Friday, April 3, 2015

கல்வி உரிமை சட்டம்

வழக்கமாக நான் விடாமல் வாசிக்கும் பதிவுகளுள் தம்பி  கார்த்திகேயன் இரா​ அவர்களது பதிவுகளும் அடங்கும். தொடர்ந்து அவரோடு பேசவும் செய்வேன். இன்றைய அவரது  கீழே நான் தந்துள்ள கீழுள்ள படத்தோடு கூடிய இந்திய கல்வி உரிமைச் சட்டம் குறித்தான பதிவு மிக ஆழமானதும் அவசியம் விரித்துப் பேசவேண்டியதுமாகும்.





2009 ஆகஸ்ட் மாதவாக்கில் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப் பட்டது இந்தச் சட்டம்.

ஒரு அரசின் தலையாயக் கடமைகளுள் முதன்மையானது குழந்தைகளுக்கு கல்வியைத் தருவது. இப்போதும் நான் சொல்ல ஆசைப் படுவது என்னவெனில் இது அரசு தரும் இலவசக் கல்வி என்று ஆகாது. ஒருபோதும் அப்படி ஆகிவிடக் கூடாது. பெற்றெடுத்த குழந்தைகளுக்கு சோறு போட்டுவிட்டு நான் என் மகனுக்கும் மகளுக்கும் இலவசமாக சோறு போட்டேன் என்று சொன்னால் அது எவ்வளவு அசிங்கமோ அதைவிட அசிங்கமானது தன் குழந்தைகளுக்கு அரசு தரும் கல்வியை இலவசக் கல்வி என்று அரசே அழைப்பது.

ஒரு அரசாங்கம் மக்கள் அரசாங்கமாக இருக்குமானால் கல்வியை, குறைந்த பட்சம் பள்ளிக் கல்வியை இன்னும் கொஞ்சம் கீழே இறங்கி வந்தால் குறைந்தபட்சம் தொடக்கக் கல்வியை தனியார் கையிலெடுக்க அனுமத்திருக்காது. அத்தனை பள்ளிகளும் அரசின் கையில் இருந்திருக்கும்.

இருந்த போதிலும் இந்த அளவுக்கேனுமான சட்டம் கூட மகிழ்வைத் தருகிறதுதான். காரணம் ஒடுக்கப் பட்ட கல்வி  மறுக்கப் பட்ட ஏழைக் குழந்தைகளும் இதுமாதிரி உடைகளோடு பள்ளிக்குப் போவார்களே என்ற மகிழ்வுதான்



இப்போது இந்தச் சட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளிடம் அரசு கேட்பது என்னவெனில் உங்கள் பள்ளிகளில் உள்ள காலி இருக்கைகளை நிறப்பும் போது அதில் 25 விழுக்காடு இருக்கைகளை  நாங்கள் குறிப்பிடும் ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும். இதைக் கண் காணிப்பதற்கு அரசுக்கு உரிமை உண்டு என்கிறது இந்தச் சட்டம். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம் எப்படி செயல் படுகிறது என்று தெரியவில்லை.  ஆனால் 2011 வாக்கில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்த அல்லது நடைமுறைப் படுத்திய இந்தச் சட்டத்தின் படி பார்த்தால் இது இலவசக் கல்வியே அல்ல.

 இந்தச் சட்டத்திற்குள் உரிமை கோருவதற்கு குழந்தைகளுக்கு உள்ள விதிமுறைகள் என்னவென்று தெரியவில்லை. ஆனால் இந்தச் சட்டத்தின் வாயிலாக கல்வி பெறும் குழந்தைகளுக்கான கட்டணத்தை அரசே செலுத்தி விடுகிறது. நிறுவனங்களுக்கு என்ன நட்டமெனில் இந்த 25 விழுக்காடு குழந்தைகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மட்டுமே கிடைக்கும்.

இந்த சட்டத்தின் பேரில் சேர்க்கப் பட்ட குழந்தைகளுக்கான கட்டணத்தை அரசு செலுத்தவில்லை என்றும் எனவே அந்த 25 விழுக்காட்டினை ஒதுக்க இயலாது என்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கம் ஒரு முறை சொன்னது. உடனே அரசாங்கம் அதை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தி விடுவதாக சொன்னது. செலுத்தியுமிருக்கும்.

இதில் ஒரு ஆபத்து இருக்கிறது. பச்சையாய் சொல்லப் போனால் அதிகாரிகளுக்கும் நிர்வாகிகளுக்குமிடையே ஒரு ஒத்திசைவு ஏற்படுமானால்  மிகப் பெரிய ஊழலுக்கு வாய்ப்பிருக்கிறது.

ஒரு பள்ளியில் 1000 மாணவர்கள் சேர்க்கப் படுகிறார்கள் எனில் 250 பேர் இந்தக் கோட்டாவின் வழி சேர்க்கப் பட வேண்டும். அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்குமானால் 1000 மாணவர்களையும் தானே சேர்த்துக் கொண்டு அதில் 250 மாணவர்களை இந்தக் கோட்டாவில் சேர்த்ததாக ஒரு தனிக் கணக்கைக் காட்டிவிட முடியும்.

இதை இடம் கிடைத்தால் போதும் என்கிற அளவில் உள்ள பெற்றோர்கள் கண்டுகொள்ளப் போவதில்லை.

இது சாத்தியப் படும் பட்சத்தில் 250 மாணவர்க்களுக்கு அரசு வழங்கும் கட்டணம் உபரி வருமானமாகிறது. இதில் ஒரு பங்கை இணங்கும் அதிகாரிகளுக்கு கொடுத்துவிட்டாலுங்கூட ஒரு பெருந்தொகை நிர்வாகிகளுக்கு மிஞ்சும்.

பணம் கடந்து எந்த ஏழை குழந்தைகளுக்காக இந்தச் சட்டம் கொண்டு வரப் பட்டதோ அந்தக் குழந்தைகளுக்கு பலனற்றுப் போகும். எனவே கல்வி குறித்து அக்கறை கொண்டோர் ஒரு குரலில் வருடா வருடம் இந்த சட்டத்தின் வழி பயன்பெறும் குழந்தைகள் பற்ரிய விவரங்களை வெளியிடக் கோரி போராட வேண்டும்.

2 comments:

  1. உண்மைதான் தோழ்ர் அரசு பயன்பெற்ற குழந்தைகள் பற்றிய விவரங்களை வெளிப்படையாய் அறிவிக்க வேண்டும்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. சத்தியமாய் வைக்க மாட்டார்கள் தோழர். மிகக் கடுமையான போராட்டங்களே அந்த வேலையை செய்யும்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...