Sunday, November 5, 2023

சொடக்குகிற பொழுதில் மருத்துவமனைகளை

 

இரண்டு நாட்களுக்கு முன்பு பேராவூரணியில் ஒரு பள்ளிக் கட்டிடம் பழுதடைந்த நிலையில் தகரக் கொட்டகை நிறுவி பள்ளியை நடத்திவந்த நிலையில்
குழந்தைகளின் பாதுகாப்பு கருதி தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோரோடு சட்டமன்ற உறுப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப செய்ததை வைத்திருந்தேன்
04.11.2023 அன்றைய தமிழ் இந்துவில் இன்னொரு செய்தி வந்திருக்கிறது
மருதூர் தெற்குப்பட்டி,
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகில் உள்ள கிராமம்
அங்கு உள்ள தொடக்கப் பள்ளியில் 100 குழந்தைகள் படித்து வருகிறார்கள்
அந்தப் பள்ளியில் கூரைப் பூச்சும் சுவர்ப் பூச்சும் பெயர்ந்து விழுந்து குழந்தைகளின் மேலும் விழுவதால்
பெற்றோர்கள் பாதுகாப்பு கருதி தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்த சூழலில்
மாவட்ட ஆட்சித் தலைவர் திருமிகு ஆனிமேரி ஸ்வர்ணா அவர்கள் 06.11.2023 முதல் வேறு இடத்தை ஏற்பாடு செய்து பள்ளியை நடத்த உத்தரவிட்டுள்ளார்
நமக்கு எழும் கேள்வி வயதான கட்டங்களை இடித்துவிட்டு புதிய பள்ளிக் கட்டடங்களை கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்
சொடக்குகிற பொழுதில் மருத்துவமனைகளை, விளையாட்டுத் தளங்களை ஏற்பாடு செய்கிற முதல்வர் இதில் பேரதிகமாக கவனம் குவிக்க வேண்டுமாய் வேண்டுகிறேன்
அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையும் அழைத்து
அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர்களை அழைத்து
தங்களது எல்லைக்குட்பட்ட பகுதியில்
இடிந்து விழும் நிலையில் உள்ள
அல்லது,
குழந்தைகள் அமர்ந்து படிக்க பாதுகாப்பற்ற பள்ளிகளின் விவரங்களைக் கண்டறிய வேண்டும்
சரி செய்ய வேண்டும்

04.11.2023

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...