1) உச்சநீதிமன்றம் வழிகாட்டியுள்ளது மாதிரி அரசுப் பணிகளில் மூன்று சதவிகித ஒதுக்கீடு கேட்கிறார்கள்.
இதில் பிழையேதுமில்லை என்பது மட்டுமல்ல சரி என்றும் படுகிறது.
2) நாற்பது விழுக்காட்டிற்கும் மேல் ஊனம் உள்ளவர்களுக்கு மற்ற சில மாநிலங்களில் உள்ளதுபோல் மாதம் ₹ 5000 உதவித்தொகை கேட்கிறார்கள்.
இதுவும் சரிதான்
இவற்றையும் இன்னபிற கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்தான்.
இவற்றை நிறைவேற்றுவதில் சிக்கலிருப்பின் அது குறித்து தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தையாவது நடத்தியிருக்க வேண்டும் குறைந்த பட்சம்.
அதை முறைப்படி செய்யாதது ஆணவமெனில் அவர்களை நடத்திய விதம் ஆணவத்தின் உச்சம்.
எற்கனவே நொந்து போயிருக்கும் அவர்களை அலட்சியப் படுத்துவது கண்டனத்திற்குரியது.
ஒரு மரணத்திற்குப் பிறகும் பதறாத அரசைக் கண்டிக்க வேண்டும்.
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்