக்கையேனும் கொடுத்திருக்கிறார்களா? ஒருபோதும் மாட்டார்கள். காரணம் அவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்குத் தேவையான ஜல்லிக்கட்டு அவர்களுக்கு கிடைத்துவிட்டது. ஒரு நன்றி சொல்லுதலோடு அவர்கள் நகர்ந்து விட்டார்கள்.

இப்போது பலநூறு மாணவர்கள் மீது வழக்குப் பதிந்திருக்கிறது அரசு. மீனவ இளைஞர்களையும் பெண்களையும் குறிவைத்து தாக்குகிறது காவல்துறை.

போராட்டத்திற்குப் பிறகான தாக்குதல் என்பது போராட்ட அரசியலில் ஒரு கூறு. அதை எதிர்கொள்வதற்கு தியாகத் தளும்பேறிய ஒரு அரசியல் வேண்டும். அந்த அரசியலை நீங்கள் கையிலெடுக்க வேண்டியதும் கற்றுத் தெளிய வேண்டியதும் அவசியம்.

இந்தப் போராட்டத்தில் எங்கு அரசியல் ஈலை என்று நினைக்கிறீர்கள்?

ஒரு வாரமாக வாடி வாசலைத் திறக்க வேண்டும் என்று நீங்கள் போராடினீர்கள்.. அவர்கள் மறுத்தார்கள். அந்தத் திங்களன்று அவர்கள் வாடி வாசலைத் திறந்துவிட வேண்டுமென்று துடித்தார்கள். நீங்கள் திறக்கவிடாது தடுத்தீர்கள்.

இதுதான் அரசியல்.

உங்களிடம் வந்து பேசுமாறு முதல்வரை அழைத்தீர்கள். அவரும் அதையே விரும்பியதாகவும் சொல்கிறார்கள். அவர் அலங்காநல்லூருக்கு அன்று போகவே விரும்பவில்லை என்றும் சொல்லப்படுகிறது. ஒருக்கால் அவர் உங்களிடம் நேரில் வந்து அவர் உரையாற்றி இருந்தால் பிரச்சினை அன்றோடு சுமூகமாக முடிந்திருக்கும். ஆனால் நேர் மாறாக எல்லாம் நடந்ததுதான் வெகுஜன கார்ப்பரேட் அரசியலின் நுட்பம்.

நீங்கள் பெப்சி கோலாவைத் தடை செய்ய வேண்டும் என்று கோரியவுடன் இதற்காக நாம் கூடவில்லை என்று சொன்னார்களே அவர்கள் யார் பிள்ளைகளே? அவர்கள் எல்லாம் பெரும்பாலும் ஆதிக்கப் பகுதியில் இருந்து வந்திருப்பவர்களும் பெரு முதலாளிகளும் கார்ப்பரேட்களும்தான்.

அரசியல் என்பது கரைவேட்டியும், தேர்தல் நேரத்து வாக்கு சேகரிப்பும் ஆட்சியைப் பிடித்தலும் அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். வெகுஜன முதலாளித்துவ அரசியல் கட்சிகளை இயக்குவதும் ஆட்சிகளை இயக்குவதும் கார்ப்பரேட்கள்தான்.

சமையல் எரிவாயுவிற்கான மானியத்தை பொதுமக்கள் திருப்பித் தரவேண்டும் நாளும் பொழுதும் போராடிக் கொண்டிருக்கிற நமது பிரதமர் பல்லாயிரம் கோடிக்கணக்கிலான சில பெரு முதலாளிகளின் கடனை தள்ளுபடி செய்தபோது மௌனம் காத்தாரே அதுவும் கார்ப்பரேட்  அரசியல்தான்.

வரி கட்ட மாட்டேன் என்று வம்படிக்கும் அம்பானிக்கு கடன் வசூலிக்கும் உரிமையை கொடுத்ததும் அதன்மூலம் நிகழ்ந்த மாணவனின் தற்கொலையும்கூட முதலாளித்துவத்தின் அரசியல்தான்.

கட்டணக்கொள்ளையும் அரசியல்தானே.

இந்த மோசமான அரசியலை எதிர்கொள்ள நல்ல மாற்று அரசியல் தேவை இல்லையா? அந்த மாற்று அரசியலை யார் செய்கிறார்கள் என்று நீங்கள் தேட வேண்டும். அவர்களோடு இணைய வேண்டும்..

பாதிக்கப்பட்ட மீனவர்களுக்காக யார் போராடிக் கொண்டிருக்கிறார்களோ அவர்களோடு இணையுங்கள். இப்பொழுதும் சொல்கிறேன் அவர்கள் கட்சியில் இணையக்கூட வேண்டாம். அவர்களது அரசியலை போராட்டங்களை ஆதரியுங்கள்.

