வசந்தி
இவரிடமிருந்து நட்பழைப்பு வந்திருந்தது
யார் என உள்ளே போய்ப் பார்த்தால்
இன்னும் உள்ளே போகிறேன்
கட்சிக்காரர்
பதிவுகளைப் பார்க்கிறேன்
எளம்பலூரில் கல்விக்கடன் பெற்று ஒரு குழந்தை படும் அவஸ்தையை, அவமானத்தை ஒரு பதிவு சொல்கிறது
இழவு வீடுகளில்
செத்தவனுக்காக அழுவதா?
இல்லை அடக்கம் செய்ய காசற்று இருக்கும் கையறு நிலையை நினைத்து அழுவதா?
என்று அந்த ஏழையின் வலியைக் கடத்தும் இவருக்கு
மாலைக்கு பதில் காசைக் கொடுங்கப்பா
என்று தீர்வு சொல்லவும் தெரிகிறது
பூ விற்றால் படிக்கலாம் என்று பூ விற்கும் குழந்தை அசதியில் தூங்கிவிடுவதாக ஒரு பதிவு
தனது தந்தை இறந்த பொழுது
அவரைக் காப்பாற்ற முயன்ற தன்னோடு உடன் இருந்தவர்களை
நன்றியோடு பதிய வருகிறது
எப்படி இவரை இவ்வளவு காலம் மிஸ் செய்தேன்
எங்கள் மாவட்டத்தில்,
எங்களது கட்சியில்
இன்னுமொரு எழுத்தாளர்
எழுதுங்க வசந்தி
நூலாக்கி விடலாம்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்