Sunday, January 7, 2024

எங்கள் தாய் எந்த வண்ணத்தில் இருந்தால் உங்களுக்கு என்ன பழுப்பர்களே


 

இசை அமைப்பாளார் AR ரஹ்மானுக்கு இன்று பிறந்த நாள் என்பதால் வாழ்த்துகளோடு இதை மீண்டும் வைக்கிறேன்

*************************************************

எனக்கென்னவோ இசையமைப்பாளர் A.R.ரஹ்மான் மொழி அரசியலை நன்கு அறிந்தவராகவும்
சனாதனம், மொழி, மற்றும் ஜனநாயகத்தை தின்று செரிக்க சங் பரிவாரம் முயலும் ஒவ்வொருப் பொழுதும் மிகச் சரியாகவும் அச்சம் இன்றியும்
எதிர்வினையாற்றுபவராகவும் தெரிகிறார்
அமித்ஷா ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை கற்க வேண்டும் என்றும்
இந்தியாவின் ஒற்றைமொழியாக இந்தியை கொண்டுவர வேண்டும் என்றும்
ஆதிக்கக் குரலெடுத்ததும்
கீழ்க்காணும் படத்தை ரஹ்மான் தனது ட்விட்டரில் வைக்க
பற்றிக் கொண்டது
உடனே,
தமிழ்த்தாய் எவ்வளவு அழகானவள்
அவளை இவ்வளவு கருப்பாகவும் கொடூரமாகவும் வரைவது வக்கிரம் அல்லவா என்று கொதிக்கிறார்கள்?

இவ்வளாவு உக்கிரமாய் கொதிக்கிறார்களே, யார் இவர்கள் என்று பார்த்தால்

தமிழை நீஷ பாஷை என்பவர்கள் அவர்கள்
தமிழ் எம் தாய்,
அவள் கருப்பாய் இருந்தாலும்
கொடூரமாய் இருந்தாலும் எம் தாய்
கறுப்பு காக்கையை எங்களின் மூதாதையராகப் பார்ப்பவர்கள் நாங்கள்
காகத்தை ஊரின் தோட்டியாக பார்ப்பவர்கள் நீங்கள்
எங்கள் தாய் எந்த வண்ணத்தில் இருந்தால் உங்களுக்கு என்ன பழுப்பர்களே
இந்தியாவின் இணைப்பு மொழி தமிழ் என்கிறார் ரஹ்மான்
இது மொழி அரசியலில் புதுக் குரல்
அய்யோ அய்யோ
தமிழா, இணைப்பு மொழியா என்று கதறுகிறார்கள்
ஏன் கூடாது என்கிறேன்
அத்தோடு நிறுத்தவில்லை அவர்
கறுப்பாக இருப்பவர்களை தொகுப்பாளர்களாக,
நடிகர்களாக வாய்ப்பு கொடுங்கள்
நம் மக்களுக்கு நமது நிறம் பிடிக்கும் என்கிறார்
”திண்டேர் நள்ளி கானத் தண்டர்
பல்லாப் பயந்த நெய்யிற் றொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோ
றெழுகலத் தேந்தினுஞ் சிறிதென் றோழி
பெருந்தோ ணெகிழ்த்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே.”
என்கிறார் காக்கைப்பாடினியார்
காதலியைப் பிரிந்து நெடுநாள் கழித்து வருகிறான் காதலன்.

தான் வரும்வரை தன் காதலியை தன் காதலியை ஆற்றுப்படுத்திக் காத்தமைக்காக நன்றி சொல்கிறான்
தான் எதுவும் செய்யவில்லை என்றும்,
அவ்வப்போது கரைந்து நீ வரப்போவதாய் காக்கைதான் அவளை ஆற்றுப்படுத்தியது என்றும் தோழி சொல்கிறார்
காக்கையை “ஊரின் தோட்டி” என்று தீட்டாய்ப் பார்த்த இலக்கியங்களை நாங்கள் நிராகரிப்போம்
காக்கை கருப்பு,
கரைந்து எமது உறவினரின் வருகையைக் கூறி எம்மை ஆற்றுப்படுத்தும் எமது கரிய தோழர்
அதனால்தான்
விடியல் வரும் என்று கரைந்துகொண்டிருக்கும் எமது பத்திரிக்கைக்கு “காக்கை” என்று பெயர் வைத்தோம்
நன்றி ரஹ்மான்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...