நாமொன்று எழுதியிருப்போம்
நமது பிள்ளைகளும் அதுகுறித்து எழுதுவார்கள்
நம் குழந்தைகள் எழுதுவது தனது வீரியத்தால் நம்முடைய படைப்பை
சின்னதாக்கும்
அல்லது
இல்லாமல் செய்யும்
இரண்டில் எது நடந்தாலும்
எழுதிய கிழவன் அதைக் கொண்டாட வேண்டும்
தன்னிலும் தன் பிள்ளை வீரியமானவன் அல்லது வீரியமானவள் என்ற உண்மை தரும் மகிழ்ச்சிக் கொண்டாட்டம் அது
நம் தலைமுறையைவிட அடுத்த தலைமுறை பேரதிக விஷயத்தோடும் வீரியத்தோடும் இருக்கிறார்கள்
நிச்சயம் விடியும் என்ற நம்பிக்கை தரும் கொண்டாட்டமாக இருக்க வேண்டும் அது
அப்படியான ஒரு மகிழ்வு எனக்கும் வாய்த்திருக்கிறது
“காக்கையும்
குருவியும்
எங்கள் சாதியும்
எங்கள் சாதி”
என்று ஒருமுறை எழுதினேன்
ஏதோ பெரிதாய் எழுதிவிட்டாதாய் எனக்குள் இருந்த இருமாப்பை பிள்ளை Karikalan Kiru வின்
“காக்கை குருவி
எங்கள் சாதி
இளவரசன்
தலித் சாதி”
என்ற கவிதை
எவ்வளவு நுட்பம். எவ்வளவு துல்லியம்
இதை எழுதுகிறபோது கரிகாலனுக்கு 20 வயது
அதை எழுதுகிறபோது எனக்கு வயது 50
50 வயதுக் கிழவனை 20 வயதுக் குழந்தை ஒலி கொடுக்காமல் வழிபெற்று முந்துகிறான்
இவன் 50 வயதில் காலம் தரும் அனுபவம் கொண்டு எப்படி எல்லாம் எழுதுவான்
இந்தக் கவிதையை இவன் எழுதியபோதே அறிவுமதி அழைத்துப் பாராட்டி இருப்பதும் கொள்ளத் தக்கது
எழுத்தைப் படித்தால்தான் நமக்கு பாராட்ட வரும்
எழுதுவான் இவன் என்றுணர்ந்த மாத்திரத்திலேயே கொண்டாடும் நண்பன் மதி
மைக்கும் வேண்டும் பேனாவும் வேண்டும் கரிகாலன்
கரிகாலனுக்கும் மதிக்கும் முத்தம்