Tuesday, January 26, 2016

அழைப்பு 22



மிக மிக விலை உயர்ந்த சந்தைப் பொருளாக கல்வி மாறிப்போய் நீண்ட காலமாகிவிட்டது. காசுள்ளவன் படிக்கக் கடவன் என்கிற புள்ளியை கல்வி சற்றேறக் குறைய தொடுகிற தூரத்திற்கு சென்றாயிற்று.
தேர்ச்சி விழுக்காடு குறித்த பதை பதைப்பும், மதிப்பெண் குறித்த பதை பதைப்பும் கல்வியை ஏழைகளிடமிருந்து களவாடிவிடும் என்ற அச்சம் நியாயமானது. இப்போதே எல்லாரும் படித்துவிட்டால் யார் கூலி வேலை செய்வது என்கிற பொது அங்கலாய்ப்பை கேட்க முடிகிறது. எனில், எல்லோருக்குமான கல்வி என்பதற்கு பொதுவில் எதிர்ப்பிருக்கிறது மேட்டுக் குடிகளிடம். இதை கூர்ந்து ஆய்ந்தால் தேர்ச்சி விழுக்காடு குறித்த தேவையற்ற முக்கியத்துவம்கூட ஏழைகளின் கல்வியில் மண்ணள்ளிப் போடும் என்பது புரியும்.
இருந்த போதிலும் பொதுப் பள்ளிகள் நம்பிக்கைப் பேரொளியாய் உழைக்கும் வர்க்கத்திற்கு வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது.
ஆனால் அதுவும் பையப் பைய தேய்ந்து காணாமல் போய்விடும் அபாயம் கண்ணுக்கெதிரே தெரிகிறது.
இந்த நிலையில் தேர்தல் வருவதால், பொதுக் கல்வியின் தேவை குறித்தும் அது சந்திக்கும் ஆபத்துகள் குறித்தும் எடுத்துச் சொல்லி அவற்றிலிருந்து பொதுக் கல்வியை காப்பாற்றும் வகையில் தங்களது தேர்தல் வாக்குறுதிகளை வடிவமைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளை நிர்ப்பந்திக்கத் தோதாக ’கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு’ ஒரு கூடலை வரும் 31.01.2016 அன்று சென்னையில் ஏற்பாடு செதுள்ளது.
நான் கலந்து கொள்கிறேன்.
வாய்ப்புள்ள தோழர்கள் வர முயற்சி செய்யுங்கள்.
சந்திரிகா சேம்பர், அந்தோணி சாலை, (பைலட்
திரையரங்கம் எதிரில்) இராயப்பேட்டை, சென்னை.

6 comments:

  1. நல்லது நடக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் நடக்கும் தோழர்

      Delete
  2. தாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பணியும் சிறப்பானதாக உள்ளது. தங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete
  3. வாழ்த்துக்கள்! முயற்சி சிறக்கட்டும்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...