தோழர்கள் Meena Somu, Geeta Ilangovan, மற்றும் தயாமலர்ஆகியோர் தினமும் அண்ணல் அம்பேத்கரின் கருத்துக்களை முகநூல் வழியாக எடுத்துச் சொல்வது என்று முடிவெடுத்து சிறப்பாக அமல்படுத்தத் தொடங்கியுள்ளனர். இன்னும் இதை யாரேனும் செய்கிறார்களா என்று தெரியவில்லை. இருப்பின் அவர்களையும் இவர்களோடே சேர்த்து நன்றியோடு பாராட்டிவிடுவோம்.
மிகச்சரியான நேரம், மிகச்சரியான ஊழியம்.
இந்த மூன்று தோழர்களையும் மரியாதையோடு கவனித்தே வருகிறேன். அவலங்களைச் சுட்டுவது என்பதே பெரிய விஷயம். அதற்கே ஒரு தைரியம் வேண்டும். அது கடந்து அவலங்களை சரி செய்ய முயற்சித்தலை இவர்கள் தொடங்கியிருக்கிறார்கள்.
ஒருமுறை முன்னாள் மத்திய அமைச்சர் மாண்பமை ராசா அவர்களின் சகோதரர் திரு கலியபெருமாள் அவர்களோடு ஒரு கூட்டத்தில் உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது. “நண்பர் ராசா போன்றவர்கள் இன்று தெருவிலே நடந்தால் ஆதிக்கத் திரள்கூட எழுந்து நிற்கிறது. மடித்துக் கட்டியுள்ள வேட்டியை அவிழ்த்து விடுகிறது. இது அம்பேத்கரால் கிடைத்த மரியாதை. அம்பேத்கர் காலத்தில் அவருக்கே கிடைக்காத மரியாதை” என்று அப்போது பேசினேன். கலியபெருமாள் அவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு சரியாய் சொன்னீர்கள் என்றார்.
இப்போது நமக்கு கிடைக்கும் மரியாதைக்கு அண்ணலின் பங்கு அளப்பரியது.
மீண்டும் அந்தத் தோழர்களுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில் அவர்கள் அடுத்த கட்டத்திற்கும் நகரவேண்டும் என்று விண்ணப்பிக்கின்றேன்.
வாய்ப்பு கிடைக்கும் போது ஒத்திசைந்த தோழர்கள் ஒன்று கூடுங்கள், உரையாடுங்கள், எண்ணிக்கையை அதிகப் படுத்துங்கள், துண்டறிக்கை போடுங்கள், நகருங்கள்.
நம்புகிறேன், உங்களால் முடியும்.
நாங்களுமிருக்கிறோம்.
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்