எல்லாம் மோசம் என்பதும் அரசியலே வேண்டாம் என்பதும்கூட அயோக்கியத் தனமான கார்ப்பரேட் அரசியலின் கூறுகள்தான்.
கோளாறுகளும் குறைபாடுகளுமில்லாத இடம் இல்லை.

ஈழ விஷயத்தில் இன்னும் கொஞ்சம் வெளிப்படையாக அவர்கள் வெளி வந்திருக்க வேண்டும் என்று நினைப்பவன்தான் நான். கூடங்குளம் அணு உலை விஷயத்தில் அவர்களது நிலைப்பாடு எனக்கு வருத்தத்தத்தை தருகிறதுதான்.

ஆனால் இடது சாரிகளின் போராட்டத்தில் அர்ப்பணிப்பில் தியாகத்தில் எளிமையில் என்ன குறை இருக்கிறது? போக உங்களைப் போன்ற மாணவர்கள் சேர்ந்தால் இடதுசாரிகளின் போக்கும் மாறக்கூடும் என்று நம்பிக்கைக்கூட எனக்கு உண்டு.

நேற்றுகூட வாசுகி உமாநாத் காவல் நிலையத்தில்  இருந்து மாணவர்களை மீட்பதற்கான முயற்சியில் இருக்கும் தகவல் வந்தது. தோழர் சிந்தன், குமார், செல்வா போன்றோர் நடுக்குப்பத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

நான் எனக்குத் தெரிந்ததை சொன்னேன். தமிழ்த் தேசியர்களும், தீவிர இடதுசாரி மனோபாவம் கொண்டவர்களும் அங்கு இருக்கக் கூடும்.

அனைத்தையும் உள்வாங்குங்கள். உங்களுக்கு சரியெனப் பட்டதை செய்யுங்கள்.

நீங்கள் போராட்டத்தைச் தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்னால் அரியலூருக்கு அருகே நந்தினி என்கிற 17 வயதான தலித் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப் பட்டு கிணற்றில் வீசப் பட்டிருக்கிறாள். 15 நாட்கள் கழித்துதான் அழுகிய நிலையில் அவளது உடல் கண்டெடுக்கப் பட்டிருக்கிறது. இதை செய்தவர் ஒரு இந்துத்துவா அமைப்பின் தலைவர் என்று நம்பப்படுகிறது.

ஆனால் நடவடிக்கை வேறுமாதிரி நகர்கிறது.  உண்மையான குற்றவாளியை கைது செய்யும்வரை ஏற்கனவே அழுகிய நிலையில் இருந்த அவளது உடலை வாங்க மாட்டோம் என்று அவளது உறவினர்கள் மூன்று நான்கு நாட்கள் போராடிய நிலையில் வேறு வழியின்றி வாங்கி ஈமச் சடங்குகளை முடிக்கிறார்கள்.

17 வயது மதிக்கத்தக்க ஒரு தமிழ்ப் பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்வதவன் தண்டனை பெறாது ஊர்வலம் வரலாம் என்பது தமிழ்க் கலாச்சாரத்தை ஊறு செய்யாதா பிள்ளைகளே?

இப்படி ஒரு காரியத்தை செய்தாலும் அவன் சுதந்திரமாக நடமாடலாம் என்பது மேட்டுக்குடி அரசியல். அதற்கு எதிராய் ஒரு மாற்று அரசியல் வேண்டாமா?

அதற்காக உடனே ஒன்றுதிரண்டு போராடுங்கள் என்றெல்லாம் சொல்லவில்லை. உங்கள் சக்திக்கு ஏற்றவாறு எதையேனும் செய்ய வேண்டாமா?

குறைந்த பட்சம் எல்லா கல்லூரி மாணவர்களும் ஒருநாள் இதற்கு எதிராக கருப்பு பேட்ஜ் அஅணிந்து வகுப்புகளுக்குப் போகலாமல்லவா? அந்தந்தக் கல்லூரி வாயில்களில் அமைதியாக வாயில் கூட்டங்கள் நடத்தலாமே?

இதுதான் மாற்று அரசியலின் தொடக்கம். இதற்கு நல்ல வழிகாட்டுதலும் நெறிப்படுத்துதலும் அவசியம். ஒன்று சொல்லி முடிக்கிறேன்

இந்தப் போராட்டத்தின் வெளிச்சத்தில் ‘அரசியல் படியுங்கள்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...