Wednesday, February 10, 2016

அதிகாரிகள் அதிகாரிகள்தான்.



நிறுத்தமில்லாத சில இடங்களில் விசிலடித்து பேருந்தை நிறுத்த வைத்த நடத்துனர் தனது இருக்கையில் வந்தமர்ந்ததும் ஓட்டுனர்,
"ஏண்டா சிவக்குமாரு, நீ பாட்டுக்கு கண்ட இடத்துலையும் விசிலிருக்குன்னு ஊதிடுற. பி.எம் மைலேஜ் குறையுதுன்னு கத்தறார்"
"கண்டக்டர் கண்ட இடத்துலயும் ஊதறான்னு சொல்லிக்க"
"சொன்னேன்டா"
"அதுக்கு என்ன சொன்னார்?"
"அவன் அப்படித்தான் ஊதுவான். நீதான் கண்டுக்காம நகரனும். 6 கிலோ மீட்டருக்கு குறையக்கூடாதுங்கறார்
"அப்படியா சொன்னாரு அந்த ஆளு. ஏங்கிட்ட என்னடான்னா நீதான் எப்படியாவது அங்கங்க நிறுத்தவச்சு டிக்கட்ட ஏத்தனும். கிலோமீட்டருக்கு 36 ரூபாய்க்கு குறையக்கூடாதுங்கறார்"
அதிகாரிகள் அதிகாரிகள்தான்.

10 comments:

  1. பல இடங்களில் நிர்வாகிகள் இப்படிதான் இருக்கிறார்கள் .நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஏறத்தாழ எல்லா இடங்களிலும் ன்றே சொல்லலாம் தோழர்

      Delete
  2. காலம் மாறினாலும் இந்நிலையில் மாற்றமிருக்காது என்பதே உண்மை. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதாங்க அய்யா.
      நன்றியும் வணக்கமும்

      Delete
  3. சின்ன உரையாடலில் பெரிய அரசியலையே சொல்லிவிட்டீர்கள்.
    அருமை தோழரே!
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க செந்தில்

      Delete
  4. நீங்களே சொல்ட்டீங்க...

    //அதிகாரிகள் அதிகாரிகள்தான்.//

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete
  5. தங்களின் நூலான வலைக்காடு பற்றிய ஒரு பதிவினை
    எனது வலையில் பகிர்ந்துள்ளேன்
    காண வருமாறு தங்களை அன்போடு அழைக்கின்றேன் தோழர்
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழர்.
      பெரும்பாலும் உடனுக்குடன் வாசித்து விடுவேன் தோழர்.
      பின்னூட்டமிடத்தான் தாமதமாகிறது

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...