பழைய பேராவூரணியில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளிக்கு தங்களது குழந்தைகளை அனுப்ப மாட்டோம் என்று பெற்றோர்கள் போராட்டத்தை நடத்திய செய்தியை 01.11.2023 தீக்கதிர் சொல்கிறது
அந்தத் தொடக்கப் பள்ளியில் ஏறக்குறைய 65 குழந்தைகள் படிக்கிறார்கள்
அது ஒரு ஈராசிரியர் பள்ளி
ஐந்து வகுப்பறைகளைக் கொண்ட அந்தப் பள்ளிக் கட்டிடம் பழுதடைந்து பயன்படுத்த முடியாமல் போனதும்
தகரக் கொட்டாய் போடப்பட்டு பள்ளி இயங்கி இருக்கிறது
மழைநீர் உள்ளே வரவும் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்திருக்கிறார்கள் பெற்றோர்கள்
சிறு குழந்தைகள் என்றால் சத்தம் போடுவார்கள்
சொல்லச் சொல்ல சொல்வார்கள்
தகரக் கொட்டகை
இந்தச் சத்தத்தை ஒருமாதிரி எதிரொலிக்கும்
அதுவும் குழந்தைகளை எரிச்சல்படுத்தும்
மன உளைச்சலைத் தரும்
இதை உணராதவர்களா கல்வித்துறை அதிகாரிகள்
சட்டமன்ற உறுப்பினர் அலைபேசிவழி தலையிட்டு
விரைவில் சரி செய்து தருவதாக உறுதியளித்த பின்பே மக்கள் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பி இருக்கிறார்கள்
ஒரு சட்டமன்ற உறுப்பினர் இத்தனை நாள் என்ன செய்துகொண்டிருந்தார்?
அழைத்து வைது அனுப்புங்கள் ஸ்டாலின் சார்
இத்தனை சீக்கிரம் மருத்துவமனையைக் கட்ட முடிந்த உங்களால்
65 குழந்தைகளுக்கான பள்ளியைக் கட்டுவது சிரமம் அல்ல
விரைந்து கட்டித் தாருங்கள்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்