Monday, February 8, 2016

நல்லா இருக்கனும் அந்த மனுஷன்

அன்று காலை பேருந்தில் வந்து கொண்டிருந்தபோது பயணச் சீட்டையெல்லாம் விநியோகித்து முடிந்தபின் பின் படிக்கட்டில் வந்து நின்ற நடத்துனர் அலைபேசியில் யாரோடோ பேசத் தொடங்கினார்.
" படிக்கட்டுல நின்னு பேசாதப்பா. உள்ள போயி சேபா பேசுப்பா" என்றார் கடைசி இருக்கையில் என்னருகே அமர்ந்திருந்தவர்.
நடத்துனர் அதை கண்டு கொள்ளாமல் போகவே இப்படித்தான் பின் படிக்கட்டில் நின்று பேசிக் கொண்டு வந்த நடத்துனரான தன் தம்பி தவறி விழுந்து இரண்டு மாதங்களுக்கு முன்னால் இறந்து போனதாக சொல்லவே எதுவும் பேசாமல் உள்ளே நகர்ந்தார்.
" ஏண்டா நீதான் ஒத்த நாதாரியாச்சே. இல்லாத தம்பிய ஏண்டா அநாவசியமா கொல்ற?" என்ற தன் நண்பரிடம்,
"சின்னப் பயலா இருக்கான். உழுந்து செத்து கித்து போனானா? ஒரு உசுர காப்பாத்துறதுக்காக இல்லாத தம்பியையும் கொல்லலாம். அண்ணனையும் கொல்லலாம். தப்பே இல்ல." என்றார்.
நல்லா இருக்கனும் அந்த மனுஷன்.

4 comments:

  1. அம்மனிதர் நல்லா இருக்கட்டும் தோழர்

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமா நன்றாகவே இருப்பார் தோழர். மிக்க நன்றி

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...