அது ஒரு சனி. மதுரைக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தபோது தம்பியிடமிருந்து அழைப்பு.
“சொல்லுடா”
“கிழவி உன்னோட பேசனுமாம். இதோ தரேன்.”
“ சொல்லு காட்டம்மா”
“ பார்க்கனும்போல இருக்கு. வந்துட்டுப் போப்பா.”
“ அடுத்தவாரம் வரேன். இப்ப மதுரைக்குப் போறேன் காட்டம்மா”
“ மதுரைக்கா... பாத்து சூதானமா போயிட்டு வாய்யா”
“நான் என்ன பச்சக் குழந்தையா”
“ இல்லையா. எனக்கின்னும் குழந்தைதாம்பா நீ”
ஐம்பது வயது கிழவனான என்னை இன்னும் குழந்தையாகவே பார்க்கும் என் தொண்ணூறு வயது அம்மாயி.
நானன்று பேசப் போன ஆய்வரங்கத்தின் கோரிக்கைத் தீர்மானங்களாக தோழர் Varthini Parvatha முன்மொழிந்த ஒரு தீர்மானம் இப்படி கோருகிறது,
“இந்தியாவில் உள்ள 18 வயதிற்குட்பட்ட அனைவரும் குழந்தைகளென்ற வரையறையை, ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் உரிமைகள் மீதான பிரகடனத்தின் வழிகாட்டுதலின்படி நமது அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, வளரிளம் பருவக் குழந்தைகளுக்கு அடிப்படைச் சட்ட உரிமை அளிக்க வேண்டும்”
எவ்வளவு முரணான சமூகம் இது.
குழந்தகளை குழந்தைகள் என்றழைப்பதற்குக் கூட கோரிக்கை வைக்க வேண்டிய சூழலில்தான் நாமின்னும் இருக்கிறோம்.
உண்மைதான் தோழர்
ReplyDeleteமுரணானச் சமூகம்தான்
மிக்க நன்றிங்க தோழர்
Delete