Saturday, February 13, 2016

ரசனை 16

ஆறே ஆறு வார்த்தைகள். அவற்றில் எதுவும் புதிதில்லை. விஷயமும் ஏற்கனவே ஏராளமாய் பேசப் பட்டதுதான். ஆனாலும் தோழர் சம்பத் இளங்கோவன் அவர்களது எளிய வரிகள் என்னை சன்னமாய் விசும்ப வைத்தன.
ஏற்கனவே இதே மாதிரி ஒரு விஷயத்தை தம்பி ஜானகி ( நந்தன் ஸ்ரீதரன் ) தனது சிறுகதை ஒன்றில் பிழிந்து கொடுத்திருப்பான். இது மாதிரி ஒரு தோழியின் குடும்பத்தை யோக்கிய சிகாமணிகள் வீடு காலி செய்ய வைத்த கொடுமையை எழுதி ஈரம் காயாமல் எனக்கு அனுப்பிவைத்துவிட்டு உறங்கப் போவதாக சொல்லிவிட்டு போனான். அவன் தூங்கினானா இல்லையா தெரியாது நான் அன்று தூங்கவில்லை.
தோழர் சம்பத் இளங்கோவின் இந்தக் கவிதையும் நேற்றிரவு நெடுநேரம் என்னை தூங்க விடவில்லை. மனுஷன் எழுதுகிறார்,
”அவளுக்கு
இரவில் ஒருநாள்
உறங்கிப் பார்க்கும்
ஆசையிருந்தது!”
கொஞ்சம் செதுக்கினால் இன்னும் உசரம் போகும்.


No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...