லேபில்

Sunday, February 28, 2016

நா. கோகிலன் என்ற அன்புஉரையாற்றி முடித்த அரைமணிநேரத்திற்குள் பேருந்து ஏறிவிடுவதுதான் வழக்கம். தங்கிப்போகச் சொல்லி சண்டை போட்டவர்கள் ஏராளம். தங்க வைப்பதில் யாரும் இதுவரை வெற்றி பெற்றதில்லை என்றே சொல்ல வேண்டும்.

ஆனால் நேற்று நானே "தங்கிதான் கிளம்ப முடியும். எனவே அறையை நீட்டிப்பா" என்று பரிதியிடம் கேட்டபோது அவனுக்கு ஆச்சரியம். 

காலையில் ஏலகிரிமலையில் அண்ணா கல்வியியல் கல்லூரி மாணவர்களோடும் மதியம் நாட்றாம்பள்ளி கலைமகள் கல்வியியல் கல்லூரி மாணவர்களோடும் உரையாடிவிட்டு திரும்பும்போதுதான் அறையை நீட்டிக்கச் சொல்லி பரிதியிடம் சொன்னேன். இருசக்கர வாகனத்திலேயே மலை ஏறி இறங்குவது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது.

என்னமோ தெரியவில்லை தங்கிப் போகவேண்டுமென்று தோன்றியது

இரவு உணவு முடித்துவிட்டு வெகுநேரம் கழித்து வீடு திரும்பி காலை வந்து பேருந்தில் ஏற்றிவிட்டு திரும்பிய பிள்ளை நா. கோகிலன்.

2 comments:

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023