கடந்த மூன்று வாரங்களில்
“இவ்வளவுதான்” என்ற எனது இரண்டாவது கவிதை நூல் வேரல் பதிப்பகத்தின் மூலம் வந்திருக்கிறது
இந்த நூல் இவ்வளவு அழகாக வந்திருப்பதற்கு தோழர்
அம்பிகா குமரன்தான் காரணம்
கிட்டத்தட்ட 100 கவிதைகளை அவருக்கு அனுப்பியதோடு என் வேலை முடிந்துவிட்டது
அதை இவ்வளவு செறிவாக எடிட் செய்து கொடுத்தது அவர்தான்
அட்டைப்படத்திற்காக அவர் வைத்துள்ள இரண்டு கவிதைகளையும் சலித்து எடுத்து வைத்திருக்கிறார்
திண்டுக்கல்
Vetrimozhi Veliyeetagam வெளியிட்ட “நான் ஏன் உங்களுக்கு வாக்களிக்கப் போவதில்லை? என்ற புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு வந்திருக்கிறது
200 நூல்கள் விற்றிருக்கின்றன
வானம் வெளியீடான “7B னா சும்மாவா?” வின் மூன்றாம் பதிப்பு வந்திருக்கிறது
எடுத்த எடுப்பிலேயே 650 பிரதிகளை ஒரு பள்ளிக் குழந்தைகளுக்காக வாங்கியிருக்கிறோம்
இந்த நூலைப் படித்துப் பார்த்த தோழர் அறச்செல்வன் மே மாதம் 22ஆம் நாள்
தனது வீட்டின் திறப்புவிழாவிற்கு வருபவர்களுக்கு கொடுப்பதற்காக 750 பிரதிகள் கேட்டிருக்கிறார்
மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது