இது ஆறு முதல் ஒன்பதாம் வகுப்புவரை படிக்கும் அரசுப் பள்ளி குழந்தைகளுக்கான இதழ்
அட்டை முதல் அட்டைவரை அந்தக் குழந்தைகளே படைப்பாளிகள்
இந்த இதழில்,
புதுச்சாம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு குழந்தை இளமதி ஸ்டேப்ளர் குறித்து எழுதிய பதிவு
அந்தக் குழந்தை அளவில் அதை கட்டுரை என்றுதான் கொள்ள வேண்டும்
அந்தக் கட்டுரை குறிப்பிடத்தக்கது
அதிலும் ஸ்டேப்ளர் என்பதற்கு ”பிணைப்பி” என்று தமிழ்ப்படுத்தி இருக்கிறாள்
அந்தக் குழந்தையை வாரி அணைத்துக் கொள்கிறேன்
“பிணைப்பான்” என்று வைக்காமல் “பிணைப்பி” என்று பெயர் வைத்ததன் மூலம் ஸ்டேப்ளரை பெண்பாலாக்கி இருக்கிறாள்
தரணீஸ்வரியின் தனது ஊரான “உமரிக்காடு” குறித்த கட்டுரையும் மிக மிக அற்புதமானது
வாசித்ததில் பிடித்தது, நூல் அறிமுகம், தகவல்கள் என்று நிரம்பி வழிகிறது
மாதா மாதம் கிட்டத்தட்ட 120 படைப்பாளிகளை உருவாக்குவது என்பது ஆச்சரியம்
தமிழ்நாடு அரசின் ஆச்சரியங்களில் “தேன்சிட்டு” முக்கியமானது
பின்பக்கத்தில் குழந்தைகளின் பெயர் மற்றும் முகவரிகளோடும் வைத்தால் இன்னும் சிறக்கு
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்