காலை கூட்டுப் பிரார்த்தனை முடிந்தது வகுப்புகள் தொடங்கியதும் பத்தாம் வகுப்பு ஆசிரியை வகுப்புக்கு வராத மாணவனை வகுப்புத் தலைவியோடு என்னிடம் அனுப்பியிருந்தார்.
”ஏண்டா?”
“ நேத்திக்கு ஸ்கூலுக்கு வரலன்னு டீச்சர் உங்களப் பார்த்துட்டு வரச் சொன்னாங்க சார்”
” ஏண்டா நேத்து ஒரு நாளைக்காகவா டீச்சர் அனுப்பினாங்க?”
“ ஆமாம் சார். நேத்தி தான் சார் வரல”
இடை புகுந்து வகுப்புத் தலைவி சொன்னதுதான் இங்கு நம்மைக் கொண்டு வந்து நிறுத்தியது
அந்தக் குட்டி பொண்ணு சொன்னாள்,
“இல்ல சார், இவன் கரண்டு மாதிரி எப்பவாச்சும்தான் ஸ்கூலுக்கு வரான்”
இன்னமும் எப்பவாச்சும்தான் வருதா கரண்ட்?!!
ReplyDeleteகிராமங்களில் இப்பவும்தான். இது போன வருடம் முகநூலில் வைத்தது தோழர். ஆவணாப் படுத்தும் நோக்கில் இங்கே வைக்கிறேன்
Delete