ஆயிரம்தான் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் H.ராஜா அவர்கள் பொறுப்புமிக்க ஒரு தலைவர் என்பதை நாம் உணர்ந்தே இருக்கிறோம். சோதனை என்னவென்றால் இதை ராஜா அவர்கள் உணர்ந்ததாகவே தெரியவில்லை.
தந்தை பெரியார் அவர்களின் சித்தாந்தத்திலோ செயல்பாட்டிலோ உங்களுக்கு கருத்திருப்பின் சொல்லுங்கள். அதற்கான உங்களது உரிமையை மறுக்கவில்லை.
உளறுவதை அருள்கூர்ந்து நிறுத்துங்கள்.
தந்தை பெரியார் என்பவர்களுக்கெல்லாம் அவர்தான் தகப்பனா என்பது மாதிரி உளரியிருக்கிறீர்கள்.
ஒன்று கேட்கவா நீங்கள் உங்கள் கட்சியின் மரியாதைக்குரிய பெண்ணுறுப்பினர் எவரையும் தங்கை என்றோ சகோதரி என்றோ விளித்ததே இல்லையா?
நிச்சசயமாய் இருக்கவே இருக்கும்.
எனில் உங்கள் இருவருக்கும் ஒரே தந்தைதானா என்று யாரேனும் உளரினால் அவருக்கும் எதிரான குரல்தான் இந்தப் பதிவு.
பின் குறிப்பு: சென்ற வருடம் இதே நாளில் எழுதியது. இன்னும் அவர் மாறியதாகத் தெரியவில்லை. எனவே நானும் மீண்டும்...
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்